பரபரப்பான தொழில்முனைவோரா நீங்கள்? உங்களுக்கான நேர நிர்வாக முறைகள் இதோ!
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் தொழில்முனைவோர்கள் தங்கள் முழு வர்த்தக திறனை பயன்படுத்திக்கொள்ள நேர நிர்வாகம் முக்கியம். செயல்கள் உங்களை திக்குமுக்காட வைக்க அனுமதிக்க வேண்டாம். உங்கள் செயல்திறனை மேம்படுத்தி அசாத்தியமான பலன்களை பெறும் உத்திகளை பின்பற்றவும்.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் தொழில்முனைவோர் என்ற வகையில் உங்கள் நேரம் மிகவும் விலைமதிப்புமிக்க வளங்களில் ஒன்றாகும். உற்பத்தி திறன் மேம்பாடு, இலக்குகளை அடைய மற்றும் ஆரோக்கியமான பணி வாழ்க்கை சமனை பெற நேரத்தை திறம்பட நிர்வகிப்பது முக்கியம்.
உங்கள் நேரத்தை திறம்பட நிர்வகிர்த்து, தொழில்முனைவு பயணத்தில் சிக்கல் இல்லாமல் முன்னேற யுவர்ஸ்டோரி வழிகாட்டுகிறது.
நேர நிர்வாகத்தின் முக்கியத்துவம்
நேர நிர்வாகம் என்பது, நீங்கள் செய்ய வேண்டிய செயல்களை பட்டியலிடுவதுடன் முடிந்து விடுவது அல்ல. உங்கள் நீண்ட கால இலக்குகளுடன் பொருந்தும் செயல்களுக்கு முன்னுரிமை அளித்தல், மன அழுத்தத்தை குறைக்கும் வழிகள், தகவல் சார்ந்த முடிவெடுத்தல் மற்றும் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்தல் ஆகியவற்றை இது உள்ளடக்கியிருக்கிறது.
இலக்குகள் வகுப்பது
உங்கள் முன்னுரிமைகளைக் கண்டறிந்து, இலக்குகளை தெளிவாக வகுத்துக்கொள்ளவும். நீண்ட கால மற்றும் குறுகிய கால நோக்கங்களை தீர்மானித்து அவற்றை நிறைவேற்றக்கூடிய சிறு செயல்களாக பிரித்துக்கொள்ளவும். இந்த செயல்முறை மூலம் உங்கள் நேரம், வளங்களை திறம்பட ஒதுக்கி, அவற்றை உங்கள் வர்த்த இலக்குகளுக்கு பொருத்தமாக அமைக்கலாம்.
குறுகிய கால இலக்குகள் உடனடி திசை காட்டும் நிலையில், நீண்ட கால இலக்குகள் தொழில்முனைவு பயணத்திற்கான பரந்த வழிகாட்டுதல் மற்றும் பாதையை வழங்குகிறது. இரண்டும் கலந்து செயல்படுவதன் மூலம், நீங்கள் நீண்ட கால இலக்கை மனதில் கொண்டு உடனடி இலக்குகளில் கவனம் செலுத்தலாம்.
உங்கள் இலக்குகளை எளிதாக நிறைவேற்றக்கூடிய சிறு செயல்களாக பிரித்துக்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் கவனத்தை மேம்படுத்தி எளிதாக முன்னேறலாம். திட்ட நிர்வாக சாதனங்கள் அல்லது செய் பட்டியலை இதற்காக பயன்படுத்தலாம்.
தனிப்பட்ட நேர நிர்வாக அமைப்பு
தனிப்பட்ட நேர நிர்வாகத்தை உருவாக்கிக் கொள்வது உங்கள் பணிகளை சீராக்கி, உற்பத்தி திறனை அதிகரிக்கிறது. உங்கள் பணி சூழல் மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ப நேர நிர்வாக அமைப்பை உருவாக்கி கொள்ளவும். முன்னுரிமைகள், அட்டவணை, நேரம் ஒதுக்கீடு ஆகியவை இதில் இருக்க வேண்டும்.
உடனடித்தன்மை, முக்கியத்துவம் அடிப்படையில் செயல்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். ஐஷன்ஹோவர் மேட்ரிக்ஸ் போன்ற உத்திகளை பயன்படுத்தவும்.
முக்கியம்- அவசரம், முக்கியம்- அவசரம் இல்லை, அவசரம் – முக்கியம் இல்லை, அவசரம் இல்லை- முக்கியம் இல்லை என நான்கு பிரிவுகளுக்கான கட்டங்களாக பிரித்துக்கொள்ளும் முறை இது. முக்கியம்- அவசரம் பிரிவில் வரும் பணிகளில் கவனம் செலுத்தி மற்றவற்றை ஒப்படைக்கலாம்.
பல்வேறு செயல்களுக்கு நேரம் ஒதுக்கும் அட்டவனையை தயாரிக்கவும். குறிப்பிட்ட செயல்களுக்கு என்று தனியே குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இந்த உத்தி கவனச்சிதறலை குறைத்து, உற்பத்தித் திறனை அதிகரிக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு செயலில் கவனம் செலுத்தலாம்.
நேரம் வீணாவதை தவிர்ப்பது
செயல்களுக்கு முன்னுரிமை அளிக்க, உற்பத்தித் திறனை பாதிக்கும் நடவடிக்கைகளை கண்டறிந்து அவற்றை தவிர்க்கவும்.
உங்கள் தினசரி செயல்பாடுகளை நன்றாக கவனித்து, வர்த்தகத்திற்கு அதிக மதிப்பு அளிக்காமல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்களை கண்டறியவும். இ-மெயில் பார்ப்பது, சமுக ஊடக பயன்பாடு, தேவையில்லாத கூட்டங்கள் இதில் வரலாம்.
நேரம் வீணாக்கும் செயல்களை தவிர்க்க அல்லது குறைப்பதற்கான உத்திகளை பின்பற்றவும். மெயில்களுக்கு பதில் அளிக்க குறிப்பிட்ட நேரம் ஒதுக்கவும். சமூக ஊடக பயன்பாட்டிற்கு உரிய செயலிகளை பயன்படுத்தவும். கூட்டங்களின் முக்கியத்துவத்தை சீர் தூக்கி பார்த்து பங்கேற்கவும். உங்கள் முன்னுரிமைக்கு பொருந்தாத செயல்களை மென்மையாக மறுக்கவும் அல்லது பிறரிடம் ஒப்படைக்கவும்.
ஒப்படைத்தல்
எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டிய அவசியம் இல்லை என உணருங்கள். ஒரு சில பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பது அல்லது அவுட்சோர்ஸ் செய்வது, உங்கள் பணிச்சுமையை குறைத்து இங்கள் திறமை தேவைப்படும் முக்கிய வேலைகளில் கவனம் செலுத்த உதவும். குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கக் கூடிய பணிகள் மற்றும் பிற வல்லுனர்களிடம் ஒப்படைக்க கூடிய செயல்களை அடையாளம் காணவும். நேரம் எடுக்கும் செயல்கள், மீண்டும் மீண்டும் நிகழும் செயல்கள் ஆகியவற்றை பரிசீலிக்கவும்.
பணிகளை ஒப்படைக்கும் போது, தெளிவான தகவல் தொடர்பும், எதிர்பார்ப்பும் முக்கியம்.
உங்களுக்கான சில குறிப்புகள்:
தெளிவான கட்டளைகள்: நோக்கம், தேவைகள், எதிர்பார்ப்புகளை தெளிவாக உணர்த்தவும். பொறுப்பேற்கும் தனிநபர்கள் தேவைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
சரியான நபர்கள் தேர்வு: செயல்களுக்கு தேவையான திறன்கள், தகுதிகள் கொண்ட நபர்களிடம் அவற்றை ஒப்படைக்கவும். அவர்கள் ஆற்றல், வல்லமை, பணிச்சுமை ஆகியவற்றை பரிசீலிக்கவும்.
கெடு: முன்னேற்றத்தைக் கண்காணித்து ஆலோசனை வழங்கவும். ஒவ்வொரு செயலுக்கும் நடைமுறையான கெடு விதித்து அவை குறித்த நேரத்தில் முடிக்கப்பட வழி செய்யவும்.
வளங்கள், ஆதரவு: செயல்கள் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு தேவையான வளங்கள், தகவல்கள், ஆதரவு அளிக்கவும். ஆலோசனை வழங்கி, கேள்விகளுக்கு பதில் சொல்லவும்.
நம்பிக்கை, அதிகாரமளித்தல்: செயல்திறனோடு பணிகள் செய்யப்பட குழு உறுப்பினர்கள் மீது நம்பிக்கை வைக்கவும். பொறுப்புகள் தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம் அளித்து தொழில்முறை வளர்ச்சியை சாத்தியமாக்கவும்.
தகவல் தொடர்பு, கூட்டு முயற்சி
செயல்திறன் மிக்க தகவல் தொடர்பு, கூட்டு முயற்சி வர்த்தக சூழலில் நேர நிர்வாகத்திற்கு மிகவும் அவசியம்.
உங்கள் குழுவுக்குள், தகவல் தொடர்பு, கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் வழிகள் இதோ:
தகவல் தொடர்பு சீராக்கம்: குழு தகவல் தொடர்பை சீராக்க, தகவல் தொடர்பு செயலிகள் அல்லது மேடைகளை பயன்படுத்தவும். நேர திட்ட மென்பொருள்கள், உடனடி செய்தி செயலிகள், வீடியோ சந்திப்பு சேவைகள், வேகமான தகவல் தொடர்புக்கு வழிவகுத்து, நீண்ட மெயில் தொடர்கள் அல்லது தேவையில்லாத கூட்டங்களை தவிர்க்க உதவும்.
கூட்டு முயற்சி சூழல்: குழு உறுப்பினர்கள், ஐடியாக்களை பகிர்ந்து, ஒன்றாக செயல்பட்டு, சீராக பணியாற்றும் சூழலை உருவாக்கவும். பணிகளுக்கு இடையிலான கூட்டு முயற்சியை ஊக்குவித்து, அறிவு பகிர்வுக்கான வழிகளை உருவாக்கவும். கூட்டு முடிவெடுக்கும் சூழலை ஏற்படுத்தவும். இது பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவி, செயல்திறனை மேம்படுத்தும்.
தொழில்நுட்ப பயன்பாடு
தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி திறன் சேவைகளை பயன்படுத்திக்கொள்வது தொழில்முனைவோரின் நேர நிர்வாகத்திற்கு உதவும். உங்கள் தேவைகளுக்கு ஏற்ற நேர நிர்வாக சேவைகளில் முதலீடு செய்யவும். இந்த சேவைகள், பணிகளை கண்காணிக்க, கெடுவை நிறைவேற்ற, குழுவுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட, உற்பத்தி திறன் சார்ந்த புரிதல் பெற்று முன்னேற உதவும். உங்கள் பணி ஓட்டத்தில் பொருந்தக்கூடிய சேவைகளை தேர்வு செய்யவும்.
மென்பொருளால் தானியங்கிமயமாக்கக் கூடிய பணிகளை கண்டறியவும். உங்கள் பணி ஓட்டத்தை மேம்படுத்தும் வாய்ப்புகளை அடையாளம் காணவும். தேவையற்ற தடைகளை நீக்கவும். உங்கள் செயல்முறையை ஆய்வு செய்து, மேம்பாட்டிற்கான வழிகளை கண்டறிந்து, நேரத்தை மிச்சமாக்கும் தானியங்கி தீர்வுகளை பயன்படுத்தவும்.
கவனம் குவித்தல்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், கவனச்சிதறல் உங்கள் செயல்திறனை பாதிக்கும். கவனச்சிதறலை குறைக்கும் பிரத்யேக பணியிடம் தேவை. உங்கள் பணியிடத்தை நன்றாக பராமரித்து, சீராக வைத்திருக்கவும். தேவையில்லாத காகிதங்கள், தனிப்பட்ட சாதனங்கள் போன்றவற்றை நீக்கவும். பின்னணி இறைச்சலை சமாளிக்க உரிய சாதனத்தை நாடவும்.
கவனம், உற்பத்தித் திறனை மேம்படுத்தும் நிர்வாக உத்திகளை பயன்படுத்தவும்.
போமோடோரோ உத்தி, சிறிய இடைவேளை எடுத்து செயல்களை முடிக்க ஊக்குவிக்கிறது. இதன் மூலம் கவனத்தை குவித்து களைப்பை தவிர்க்கலாம். உங்கள் பணி முறைக்கு ஏற்ற உத்தியை கண்டறிந்து செயல்படுத்தவும்.
பணி வாழ்க்கை சமன்
உங்கள் உடலநலனில் அக்கறை கொள்வது தொழில்முனைவோராக உங்கள் பயணத்தில் உதவும். தனிப்பட்ட நலனில் கவனம் செலுத்துவது, பணி வாழ்க்கை சமன், நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும். பணி மற்றும் தனி வாழ்க்கைக்கு இடையே தெளிவான எல்லைகள் தேவை.
குறிப்பிட்ட பணி நேரத்தை வகுத்து, இந்த நேரம் தவிர்த்து கூடுதலாக அதிக வேலை செய்வதை தவிர்க்கவும். உங்கள் நேரம் தொடர்பாக வாடிக்கையாளர்கள், உறுப்பினர்கள், சகாக்களுக்கு தெளிவாக உணர்த்தவும். உங்களுக்கு மகிழ்ச்சி அளித்து மன அழுத்தம் போக்கும் செயல்களுக்கு நேரம் ஒதுக்கவும்.
ஆரோக்கியமான மனநிலையை பெறுவதற்கு தனிப்பட்ட நலன் சார்ந்த நடவடிக்கைகளை தினசரி அட்டவனையில் கொண்டு வரவும். உங்கள் ஆற்றலை மேம்படுத்த உடற்பயிற்சி செய்யவும். தியானம் போன்ற மன அமைதிக்கான செயல்களில் ஈடுபடவும். உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் பொழுதுபோக்கில் ஈடுபடவும். மேலும். உங்கள் உறவுகளை மேம்படுத்தி நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடவும்.
செயல்கள் தாமதம்
செயல்களை தள்ளிப்போடும் பழக்கம் உற்பத்தி திறனை பாதித்து, முன்னேற்றத்தை தடுக்கும். செயல்களை தள்ளிப்போடுவது ஏன் என யோசிக்கவும். தோல்வி அச்சம், ஊக்கமின்மை, மிகை பணி இதற்கான காரணமாக இருக்கலாம். மூலக்காரணத்தை கண்டறிந்து அவற்றை சீராக்க தேவையான உத்திகளை கையாளவும்.
பணிகளை சிறிய செயல்களாக பிரித்துக்கொண்டு எளிதாக மேற்கொள்ளலாம். உடனடித்தன்மையை உண்டாக்க ஒவ்வொரு துணை செயல்களுக்கும் கெடு வகுத்துக் கொள்ளவும். செயல்திறன் செயலிகள் அல்லது டைமர்களை பயன்படுத்தவும். ஐந்து நிமிட உத்தியை கையாண்டு, ஒரு செயலில் ஐந்து நிமிடங்கள் கவனம் செலுத்தவும். ஆரம்ப தயக்கங்களை சமாளித்துவிட்டால் எளிதாக முன்னேறலாம்.
நேர நிர்வாகம் ஆய்வு
நேரம் நிர்வாகம் என்பது தொடர் செயல்பாடாகும். எனவே, தொடர் கண்காணிப்பு, அலசல் தேவை. உங்கள் நேர நிர்வாக திட்டத்தை அடிக்கடி ஆய்வு செய்து, செயல்திறனுக்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்ளவும்.
நேர நிர்வாக திட்டத்தை ஆய்வு செய்ய அடிக்கடி நேரம் ஒதுக்கவும். நன்றாக செயல்படும் உத்திகளை கண்டறிந்து, மேம்படுத்த வேண்டியவற்றை அறியவும். சகாக்கள், வழிகாட்டிகள், பயிற்சியாளர்களிடம் இருந்து கருத்து கேட்கவும். உங்கள் செயல்முறை குறித்து மாறுபட்ட பார்வைகளை பெற இது உதவும்.
உங்கள் ஆய்வுக்கு ஏற்ப மாற்றங்களை மேற்கொள்ளவும். புதிய உத்திகள் மற்றும் சேவைகளை பரிசீலித்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்யவும். வளர்ச்சி மனநிலையை கொண்டு, உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு வழி வகுக்கும் புதிய வழிகளுக்கான திறந்த அணுகுமுறை கொண்டிருக்கவும்.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan