Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

உங்கள் நிறுவனத்தில் விசுவாசமிக்க, உத்வேகத்துடன் செயல்படக்கூடிய ஊழியர்களை உருவாக்க சில வழிகள்!

நிறுவனங்களில், வெறும் மாதச் சம்பளத்திற்கு மட்டுமே பணிபுரிந்து வரும் சாதாரண ஊழியர்களாக இல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு செயல்படும் ஊழியர்களாகவும் மற்றும் Remote ஊழியர்களை Power of Moments மூலம் எப்படி Engaging ஆக வைத்துக் கொள்ள முடியும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

உங்கள் நிறுவனத்தில் விசுவாசமிக்க, உத்வேகத்துடன் செயல்படக்கூடிய
ஊழியர்களை உருவாக்க சில வழிகள்!

Wednesday June 16, 2021 , 6 min Read

ஒரு நிறுவனத்தின் ஆகச் சிறந்த சொத்து அந்நிறுவனத்தின் ஊழியர்களே, அப்படிப்பட்ட ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொரு நிறுவனமும் Employee Engagement -ல் அதீத கவனம் செலுத்துவது உண்டு. இந்த Engagement Activities -ல் ஊழியர்களை முழு மனதோடு ஈடுபடுத்துதல் சற்று கடினமானது என்றாலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு இது சிறந்த வழியாகும்.


அதிலும் Remote Work Culture கொண்டுள்ள இந்த Covid 19 தொற்று காலத்தில், ஊழியர்களை சந்தோஷ உணர்வுடனும், அவர்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதில் மேலாளர்களுக்கு (HR) சற்று சவால் தரக்கூடிய ஒன்றேயாகும்.


பல கார்ப்பரேட் நிறுவனங்கள் Team building Activities, Sport Events, Parties, Training, Recognition Program, Incentives, Fun Games, Gifts, மற்றும் Trip போன்ற பல engagement நிகழ்வுகள் நடத்திய போதிலும் ஊழியர்களின் Absenteeism மற்றும் Attrition Count-ம் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.

Employee Engagement

மறுபக்கம், ஒரு நாளும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்காது, கிட்டத்தட்ட 30, 40 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் கடும் உழைப்பாளிகள் அடங்கிய உள்ளூர் நிறுவனங்களும் இருக்கிறது.


அந்நிறுவனம் அவருக்கு எந்த வித Employee Engagement நிகழ்ச்சியும் நடந்திருக்காது. Fun, Entertainment -க்கு என தனியே எவ்வித நேரமும் ஒதுக்கி இருக்காது. இன்னும் கூற வேண்டுமென்றால் நிறுவனத்தின் கடினச் சூழலில் சரியான சம்பள உயர்வும் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். அந்நிலையிலும் அந்த ஊழியர்,

"எனக்கென்ன கஷ்டம் அப்படியே கஷ்டம் வந்தாலும் என் முதலாளி பார்த்துக் கொள்வார் என்று அனைவரும் நெகிழ்ந்து போகும் அளவிற்கு அவரது முதலாளி மீதும் அந்நிறுவனத்தின் மீதும் கொண்டுள்ள அப்பழுக்கற்ற அன்பும், உரிமையும் வெளிப்படுவதை பார்க்க முடியும்.

விசுவாசமிக்க ஊழியர்களை உருவாக்க பல நிறுவனங்கள் பல மடங்கு பணத்தையும், நேரத்தையும் செலவழித்து வரும் நிலையில், குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எந்தவொரு Employee Engagement Strategy-ம் பின்பற்றாத போதிலும், அயராது உழைத்து நானும் வளர்ந்து என் நிறுவனத்தையும் முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வேன் என்கிற விசுவாச உணர்வு ஊழியர்களிடத்தில் தோன்றுவதற்குக் காரணம் என்னவென்றால்,

பேச்சிற்கு மட்டும் அல்லாது உண்மையிலேயே மனதார தனது ஊழியர்களை தனது குடும்பத்தில் ஒருவராகக் காண்பதும், எந்தவொரு எதிர்பார்ப்புமின்றி உதவும் மனப்பான்மையே ஆகும்.

Start-up அல்லது Small Team கொண்டுள்ள நிறுவனத்தில் விசுவாசமிக்க ஊழியர்களை உருவாக்குவது சற்று எளிதே.


நிறுவனங்களில், வெறும் மாதச் சம்பளத்திற்கு மட்டுமே பணிபுரிந்து வரும் சாதாரண ஊழியர்களாக இல்லாமல், நிறுவனத்தின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டு உத்வேகத்துடன் செயல்படக்கூடிய ஊழியர்களாகவும் மற்றும் Remote ஊழியர்களை Power of Moments மூலம் எப்படி Engaging ஆக வைத்துக் கொள்ள முடியும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் காண்போம்.

1.PILOT STUDY :

Employee Engagement என்ற சக்கரத்தைச் சுழற்ற தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு ஊழியர்களையும் PILOT Study (பைலட் ஸ்டடி) செய்திருக்க வேண்டும்.


ECG SHEET:


ECG என்றால் - Experience | Contribution | Growth.


ஊழியர்கள் எவ்வித Personality & Attitude-யை கொண்டவர், எவ்வித கலாசாரத்தை பின்பற்றுபவர், அவர்களின் விருப்பு, வெறுப்பு, எண்ணம், சவால்கள் என அனைத்துத் தகவலையும் கொண்டிருக்கக்கூடிய ஒரு DATA SHEET ஆகும்.

ECG Sheet

Experience - ஊழியர்கள் தங்களது வாழ்வில் என்னென்ன ஆசைகள் மற்றும் எந்தெந்த அனுபவத்தையெல்லாம் பெற எண்ணுக்கிறார்கள் என்பதை இந்த Column - ல் நிரப்ப வேண்டும். (Ex: ஒரே ஒரு முறையாவது Space-க்கு செல்ல வேண்டும் என்று ஆசை, எனது வாழ்நாளில் குறைந்தது 5 புத்தகங்களை எழுதிருப்பேன், etc… )


Contribution - தங்களது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், இச்சமுகத்திற்கும், இந் நாட்டிற்கும் எவ்வகையில் நன்றிக் கடனை திருப்பி செலுத்துவீர்கள் என்பதை இந்த Column - ல் நிரப்ப வேண்டும். (Ex: ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்வேன், NGO தொடங்குவேன், Organ Donate பண்ணுவேன், etc…)


Growth - தங்களது வாழ்வில் எந்தெந்த கலைகளைக் கற்க விரும்புகிறீர்கள் என்பதை இந்த Column- ல் நிரப்ப வேண்டும். (Ex: Public Speaking, Marketing, Photography இக்கலைகளில் சிறந்தவனாக விளங்க எண்ணுகிறேன், etc)

சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் ECG Sheet மூலம் தங்கள் ஊழியர்களின் Pulse - ஐ அறிய முடியும்.

IKIGAI :

IKIGAI என்கிற Japanese Technique மூலம் ஒருவரின் Purpose of Life-யை கண்டறிய முடியும்.


  1. நீங்கள் எதை விரும்புகிறீர்கள்?
  2. நீங்கள் எந்தத் துறையில் வல்லமை மிக்கவர்?
  3. நீங்கள் விரும்பும் துறையின் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான பணம் சம்பாதிக்க முடியுமா?
  4. நீங்கள் விரும்பி பணியாற்றும் செயல் இந்த உலகிற்குத் தேவையான ஒன்றா?


மேற்கண்ட வினாக்களுக்கு விடை காணும் போது ஒருவரின் வாழ்க்கையின் அர்த்தத்தை அறிய முடிகிறது.

IKIGAI

IKIGAI Tamil Explanation Video Link : https://youtu.be/RclNgTqsdxs


ECG Sheet, IKIGAI இதில் பெற்ற தகவலின் மூலம் உங்கள் ஊழியரின் personality-யை ஓரளவு அறிய முடியும். இந்த Research-க்கு பிறகே, நாம் எவ்வித Employee Engagement Strategy-யை பயன்படுத்த போகிறோம் என்பதை பற்றி திட்டமிட வேண்டும்.

2. 1% Better Everyday:

ஒரு தரவின் படி, உலகளவில் 85% ஊழியர்கள் அவர்களின் பணியில் ஈடுபாடின்றி வேலை செய்கிறார்கள். இதற்குக் காரணம் வேலையின் மீது கொண்டுள்ள பற்றற்ற தன்மையும், பணியை நேர்த்தியாக செய்தவதால் எனக்கு என்ன கூடுதலாக கிடைத்து விட போகிறது என்றொரு குறுகிய மனப்பான்மையே காரணம் ஆகும்.


இதனை 1% Better Every Day என்ற விதி படி ஊழியர்கள் தங்களது பணியில் செய்யும் தவறை சிறு சிறு Task ஆகக் கொடுத்து, அதை தனது வாழ்வில் HABIT ஆக மாற்றுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.


உதாரணமாக ஒரு புகழ்மிக்க ஹோட்டலில் பணிபுரியும் Server, வரும் Customer’களை சிடு சிடு வென்று பேசி Order- ஐ கேட்டால் உணவு நன்றாக இருந்தாலும் அவர் கொடுத்த அந்த BAD Experience அடுத்த முறை வருவதற்கு தயக்கம் காட்டுவர்.


இந்த சிடு சிடு பேச்சு அவரது சுபாவமாக கூட இருக்கலாம், இருந்தாலும் Customer இடத்தில் ஹோட்டலின் மதிப்பு குறைகிறது. அதே போன்று 10 வருடமாக பணிபுரிந்து வருபவர் இதை காரணம் காட்டி அவரை வேலையை விட்டு வெளியே அனுப்பவும் முடியாது.


இந்த சூழ்நிலையில் 1% Better Every Day என்ற விதி படி, இனி Customer வரவேற்கும் முன்பு சிரித்த முகத்துடன் பேசி Order ஐ பெற வேண்டும் என்பதை ஒரு Task ஆகக் கொடுத்து இதனை நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்யச் சொல்லவும்.

Habits

ஆனால் இதை நான் செய்வதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும் என்று எண்ணுவது மனிதனின் இயல்பு. எனவே நாம் கொடுக்கும் Task-யை சரியாகவும், தொடர்ச்சியாகவும் செய்தால் நாம் அவருக்கு Bonus Points கொடுத்து அதனைக் கொண்டு அவருக்கோ அல்லது அவரது குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.


உதாரணமாக ஒரு Points க்கு 10 ரூபாய் வீதம் 3 மாத காலத்தில் அவர் 950 Points சேர்த்துள்ளார் என்றால் ₹9500 மதிப்பு மிக்க எந்தவொரு பொருளையும் அவர் வாங்கிக் கொள்ளலாம். (Ex: Washing Machine, Books, Online Courses, etc...)

இவ்வாறு அவரது பணியில் செய்யும் தவறை சிறு சிறு Task ஆகக் கொடுத்து நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும் செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அதுவே HABIT-ஆக மாறி அவரது பணியில் மட்டுமல்லாது வாழ்விலும் சிரிப்பு மலர்ந்த முகத்துடன் நகைச்சுவை உணர்வு மிக்க நபராக மேம்பட்டு இருப்பார்.


இவ்வாறு நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களின் Habit ஐ மாற்றுவதன் மூலம் ஊழியர்களின் Personal Life மேம்படுவதோடு,ஒரு ஆரோக்கியமான Work Culture மற்றும் விசுவாசமிக்க ஊழியர்களையும் உருவாக்க முடியும்.

3. Power of Moments :

வாழ்வில் ஒரு சில அனுபவங்கள் மட்டும் ஏன் அசாதாரண தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?


எந்தவொரு எதிர்பார்ப்பும் இன்றி தூய எண்ணத்தோடு செய்யக் கூடிய ஒவ்வொரு செயலும் வாழ்வின் தலைசிறந்த நிமிடங்களாக அமையும். இதையே "Power of Moments" என்பர்.


"Power of moments" என்ற விதிப்படி நம் ஊழியர்களுக்கு வாழ்வின் தலைசிறந்த நிமிடங்களை கொடுக்க முற்பட வேண்டும்.

employees

Example 1: B'day Celebration :-)


பொதுவாக ஊழியர்களின் பிறந்த நாள் அன்று அலுவலகத்தில் Cake வெட்டி Celebrate பண்ணுவது வழக்கம். ஆனால் Remote Work Culture கொண்டுள்ள இந்த Covid 19 தொற்று காலத்தில், அவை சாத்தியமற்றது, அப்படிப்பட்ட இந்த சவாலான சூழ்நிலையிலும் தன்னுடைய ஊழியரை மகிழ்விக்க Cake ஐ வீட்டிற்கே அனுப்பி (followed by Lockdown Restrictions) Surprise கொடுக்க எடுக்கப்படும் மெனக்கெடல் தான் Power of Moments.

B'Day Celebration

Example 2: Letter From CEO :-)


கொரனா தொற்றால் இவ்வுலகமே ஸ்தம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், ஒரு CEO ஆக, தன் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் நலனை பற்றியும், அவர்களின் Financial Situation பற்றியும் உறுதி செய்தல் மிக முக்கியக் கடமையாகும். இவ்வுயர்ந்த செயலை மின்னஞ்சல் மூலம் அனுப்புவதை காட்டிலும் தனது கைப்பட எழுதி ஊழியர்களுக்கு அனுப்பும் கடிதத்திற்கு ஆற்றல் அதிகம் அதுவே "Power of Moments".

Letter From CEO

Example 3: On time Salary :-)


சவாலான இச்சூழலிலும் அயராது உழைக்கும் ஊழியர்களின் மாதச் சம்பளத்தை, பத்து நாள் கழித்து பெறும் ஊழியரின் மனநிலையும் , மாதத்தின் முதல் நாள் அதுவும் காலையிலேயே "Your Salary Credited" என்ற Notification ஐ பார்த்து நாளை தொடங்கும் ஊழியரின் மனநிலையும் வேறு.

Salary Credited

இந்த சிறு சிறு செயல்கள் ஊழியர்களின் Attitude -களில் வியக்கத்தக்க நேர்மறையான மாற்றங்கள் ஏற்படுவதை நாம் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி நிறுவனத்தின் மீது கொண்டிருந்த எண்ணத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.


Example 4 : Be Good Guru :-)


ஒரு சிறந்த மனிதவள மேம்பாட்டுத் துறை மேலாளர் (HR), தனது நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியரின் அடுத்த நகர்வு சரியானதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.


உதாரணமாக ஒரு ஊழியர் தனது பணி பிடிக்காத காரணத்தினால், குழுவிற்கு Value add பண்ண முடியாது, Unproductive ஆக இருப்பதை உணர்ந்து, Resignation Apply செய்கிறார்.


அதே சமயம் அந்த ஊழியருக்கு, அடுத்து என்ன செய்வதறியாது எந்தவொரு திட்டமும் இல்லாமல் இருந்தால், அந்த ஊழியருக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர் விரும்பும் துறையில் ஒரு வாய்ப்பைக் கொடுத்து வழிகாட்டுவதும் அவசியம்.

Be Good Guru

ஒரு ஊழியர், நம் நிறுவனத்தில் பணிபுரிந்த காலம் மட்டுமல்லாது, வெளியே செல்லும் போதும் நல்ல அனுபவத்தை கொடுக்க வேண்டும். இது அந்நிறுவனத்தின் Brand Equity-க்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி புதிதாய் வரும் ஊழியர்களுக்கு, நிறுவனத்தின் மீது அளவற்ற நம்பிக்கையும், மரியாதையையும் பிறக்கும்.


4.Final Words :


"Employees First, Customers Second" என்கிற கோட்பாட்டின்படி செயல்படும் நிறுவனங்கள் தொழிலில் மட்டுமல்லாது மக்களின் மனதிலும் தலைசிறந்து விளங்குகிறது. Ex: Google, Zoho, Tata, Infosys, etc…


எனவே சரியான Employee Engagement Strategy கொண்டு திட்டமிடுதல் மூலம் Employee Productivity, Retention, Profit போன்றவற்றை மேம்படுத்துவதுடன், ஒரு நல்ல நிறுவனமாக சமூகத்தில் தலைசிறந்து விளங்கவும் முடியும்.