Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

டிரக் டிரைவர் மகன் உருவாக்கிய 30 கோடி டர்ன்ஓவர் செய்யும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்!

மும்பையைச்சேர்ந்த டிரக்பேஜோ நிறுவனம் 37 வாடிக்கையாளர் நிறுவனங்களுடன், 3,000 க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் வெற்றிநடை போடுகிறது

டிரக் டிரைவர் மகன் உருவாக்கிய 30 கோடி டர்ன்ஓவர் செய்யும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்!

Monday August 30, 2021 , 3 min Read

நிலேஷ் குலேவின் தந்தை ஒரு டிரக் டிரைவர். போதுமான வருமானம் இல்லாததால் தனது பெற்றோர்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்தனர் என்கிறார் நிலேஷ். மேலும், டிரக் டிரைவர்கள் தொடர்பான சமூக ஒவ்வாமையும் நிலைமையை மோசமாக்கியது. எனவே நிலேஷ், லாஜிஸ்டிக்ஸ் துறையில் மட்டும் ஈடுபடக்கூடாது எனத் தீர்மானித்தார். ஆனால், அதையும் மீறி அவருக்கான பாதை இதே துறையில் தான் அமைந்தது.


பள்ளிப் படிப்பை முடித்ததும் அவர் ஐஐஎம் பெங்களூருவில் சேர்ந்து படித்தார். பின்னர் இன்போசிஸ், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றினார். அப்போது தான், லாஜிஸ்டிக்ஸ் மற்றும் தொழில்நுட்பம் இணைந்த துறையில் வர்த்தக வாய்ப்புகள் அதிகம் இருப்பதை உணர்ந்தார்.

“அனைத்து விதமான இன்னல்களையும் பார்த்திருந்தால், லாஜிஸ்டிக்ஸ் துறையில் நுழைய விரும்பவில்லை. ஆனால் நாடு முழுவதும் வீசத்துவங்கிய டிஜிட்டல் அலை என்னை யோசிக்க வைத்தது,” என்கிறார் நிலேஷ்.

2016ல், நிலேஷ் தன்னுடைய ஐஐஎம் சக மாணவர் சுப்ரீத் பெரிஸ்டாலாவுடன் இணைந்து ’டிரக்பேஜோ’ (TruckBhejo) நிறுவனத்தை துவக்கினார்.


நிறுவனம், நுகர்வோர் துறை, ரீடைல் மற்றும் உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், வாகன சேவையை வழங்குகிறது. இதுவரை ஒரு மில்லியன் டெலிவரியை நிறுவனம் பூர்த்தி செய்திருப்பதாக தெரிவிக்கிறது.


ஃபிளிப்கார்ட், அமேசான், நெஸ்லே, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட நிறுவனங்களை டிரக்பேஜோ வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது.

எப்படி செயல்படுகிறது?

லாஜிஸ்டிக்ஸ் துறையில் நுழைவதற்கு முன் நிலேஷ், தொழில்நுட்பம் சார்ந்த லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை துவக்க விரும்பினார்.


எந்த ஒரு திட்டத்திலும் வாடிக்கையாளர், டிரைவர் மற்றும் செயல்பாட்டு மேலாளர் ஆகிய மூன்று தரப்பினரையும், தொழில்நுட்பம் மூலம் இணைக்கும் பணியை TruckBhejo செய்கிறது.

நிறுவனம் உருவாக்கியுள்ள செயலிகள் சரக்குகளை துவக்கம் முதல் இருப்பிடம் வரை டிராக் செய்கிறது. மேலும், மூன்று அம்சங்கள் மூலம் டிரக் டிரைவர்களின் இருப்பிடத்தையும் டிராக் செய்கிறது.

“இந்த செயலி நோட்டிபிகேஷனை உருவாக்குகிறது. உதாரணமாக, டிரக் டிரைவர் ஒரே இடத்தில் மூன்று மணி நேரமாக இருக்க நேர்ந்தால், இது தொடர்பான நோட்டிபிகேஷனை அளித்து செயல்பாட்டு மேலாளர் தீர்வைக் காண வழி செய்கிறது,” என்கிறார் நிலேஷ.

திட்டமிடல்

செயல்பாடுகளின் வெற்றிக்கு திட்டமிடல் முக்கியம் என்கிறார் நிலேஷ். ஒழுங்கு மற்றும் ஒழுங்கின்மையை லாஜிஸ்டிக்சே தீர்மானிக்கிறது என்கிறார்.


துவக்கம் முதல் எல்லாமே திட்டமிடப்படுவதால் டிரக்பேஜோ சேவை செயல்பாடுகளை சீராக்குகிறது. வாகனங்களை தொகுப்பில் ஒதுக்குவதை தானே தீர்மானிப்பதாகவும் கூறுகிறார்.

டிரக்

அடுத்த கட்டமாக டிஸ்பேச் திட்டம் வாடிக்கையாளர்களுடன் பகிரப்படுகிறது. இறுதியாக எந்த தொகுப்பில் எந்த வாகனம் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்படுகிறது.

ஃபிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் டிரக்பேஜோவுடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுகிறது. சிறு தொழில் நிறுவனங்களுக்கும் சேவை அளிக்கிறது.


நிறுவனம் 37 வாடிக்கையாளர் நிறுவனங்களையும், 3,000க்கும் மேற்பட்ட டிரக்களை கொண்டிருப்பதாகவும் நிலேஷ் கூறுகிறார்.

சந்தை வாய்ப்பு

கோவிட்-19க்கு பிறகு, சப்ளை சைன் சந்தை 2026ல் 41.7 பில்லியன் டாலராக வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. ரிவாகோ, பிளாக்பக், ஷேடோபாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் போட்டியில் உள்ளன.


டிரக்பேஜோ நிறுவனம் 500 கி முதல் 25 டன் எடை கொண்ட ஆர்டர்களை ஏற்றுக்கொள்கிறது. ஆண்டு ஒப்பந்தங்கள் மூலம் வருவாய் ஈட்டுகிறது.

“சரக்கு சேவையை நிறைவேற்றத் தேவையான வழித்தடம் மற்றும் வாகனத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கிறோம்,” என்கிறார்.

இ-காமர்ஸ் நிறுவனங்கள் நாடும் டெலிவரி சேவைக்கு, மொத்த டெலிவரிக்கும் சேர்த்து பாக்கெட் அடிப்படையில் கட்டணம் பெறுகிறது.


நிறுவனம் 13 முதல் 14 சதவீத கமிஷன் பெறும் நிலையில் எஞ்சிய தொகை டிரைவர்களுக்கு செல்கிறது. பணப் பரிவர்த்தனையும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் 2017ல் ரூ.1.6 கோடி சமபங்கு முதலீடு மற்றும் ரூ.3.75 கோடி கடன் நிதி திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு நிறுவனம் ரூ.27 கோடி விற்றுமுதல் ஈட்டிய நிலையில், இந்த ஆண்டு ரூ.30 கோடியை கடந்துள்ளது.

எதிர்காலத் திட்டம்

எதிர்காலத்தில் முன்னணி பிராண்டாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என நிறுவனம் விரும்புகிறது. டிரக் டிரைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால், இத்துறையும் மேம்பட்டிருப்பதாக நிலேஷ் கூறுகிறார்.

“டிரக் டிரைவர்கள் பைலட்கள் அல்லது பார்ட்னர்கள் என அழைக்கப்படுவதை பார்க்கிறோம். இது மாற்றத்தின் அடையாளம்,” என்கிறார்.

கோவிட்-19 பாதிப்பினால் லாஜிஸ்டிக்ஸ் துறை தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தன. நுகர்வோர் துறை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கை கொடுத்ததாக நிலேஷ் கூறுகிறார்.


வரும் ஆண்டுகளில் இந்தியாவின் 150-200 நகரங்களில் செயல்பாட்டை விரிவாக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவிலும் விரிவாக்கம் செய்து வருகிறது.

“சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் நாட்டின் அடுத்த வளர்ச்சி கதையாக இருக்கும். நாங்களும் அதில் அங்கம் வகிக்க விரும்புகிறோம்,” என்கிறார் நிலேஷ்.

ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கவுசல் | தமிழில்: சைபர் சிம்மன்