Avengers தீமில் டிவிஎஸ் ஸ்கூட்டர்: ஸ்பைடர் மேன், தோர் மாடல்கள் அறிமுகம்!
அயர்ன் மேன், பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா தீமில் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்நிறுவனம் தற்போது ஸ்பைடர் மேன் மற்றும் தோர் தீமை அடிப்படையாக கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அயர்ன் மேன், பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா தீமில் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்நிறுவனம் தற்போது ஸ்பைடர் மேன் மற்றும் தோர் தீமை அடிப்படையாகக் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய ரசிகர்களிடையே எப்போதுமே சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஹாலிவுட் படங்களுக்கு தனி மதிப்பு உண்டு. அதிலும் மார்வெல்ஸின் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
குறிப்பாக மார்வெல்ஸின் சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து போராடும் ‘அவெஞ்சர்ஸ்’ படங்கள் வெளியாகிறது என்றாலே இந்திய ரசிகர்கள் தனி குஷியுடன் தியேட்டர்களுக்கு கிளம்பிவிடுகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பத்தி சொல்லவே தேவையில்லை.
இதற்குச் சரியான உதாரணம் என்றால் அவெஞ்சர்ஸ் படங்கள் இந்தியாவில் படைத்த வசூல் சாதனைகளை கூறலாம். கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படம் கிட்டதட்ட 8,500 கோடி வசூலித்து இமாலய சாதனை படைத்து. தற்போது வெளியாகியுள்ள ‘ஸ்பைடர் மேன் : நோ வே ஹோம்’ திரைப்படம் அவெஞ்சர்ஸ் பட வசூல்களையே பின்னுக்குத்தள்ளும் அளவுக்கு கோடிகளை குவித்து வருகிறது.
சூப்பர் ஹீரோ தீமை கையில் எடுத்த டிவிஎஸ் நிறுவனம்:
இப்படி வெறித்தனமான அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ ரசிகர்கள் அதிகமாக இருப்பதால், அதனை தன்னுடைய பிசினஸ் யுக்தியாக டிவிஎஸ் நிறுவனம் மாற்றியது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சூப்பர் ஹீரோக்களின் தீமில் டிவிஎஸ் நிறுவனம் NTorq 125 SuperSquad Edition என்ற பெயரில் 125cc ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியது. புதிய Super Squad பதிப்புகளை டிவிஎஸ் நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோவுடன் இணைந்து வடிவமைத்தது.
மார்வெல் நிறுவனத்தில் பிரபல சூப்பர் ஹீரோக்களான அயர்ன் மேன், பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா ஆகியோரது தீம்களை குறிக்கும் வகையில் இன்விசிபிள் ரெட், ஸ்டெல்த் பிளாக்,காம்பாட் ப்ளூ ஆகிய கலர்களில் ஸ்பெஷல் கிராபிக்ஸ் வேலைப்பாடுகளுடன் புதிய ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அத்துடன் அயர்ன் மேன், பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா ஆகிய கதாபாத்திரங்கள் மார்வெல் காமிக்ஸில் வெளியான ஆண்டை குறிக்கும் வகையில் ஸ்பெஷல் ஸ்டிக்கர்களும் இடம் பெற்றிருந்தன.
ஸ்பைடர் மேன், தோர் தீமில் புதிய ஸ்கூட்டர் அறிமுகம்:
அயர்ன் மேன், பிளாக் பாந்தர், கேப்டன் அமெரிக்கா தீமில் உருவாக்கப்பட்ட டிவிஎஸ் ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, அந்நிறுவனம் தற்போது ஸ்பைடர் மேன் மற்றும் தோர் தீமை அடிப்படையாக கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
TVS மோட்டார், TVS NTORQ 125 Super Squad பதிப்பின் கீழ் இணைக்கப்பட்டுள்ள ஸ்பைடர் மேன் மற்றும் தோர் ஸ்கூட்டர்கள் அந்த சூப்பர் ஹீரோக்களின் குணநலன் மற்றும் பவரை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஸ்பைடர் மேன் தீமில் சிவப்பு மற்றும் புளூ ஆகிய வண்ணங்களை இணைத்து ‘அமேஸிங் ரெட்’ என்ற பெயரிலும், தோர் தீமிற்கு பிளாக் மற்றும் கிரே கலர்கள் கொடுக்கப்பட்டு ‘லைட்னிங் கிரே’ என்ற பெயரிலும் புதிய மாடல் ஸ்கூட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய இரண்டு மாடல்களும் RT-Fi தொழில்நுட்பத்துடன் இந்தியாவின் முதல் புளூ-டூத் இணைக்கப்பட்ட ஸ்கூட்டராக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்பைடர் மேன் லோகோ மற்றும் தோரின் சுத்தியல் போன்ற அந்தந்த எழுத்து சின்னங்களின் கிராபிக்ஸ் டிசைகன் மார்வெல் ரசிகர்களுக்கு உணர்வுபூர்வமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
TVS NTORQ 125 SuperSquad Edition விலை ரூ. 84,850 ஆகும்.