Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT

வெப் சீரிஸ் தொடராக யூடியூப்-யூனிகார்ன் நிறுவனம் Physics Wallah அலக் பாண்டேவின் கதை!

இந்தியாவின் 101-வது யூனிகார்னாக உருவெடுத்திருக்கும் Physics Wallah ஸ்டார்ட் அப் பற்றியும் அதன் சிஇஓ அலக் பாண்டே பற்றியும் ஆறு எபிசோடுகளாக வெப் சீரிஸ் ஒன்று வெளியாக உள்ளது.

வெப் சீரிஸ் தொடராக யூடியூப்-யூனிகார்ன் நிறுவனம் Physics Wallah அலக் பாண்டேவின் கதை!

Monday July 18, 2022 , 3 min Read

நொய்டாவைச் சேர்ந்த கல்வி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் Physics Wallah 2022 ஜூன் மாதத்தில் இந்தியாவின் 101-வது யூனிகார்னாக உருவெடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, மும்பையைச் சேர்ந்த புரொடக்‌ஷன் ஹவுஸ் About Films-இன் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நிறுவனம் Physics Wallah பற்றியும் அதன் சிஇஓ அலக் பாண்டே (Alakh Pandey) பற்றியும் ஆறு எபிசோடுகளாக வெப் சீரிஸ் ஒன்றை வெளியிட இருக்கிறது.

ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பற்றிய டெலிவிஷன் ஷோக்கள் தற்போது மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. இந்த சூழலில் Physics Wallah பற்றிய வெப் சீரிஸ் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1

அலக் பாண்டே - நிறுவனர், Phyics Wallah

About Films நிறுவனர் அபிஷேக் தந்தாரியா ஐஐடி கான்பூர் பட்டதாரி. இவர்தான் இந்த வெப் சீரிஸை இயக்கி தயாரிக்கிறார்.

Physics Wallah தொடங்கியது எப்படி?

Physics Wallah 2016-ம் ஆண்டு ஒரு யூட்யூப் சேனலாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த முயற்சியில் 30,000 ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அலக், JEE/NEET தேர்வு எழுதுவதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இலவசமாக வீடியோ பயிற்சியளிக்க ஆரம்பத்தார்.

ஒரு வொயிட்போர்ட், ஸ்மார்ட்போன், ட்ரைபாட், புத்தகங்கள் இவற்றை வைத்துக்கொண்டு தனக்கென ஒரு புதிய பாணியை உருவாக்கி மாணர்களுக்கு சுவாரஸ்யமாக பாடம் எடுக்கத் தொடங்கினார் அலக் பாண்டே.

”அலக் பாண்டேவிற்கும் எனக்கும் பொதுவான ஒரு நண்பர் மூலம் அவரைப் பற்றி தெரிய வந்தது. அலக் சுவாரஸ்யமாக பாடம் எடுக்கிறார் என்றும் மாணவர்களும் விரும்பி ரசிக்கிறார் என்றும் அந்த நண்பர் என்னிடம் சொன்னார். இப்படிதான் அலக் எனக்கு அறிமுகமானார்,” என்கிறார் About Films நிறுவனர் அபிஷேக்.

அலக் பற்றி அபிஷேக் மேலும் தகவல்களைத் தெரிந்துகொண்டார். இருவருக்கும் இடையில் சில பொதுவான விஷயங்கள் இருப்பது தெரிந்தது. இருவரும் கான்பூரில் பொறியியல் படித்துள்ளனர்.

அலக் Harcourt Butler Technical University-யில் மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை 2015ம் ஆண்டு முடித்தார். அபிஷேக்கிற்கு திரைத்துரையில் செயல்படுவது கனவாக இருந்தது. இதனால் ஐஐடி கான்பூர் கேம்பஸ் பிளேஸ்மெண்டைத் தவிர்த்துவிட்டு திரைத்துறையில் களமிறங்கிவிட்டார். வெப் சீரிஸ் உருவாக்குவதற்கு இதுதான் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.

ஓடிடி சீரிஸ்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் About Films அலக்கை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டது. Physics Wallah நிறுவனர் அலக், தனது குழந்தைப்பருவம் முதல் Physics Wallah தொடங்கியவது வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.

இதில் சுவாரஸ்யயமான விஷயம் என்னவென்றால் அலக்கிற்கு நடிப்பில் ஆர்வம் இருந்துள்ளது. தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டு மாணவர்களைக் கவர்ந்திழுக்க இதுவும் ஒரு காரணம். மாணவர்களும் அதிகளவில் அவரது வீடியோக்களைத் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர்.

2

அபிஷேக் தந்தாரியா -நிறுவனர் About Films

வெப் சீரிஸ் எடுக்கவேண்டும் என முடிவானதும் ஆறு எபிசோடுகளாக ஸ்கிரிப்ட் தயாரானது. முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்க பல நடிகர்களை About Films தொடர்பு கொண்டது. இறுதியாக ஸ்ரீதர் துபே தேர்வு செய்யப்பட்டார்.

அனுராக் காஷ்யப்பின் Gangs of Wasseypur, விக்கி கௌஷலின் Masaan 2020-ம் ஆண்டின் பிரபல நிகழ்ச்சியான Paatal Lok போன்றவற்றில் ஸ்ரீதர் துபே நடித்துள்ளார்.

”எனக்கு இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என அழைப்பு வந்தது. யாரோ என்னிடம் விளையாட்டாக பேசுகிறார்கள் என்றே நினைத்தேன்,” என்று யுவர்ஸ்டோரியிடம் தெரிவித்திருக்கிறார் ஸ்ரீதர்.

இந்த புரொடக்‌ஷன் ஹவுஸ் பற்றியோ இயக்குநர் பற்றிய ஸ்ரீதருக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் அவர் PhysicsWallah பற்றி அறிந்திருந்தார். இதற்குக் காரணம் அவரது தம்பி PhysicsWallah யூட்யூப் சானல் மூலமாகவே நுழைவுத் தேர்வுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்.

பொறியியல் பாடங்களையும் இந்த சேனல் மூலமாகவே படித்திருக்கிறார். பல சுற்றுகளாக ஆடிஷன் நடத்தப்பட்டு இறுதியாக ஸ்ரீதர் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கத் தேர்வானார். அலக்கின் சகோதரி அதிதி அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர். அதிதியாக நடிக்க டிவி நடிகை ராதா பட் தேர்வு செய்யப்பட்டார்.

”அலக் சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் அதிதிதான் அவரைத் தட்டிக் கொடுத்து ஊக்கமளித்திருக்கிறார்,” என்கிறார் அபிஷேக்.

அமீர் கான் நடித்த தங்கல் திரைப்படத்தில் நடித்திருந்த அனுராக் அரோரா இந்த வெப் சீரிஸில் பங்களித்திருக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வெளியாகும். மொத்தம் ஆறு எபிசோடுகளாக வெளியாக உள்ளது. ஒவ்வொரு எபிசோடும் 40-50 நிமிடங்கள் கொண்டிருக்கும்.
3

கல்வி தொழில்நுட்ப யூனிகார்ன் Physics Wallah இதுவரை ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வந்தது. தற்போது ’Pathshalas’ என்கிற பெயரில் 20-க்கும் மேற்பட்ட ஆஃப்லைன் கோச்சிங் கிளாஸ்காக செயல்பட்டு வருகிறது. 2022-2023 வகுப்பிற்கு 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருக்கின்றனர்.

ஆவணப்படுத்தப்படும் ஸ்டார்ட் அப் சூழல்

இந்த ஆண்டில் ஏராளமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் சிலிக்கான் வேலி தொழில்முனைவர்களின் ஏற்ற இறக்கங்களை ஆவணப்படுத்தியிருக்கின்றன.

வளர்ந்து வரும் இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய ஸ்டார்ட் அப் சூழலிலும் தொழில்முனைவோர்களின் வாழ்க்கைப் பயணங்கள் OTT தளங்களில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

2015-ம் ஆண்டில் The Viral Fever காமெடி டிராமா TVF Pitchers வெளியிட்டது. இதில் நான்கு நண்பர்கள் நல்ல சம்பளத்துடன்கூடிய தங்கள் வேலையை உதறிவிட்டு ஸ்டார்ட் அப் தொடங்கினார்கள். அதேபோல், நெட்ஃப்ளிக்ஸ் 2019-ம் ஆண்டு Upstarts வெளியிட்டது. இதில் மூன்ரு நண்பர்கள் இந்தியாவின் கிராப்புற மக்களுக்காக மெடிசன் டெலிவர் ஸ்டார்ட் அப் தொடங்கியதாக படமாக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் Sugar Cosmetics நிறுவனர் மற்றும் சிஇஓ வினீதா சிங், BharatPe நிர்வாக இயக்குநர் அஷ்னீர் க்ரோவர், People Group நிறுவனர் மற்றும் சிஇஓ அனுபம் மிட்டல், Mamaearth இணை நிறுவனர் மற்றும் சிஐஓ காசல் அலக், boat இணை நிறுவனர் மற்று சிஎம்ஓ அமன் குப்தா, Emcure Pharmaceuticals, ED, நமீதா தப்பர், Lenskart நிறுவனர் மற்றும் சிஇஓ பியூஷ் பன்சால் போன்ற ஏராளமான தொழில்முனைவோர் ’Shark Tank India' அறிமுக சீசனில் நடுவர்களாக பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில கட்டுரையாளர்: பிரசன்னதா பட்வா | தமிழில்: ஸ்ரீவித்யா