அதானி குழுமத்துக்கு அடுத்த ஷாக்: ரூ.5,400 கோடி டென்டரை ரத்து செய்த உபி அரசு!
உத்தரப் பிரதேச மின் பயன்பாட்டு நிறுவனமான மத்தியாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் (எம்விவிஎன்எல்) அதானி குழுமத்தின் ஏறக்குறைய 5,400 கோடி மதிப்புள்ள மின் விநியோக நிறுவனத்திற்கு (டிஸ்காம்) சுமார் 7.5 மில்லியன் ஸ்மார்ட் மீட்டர்களை வழங்குவதற்கான முயற்சியை ரத்து செய்துள்ளது.
Hindenburg ஆய்வு அறிக்கை மூலமாக ஏற்கனவே பல லட்சம் கோடிகளை இழந்த அதானிக்கு மீண்டும் பேரிடியாக மின் விநியோக நிறுவனத்திற்கு 7.5 மில்லியன் ஸ்மார்ட் மீட்டர்களை சப்ளை செய்வதற்கான பன்னாட்டு நிறுவனங்களின் 5,400 கோடி ரூபாய் ஏலத்தை உத்தர பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.
உத்தர பிரதேச மின் பயன்பாட்டு நிறுவனமான மத்தியாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகம் (எம்விவிஎன்எல்) அதானி குழுமத்தின் ஏறக்குறைய 5,400 கோடி மதிப்புள்ள மின் விநியோக நிறுவனத்திற்கு (டிஸ்காம்) சுமார் 7.5 மில்லியன் ஸ்மார்ட் மீட்டர்களை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
உ.பி.யின் மத்தியாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகாமுக்கு (எம்.வி.வி.என்.எல்) ஸ்மார்ட் மீட்டர் வழங்குவதற்கான அதானி குழுமத்தின் ஏலம் "தவிர்க்க முடியாத காரணங்களால்" ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழு டென்டர் செயல்முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட் மீட்டர் வழங்குவதற்கான புதிய டென்டர் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் மத்தியாஞ்சல், தக்ஷினாஞ்சல், பூர்வாஞ்சல் மற்றும் பஸ்சிமாஞ்சல் உள்ளிட்ட வட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய 25 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட் மீட்டர்களை வழங்குவதற்கான டென்டர்கள் விடுக்கப்பட்டது. இந்த ஏலங்களின் மதிப்பு 25,000 கோடி ரூபாய் ஆகும்.
ஜிஎம்ஆர், எல்&டி மற்றும் இன்டெலிஸ்மார்ட் இன்ஃப்ரா ஆகிய நிறுவனங்கள் இந்தத் திட்டத்திற்கான மற்ற ஏலதாரர்களாக இருந்தன. ஆனால், அதானி நிறுவனம் ஒரு ஸ்மார்ட் மீட்டருக்கு 10 ஆயிரம் விலை நிர்ணயித்துள்ளது. இது குறைந்த விலையாக இருந்ததால் அதானி நிறுவனத்திற்கு ஸ்மார்ட் மீட்டர் வழங்கும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது குறைவான விலையே கோரியிருந்தாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷனின் நிலையான பில்லிங் வழிகாட்டுதலின் கீழ், ஒரு மீட்டருக்கு ரூ.6,000 செலவைக் கருத்தில் கொண்டு, விலையை நிர்ணயித்ததாகக் கூறப்படுகிறது.
இப்போது, டிஸ்காம் புதிய டென்டர் செயல்முறையைத் தேர்வுசெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜிஎம்ஆர், எல்&டி மற்றும் இன்டெலிஸ்மார்ட் இன்ஃப்ரா மீண்டும் போட்டியிடக்கூடும் என்றும், அதில் ஒரு நிறுவனத்திற்கு டென்டர் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் போட்டியில் உள்ள நான்கு தனியார் நிறுவனங்களில் எதுவும் ஸ்மார்ட் மீட்டர் உற்பத்தியாளர்கள் இல்லை. ஒப்பந்தத்தை வென்ற பிறகு, அவர்கள் உற்பத்தியை கையகப்படுத்த வாய்ப்புள்ளது.
உத்தர பிரதேச அரசு மிக அதிக விலைக்கு அதானி நிறுவனத்திற்கு டென்டர்களை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. குற்றச்சாட்டுகளின் பின்னணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் புதிய டென்டர் கோரப்பட்டு வருகிறது.