Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

எளிமையான திருமணம் - 20 ஆதரவற்றக் குழந்தைகளின் கல்விக்கு உதவிய சிவில் சர்வீஸ் தம்பதி!

தங்களது திருமணத்தில் தேவையற்ற ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்கிய குடிமைப் பணி அதிகாரிகளான புதுமண தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

எளிமையான திருமணம் - 20 ஆதரவற்றக் குழந்தைகளின் கல்விக்கு உதவிய சிவில் சர்வீஸ் தம்பதி!

Thursday February 16, 2023 , 2 min Read

தங்களது திருமணத்தில் தேவையற்ற ஆடம்பரங்களைக் குறைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விச் செலவுக்கு வழங்கிய குடிமைப் பணி அதிகாரிகளான புதுமண தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய தபால் துறையில் அதிகாரியாக பணியாற்றி வரும் சிவம் தியாகி மற்றும் இந்திய வருவாய் சேவை அதிகாரியாக உள்ள ஆர்யா ஆர் நாயர் இருவரும் டெல்லியில் குடிமைப் பணிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள். நீண்ட காலமாக காதலித்து வந்த இருவரும், திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆனால், பெரிய அளவிலான மண்டபத்தில் ஆடம்பரமாக செலவு செய்து, தடபுடலாக விருந்து வைத்து திருமணம் நடத்த விரும்பவில்லை. அதற்கு பதிலாக சிம்பிளாக திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஜனவரி 27ம் தேதி அன்று கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சப்-ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் எவ்வித ஆடம்பரமும் இன்றி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Wedding

மேலும், திருமணத்துக்காக வைத்திருந்த தொகையை 20 ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு அளித்து பலருக்கும் முன்மாதிரியாக மாறியுள்ளனர். இந்தத் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து, மணமகன் ஷிவம் தியாகிக்கும், மணப்பெண் ஆர்யா நாயருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

டெல்லியைச் சேர்ந்த சிவம் தியாகி, இந்திய அஞ்சல் சேவையின் 2020ம் ஆண்டு பேட்ஜைச் சேர்ந்தவர்.

“எளிமையான திருமணம் பற்றிய யோசனை ஆர்யாவிடம் இருந்து வந்தது. பல நாட்கள் கொண்டாட்டத்தை எதிர்பார்த்திருந்த என் உறவினர்களுக்கு இது ஒரு கலாச்சார அதிர்ச்சியாக இருந்தது. வரும் ஆண்டுகளிலும், அனாதை இல்லத்தில் உள்ள மாணவர்களின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க உதவுவோம். எங்கள் இந்த முயற்சி திருமணத்தோடு நின்றுவிடக்கூடாது,” என்கிறார்.

2021 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான ஆர்யா, திருவிழா போல் கொண்டாட்டப்படும் திருமணத்தை எளிமையாக நடத்துவது கடினமானது எனக்கூறியுள்ளார்.

“எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் திருமண நாளுக்காக காத்திருந்தனர். கேரளாவில் நிலவும் டிரெண்ட் படி எங்கள் திருமணத்தை இரண்டு முதல் மூன்று நாட்கள் கொண்டாட்டத்தை நடத்த அனைவரும் ஆர்வமாக இருந்தனர்,'' என்கிறார்.
Wedding

குறிப்பாக ஆர்யாவின் பெற்றோர் இந்த விஷயத்தை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிறார்.

"அவர்கள் பல திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதால், அவர்களுக்கு இதனை ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. அனைவரையும் திருமணத்திற்கு அழைத்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள வேண்டும் என நினைத்தனர். திருமண செலவை குறைத்து அதனை அனாதைக் குழந்தைகளின் கல்விக்காக செலவிட திட்டமிட்டதை முதலில் எங்களுடைய உறவினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்” என்கிறார்.

ஷிவம் தியாகி தற்போது வருவாய்த்துறை (ஐஆர்எஸ்) பணிக்காக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்பயிற்சி பெற்று வருகிறார்.