2024-ம் நிதியாண்டில் இருமடங்கிற்கும் அதிக லாபம் ஈட்டிய சென்னை 'வெராண்டா லேர்னிங் சொல்யுஷன்ஸ்'
edtech நிறுவனமான Veranda Learning, ஏப்ரல் மாதத்தில், அதன் புரோமோட்டர்களுக்கு ர் 20 லட்சம் ஈக்விட்டி பங்குகளை ஒரு பங்கிற்கு 307 ரூபாய்க்கு ஒதுக்கியது.
கல்வித் தொழில்நுட்ப நிறுவனமான 'வெராண்டா லேர்னிங் சொல்யூஷன்ஸ்' நிறுவனம் 2024-ம் நிதியாண்டில் அதன் லாபத்தை இரட்டிப்புக்கும் அதிகமாக்கி ரூ.361.73 கோடி லாபம் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இழப்பு 3.9% குறைந்துள்ளது.
edtech நிறுவனமான
Learning, ஏப்ரல் மாதத்தில், அதன் புரோமோட்டர்களுக்கு ரூ.20 லட்சம் ஈக்விட்டி பங்குகளை ஒரு பங்கிற்கு 307 ரூபாய் என்று ஒதுக்கியது.இது குறித்து வெராண்டா நிர்வாக இயக்குநரும் சேர்மனுமான சுரேஷ் கல்பாத்தி கூறும்போது,
“இந்த ஆண்டு, நாங்கள் எங்கள் லட்சிய இலக்குகளை தாண்டியுள்ளோம், 17% உறுதியான EBITDA லாப விகிதத்தைப் பராமரிக்கும் அதே வேளையில், 100%க்கும் அதிகமான ஆண்டு வருவாய் வளர்ச்சியை அடைந்துள்ளோம். மேலும், 2025-ம் ஆண்டை எதிர்நோக்கும் நாங்கள் இதே உத்வேகத்தைத் தக்கவைத்து ரூ.550 கோடியாக வருவாயை உயர்த்த முயற்சி செய்வோம்,” என்றார்.
நிறுவனத்தின் மார்ச் 31, 2024ல் முடிவடைந்த நிதியாண்டிற்கான செயல்பாட்டு வருவாய், பங்குச் சந்தையில் தாக்கல் செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகளின்படி, 2023 நிதியாண்டில் ஈட்டிய ரூ.161.35 கோடியிலிருந்து 124.19% முன்னேற்றம் கண்டுள்ளது. 2024-இன் கடைசி காலாண்டில், அதன் வருவாய் ஆண்டுக்கு 112% உயர்ந்து ரூ.102.61 கோடியாக இருந்தது, இது 2023ல் இதே காலகட்டத்தில் ரூ.48.80 கோடியாக இருந்தது.
மற்ற வருமானம் 2023ஆம் நிதியாண்டில் ரூ.38.56 கோடியிலிருந்து 2024ஆம் நிதியாண்டில் 78.5% குறைந்து ரூ.8.28 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
முந்தைய நிதியாண்டில் ரூ.233.59 கோடியாக இருந்த மொத்தச் செலவுகளும் 2024ஆம் நிதியாண்டில் 31.7% அதிகரித்து ரூ.307.73 கோடியாக அதிகரித்துள்ளது. 2024 இல் செய்யப்பட்ட அனைத்து செலவினங்களில் கிட்டத்தட்ட பாதியை உள்ளடக்கிய பிற செலவுகள், ஆண்டுக்கு ஆண்டு (YoY) 31.6% அதிகரித்து ரூ.170.34 கோடியாக உள்ளது.
நான்காம் காலாண்டில் வெராண்டா லர்னிங்கின் செலவுகள் மொத்தம் ரூ.81.19 கோடி, இது முந்தைய ஆண்டைவிட 17.6% அதிகம். 2023ஆம் நிதியாண்டில் ரூ.58.55 கோடியாக இருந்த ஊழியர்களின் நலன்களுக்கான செலவுகள் 2024ஆம் நிதியாண்டில் 39.7% அதிகரித்து ரூ.81.83 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் ஏப்ரல் 26 இறுதி விலையான ரூ.179.95 ஐ விட 70% பிரீமியத்தை உள்ளடக்கும் வகையில், 20 லட்சம் ஈக்விட்டி பங்குகளை அதன் விளம்பரதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.307 என ஒதுக்கியது வெராண்டா சொல்யுஷன்ஸ்.