இந்தியப் பெண்கள் ஏன் அவர்களின் கணவருக்கு பின்னால் நடக்கிறார்கள் தெரியுமா?
பெண்கள் ஏன் தங்கள் கணவருக்குப் பின்னால் இரண்டு அடி தள்ளி நடக்க வேண்டும் என்று விளக்கமளிக்கும் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் உரை வைரல் ஆகியுள்ளது.
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் தாய், சகோதரி, மனைவி, காதலி... என ஏதேனும் ஓர் வடிவத்தில் பெண்ணிருப்பது மறுக்கப்படாத உண்மையாக இருப்பினும், பல சமயங்களில் இது நகைச்சுவையாக்கப்படுகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2018ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தன்று டில்லியில் நடந்தவொரு நிகழ்வில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சு, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஏன், ஸ்மிருதி இரானியின் உரையினொரு பகுதியினை டிக்டாக் செய்ய டிக்டாக்வாசிகளும் விருப்பப்பட்டனர்.
பல மாதங்களுக்கு முன்பு டிக் டாக் பயனர் ஒருவர் ஸ்மிருதி இரானியின் உரையினை டிக்டாக் செய்து கவர்ந்த நிலையில், அப்பழைய வீடியோ மீண்டும் இணையத்தை வென்றுள்ளது. இம்முறை டுவிட்டர் தளத்தில் 30 செகண்ட் டிக்டாக் வீடியோ பகிரப்பட்டு அது 1,77,000 டுவிட்டராட்டிகள் பார்த்துள்ளனர்.
பெண்கள் ஏன் தங்கள் கணவருக்குப் பின்னால் இரண்டு அடி தள்ளி நடக்க வேண்டும் என்று விளக்கமளித்த ஸ்மிருதியின் உரையின் ஒரு பகுதியினை டிக்டோக்கில் பல மாதங்களுக்கு முன்பு பாஹி என்ற டிக்டாக் பயனாளர் பகிர்ந்திருந்தார்.
அந்த டிக்டோக் வீடியோவில், ஸ்மிருதி அவரது கருத்தை விளக்கி முடிக்க, பாஹி அதனை ரசித்து புன்னகையுடன் கேட்டு இறுதியில் ஸ்மிருதியின் பேச்சுக்கு சல்யூட் அடித்து ஃப்ளையிங் கிஸ் கொடுத்து கிளாப் செய்கிறார். ஏற்கனவே, டிக்டாக்கில் வரவேற்பு பெற்ற வீடியோவினை ஒருவர் ட்விட்டரில் கடந்த வியாழக்கிழமை பகிர்ந்து கொள்ள, 2,500க்கும் மேற்பட்டோர் அந்த ட்வீட்டை ரீடுவிட் செய்தனர்.
அப்படி, அந்த வீடியோவில் ஸ்மிருதி என்னதான் பேசியிருந்தார். ஸ்மிருதி அவரது உரையில்,
“நான் சற்று பழமைவாதி என்று கூறுகிறார்கள். நான் கணவருக்கு பின்னால் இரண்டு அடி தள்ளி நடக்கிறேன். இது என்னைப் போன்ற பெண்களின் பிரச்சினை. ஆனால், இது ஒரு பிரச்சினை அல்ல என்கிறேன். நானொரு இந்தியப் பெண், என் கணவர் எப்போதாவது தடுமாறினால் நான் மட்டுமே அவரை ஆதரிக்க முடியும் என்று கருதுகிறேன். எனக்கு அத்தகைய தகுதிகள் உள்ளன என்று கடவுள் முடிவு செய்துள்ளார். இதனால்தான் நான் என் கணவருக்குப் பின்னால் இரண்டு அடிகள் தள்ளி நடக்கிறேன்,” என்று ஸ்மிருதி அவரது உரையில் பேசியிருந்தார்.
இதைத்தான் டுவிட்டராட்டிகள் ஹார்டின் விட்டு ரசித்ததுடன், ரீடுவிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.
இன்னொரு ட்விட்டர் பயனர் உஷா பதிவிடுகையில், ஆம் பெண்களுக்கு அந்த சக்தி இருக்கிறது என்கிறார்.
இதனை ட்விட்டராட்டிகள் ஹார்டின் விட்டு ரசித்ததுடன், ரீடுவிட் செய்து பகிர்ந்து வருகின்றனர்.