ஆண்டுக்கு ரூ.75 கோடி வருவாய் ஈட்டும் 'தி டயமண்ட் பேக்டரி'

10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் வைர வியாபாரத்தில் பிரபல ப்ராண்டாக வளர்த்த நண்பர்கள்.

29th Jan 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

40 வயதான மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோர்களான கெளதம் சிங்வி மற்றும் பிரசன்னா ஷெட்டி ஆகியோர் பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே பிரிக்க முடியாத நண்பர்கள். இருவரும் தங்கள் நட்பை கல்லூரியிலும் தொடர்ந்தனர். கல்லூரி நாள்களில் இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுப்பது உள்பட நிர்வாகப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் இந்தத் திறன் அவர்களை தங்கள் வாழ்க்கையில் மேலும் பெரிதாக ஏதேனும் சாதிக்கவேண்டும் எனத் தூண்டியது.


tdf1

தி டயமண்ட் பேக்டரி இணை நிறுவனர்கள் கெளதம் சிங்வி, பிரசன்னா ஷெட்டி

கெளதமின் குடும்பத்தினர் நகை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்தனர். அவர்கள் தங்கள் தொழிலில் நிபுணத்துவம் பெறவும், தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும் நினைத்தனர். 1999 ஆம் ஆண்டில், கெளதம் சிங்வி மற்றும் பிரசன்னா ஷெட்டி இருவரும் இணைந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தங்க நாணயங்கள், சங்கிலிகள் மற்றும் சிறிய ஆர்டர்களை செய்து கொடுக்கத் தொடங்கினர்.


ஆனால், கெளதம் ஆரம்பத்தில் ஒரு தொழில்முனைவோராக இருக்கவில்லை. உள்ளூர் தங்க நகைக்கடை விற்பனையாளரான கெளதமின் தந்தை, தனது மொத்த குடும்பமும் இணைந்து நகைக் கடையை கவனித்துக்கொள்ள வேண்டும் என்றே விரும்பினார்.


இதுகுறித்து கெளதம் எஸ்எம்பி ஸ்டோரியிடம் கூறியதாவது,

“நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, என் தந்தையின் நகைக் கடைக்குச் சென்று வியாபாரத்தை கவனித்து வந்தேன். கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற பிறகு முழுநேரமும் கடையை கவனித்துக் கொள்ளும் திட்டம் இருந்தது.

நான் வணிகத்தை கவனித்துக் கொள்ளத் தொடங்கியவுடன், வணிகத்தை நவீனமயமாக்கவும், வைர நகைகளை விற்பனை செய்யவும் விரும்புவதாக தெரிவித்தேன். ஆனால் குடும்ப வணிகத்தில் எனது யோசனைகளை செய்லபடுத்த முடியவில்லை. எனவே, அவர் என்னைத் தனியே முயற்சித்து, வைர நகைகளை விற்குமாறு ஊக்குவித்தார்,” என்கிறார்.

இதையடுத்து, கெளதமும், பிரசன்னாவும் ரியல் எஸ்டேட் தொழில், விற்பனை, கொள்முதல் மற்றும் சொத்து முதலீடு போன்றவற்றில் ஈடுபட்டு சிறிது பணம் ஈட்டினர். தொடர்ந்து இதுகுறித்து பிரசன்னா கூறும்போது, “நாங்கள் சிறிய அளவிலான ரியல் எஸ்டேட் மற்றும் நகைத் தொழில்முனைவோராக இருந்தோம். கெளதம் தொடர்ந்து தனது தந்தையுடன் பணியாற்றினார். எங்கள் சிறிய நகைகள் மொத்தத் தொழிலில், வைர நகைகளை அறிமுகப்படுத்தினோம்.


இதற்கிடையே, நான் ஒரு மேலாண்மைப் படிப்பை முடித்து, முழுநேர கார்ப்பரேட் வேலையில் இறங்கி விட்டேன். ஆனால் எங்கள் இருவரிடமும் இருந்து நேரடியாக வைர நகைகளை வாங்கவே, எங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர் விரும்பினர். எங்கள் மொத்த விற்பனையைவிட சில்லறை விற்பனையானது அதிக லாபம் தரக்கூடியது என்பதை நாங்கள் உணர்ந்தோம். இதையடுத்து,

2008ல் பாந்த்ராவில் ஒரு சிறிய கேரேஜில் ஒரு வைர நகை சில்லறை விற்பனை நிலையத்தை அமைத்தோம்," என்கிறார்.
தொழிற்சாலை

தி டயமண்ட் பேக்டரியின் உள்பகுதியில் பணியாற்றும் பணியாளர்கள்.

தனது தொழில் முயற்சியில் தீவிரமாக ஈடுபட பிரசன்னா, தனது வேலையை விட்டுவிட்டார். நண்பர்கள் இருவரும் முழுமூச்சாக வியாபாரத்தில் மூழ்கினர். கடந்த 10 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், ரூ.75 கோடி வருவாய் ஈட்டும் வணிகமாக வளர்ந்த நகை பிராண்டே ’தி டயமண்ட் பேக்டரி’ (டி.டி.எஃப்) எனும் பாந்த்ரா கடையாகும்.


குட்டாபுசலு, குண்டன், கோயில் மற்றும் வெட்டப்படாத ஜடாவ் நகைகள் மற்றும் சமகால வடிவமைப்புகளில் சிக்கலான கையால் வடிவமைக்கப்பட்ட துண்டுகள் ஆகியவற்றுடன் வைர மற்றும் தங்க நகைகளை சில்லறை விற்பனை செய்வதில் இந்த பிராண்ட் நிபுணத்துவம் பெற்றது.

“நாங்கள் நகை மையமாக இருக்கும் பாந்த்ராவில் தொழிலைத் தொடங்கினோம். எங்களுக்கு நிறைய போட்டிகள் இருந்தன. எனவே நாங்கள் தனித்துவமான வடிவமைப்புகளை உருவாக்க விரும்பினோம்,” என்கிறார் கெளதம்.

நகைகளின் உயர்ந்த தரம், வடிவமைப்பாளர் புதிய டிசைன்கள், விலை நிர்ணயம் செய்யும் அணுகுமுறை மற்றும் நகைகளை சந்தைப்படுத்தல் போன்றவையே தி டயமண்ட் பேக்டரியின் வெற்றிக்கு இன்றியமையாத காரணிகளாக அமைந்தன.


இந்தியா உலகளாவிய நகை சந்தையின் மையமாகக் கருதப்படுகிறது. மேலும், வைரத்தை வெட்டி எடுத்து மெருகூட்டலுக்கான உலகின் மிகப்பெரிய மையமாகும். 2025ஆம் ஆண்டில் 75 பில்லியன் டாலரிலான இந்த நகைச்சந்தை 100 பில்லியன் டாலர்களை எட்டும் என்று ஐபிஇஎஃப் தரவு மதிப்பிடுகிறது.


குறைந்த உற்பத்தி செலவுகள் இந்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றொரு முக்கியக் காரணியாகும்,

“பொதுவாக, எங்கள் தயாரிப்புகளின் விலை, பெரிய நிறுவனங்கள் மற்றும் தேசிய பிராண்டுகளை விட 30 முதல் 35 சதவீதம் குறைவாகவும், பொதுவான உள்ளூர் கடைகளைவிட 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் இருப்பதை உறுதி செய்கிறோம்.

கணக்கியலில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட செலவினங்களை துல்லியமாக வெளிப்படுத்துவதன்மூலம் நாங்கள் ஓர் நேர்மறையான வியாபார முறையை பின்பற்றுகிறோம். இதனால் எங்களுக்கென ரெகுலர் வாடிக்கையாளர் கூட்டத்தையும் உருவாக்கியுள்ளோம்.


தி டயமண்ட் பேக்டரியின் புதிய தயாரிப்பான காக்டெய்ல் மோதிரம் தற்போதைய தங்க, வைர விலை விகிதங்கள் மற்றும் உற்பத்தி செலவுகள், வண்ணக் கற்களின் அமைப்பைக் கொண்டிருந்ததால் மட்டும் விலை சற்று மாறுபடுகிறது என்கிறார்.


டயமண்ட்

காக்டெய்ல் மோதிரம்

தி டயமண்ட் பேக்டரியின் தயாரிப்புகள், தஹிசரின் தொழில்துறை பகுதியில் உள்ள அதன் சொந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன. இதனால் மற்ற முக்கிய நகரங்களை விட இங்கு தயாரிப்புச் செலவு மிகவும் குறைவாக உள்ளது. இந்தத் தொழில் பகுதியை தேர்ந்தெடுப்பதற்கான மற்றொரு முக்கியக் காரணம் திறமையான பணியாளர்கள் இப்பகுதியில் எளிதில் கிடைப்பார்கள் என்பதும்தான்.


இக்காரணிகளால் உற்பத்தி அதிகரித்தது. பாரம்பரிய கைவினைத்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் தரமான நகைகளை உற்பத்தி செய்வதற்கு இந்த பிரிவு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று இணை நிறுவனர் கூறுகிறார்.

"இது ஓர் செங்குத்தாக ஒருங்கிணைந்த வணிக மாதிரியாகும். இது உள் வடிவமைப்பு, உற்பத்தி முதல் சந்தைப்படுத்தல் மற்றும் எங்கள் சில்லறை கடைகளில் நேரடி விநியோகம் வரை செங்குத்தானது," என்கிறார்.

பாந்த்ரா விற்பனை நிலையத்தில் நன்கு விற்பனை நடைபெற்றதைப் பார்த்த பார்த்தபிறகு, நிறுவனம் தனது கிளைகளை தற்போது அந்தேரி, வாஷி, மற்றும் மங்களூரு ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தியது. நிறுவனர்களின் கூற்றுப்படி, வைர நகை விற்பனையில் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றாக தி டயமண்ட் பேக்டரி மாறிவிட்டது எனலாம். சந்தைப் பங்குகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் என இன்றுவரை, வெளி முதலீட்டாளர்கள் யாரும் தி டயமண்ட் பேக்டரிக்கு நிதியளிக்கவில்லை. மேலும் கெளதமும், பிரசன்னாவும் தங்களின் சொந்தப் பணத்தில் தலா ரூ. 50 லட்சத்தை வணிகத்தில் முதலீடு செய்துள்ளனர்.


2011ஆம் ஆண்டு மேலும் அதிகமான கடைகளைத் திறப்பதற்கும், உற்பத்தியைப் பெருக்குவதற்கும் வங்கிக் கடன் பெற்றனர். ரியோ டின்டோ மற்றும் டெபியர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களிடம் இருந்து சகாய விலையில் வைரங்கள் மற்றும் மூலப்பொருள்களை தி டயமண்ட் பேக்டரி பெறுவதே இந்த வெற்றிக்கு அடிப்படையாகும்.


இதுகுறித்து கெளதம் மேலும் கூறியதாவது, எங்கள் நகைகளில் பயன்படுத்தப்படும் வைரங்கள் உண்மையானவை, இயற்கையானவை, மற்றும் நெறிமுறை சார்ந்தவை என்பதை உறுதி செய்கிறோம். வைரங்கள் மற்றும் நகைகளை வெட்டுவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இதுவே எங்கள் பிராண்டின் வெற்றிக்கு காரணமாகும்.

18 வயது முதல் 55 வயதுவரையுள்ள அனைவரும் எங்களின் வாடிக்கையாளர்கள்தான். நடுத்தர மற்றும் உயர்தர வர்க்கத்தினரை குறிவைத்தே எங்கள் தயாரிப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பதக்கங்கள், கழுத்தணிகள், மோதிரங்கள் என அனைத்து விதமான தயாரிப்புகளையும் நாங்கள் வழங்குகிறோம் என்கிறார் பிரசன்னா.


தி டயமண்ட் பேக்டரியின் நகைகளை அன்றாட பயன்பாட்டுக்கானவை மற்றும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கானவை என இருவகைப்படுத்தலாம். இந்த இருவகையான நகைகளும் பெங்களூரு, மங்களூரு மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் கண்காட்சிகள் மூலமும் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை என இரண்டிலும் கவனம் செலுத்துகின்றனர்.

மோதிரம்

சாலிடெய்ர் மோதிரம்

சமூக ஊடக சந்தைப்படுத்தல் மற்றும் நகை விளக்கக் காட்சிகள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் நாங்கள் டிஜிட்டலுக்காக நிறைய செலவு செய்துள்ளோம் எனக்கூறும் பிரசன்னா, தொடர்ந்து தனது அனுபவங்களை விளக்குகிறார்.

இந்த வணிகத்தில் போட்டி எப்போதும் அதிகமாகவே இருக்கும். எங்களின் முதல் சவாலே எங்கள் தயாரிப்புகளை ஓர் பிராண்டாக நிலைநிறுத்துவதாகும். எங்கள் தனித்துவமான வடிவமைப்புகளும் வெளிப்படைத் தன்மையும் எங்களுக்கு எங்கள் பிராண்டை நிலைநிறுத்த உதவியது என்கிறார்.

நாங்கள் பெரும்பாலான நகரங்களில் கண்காட்சிகள் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் மூலம் விற்பனை மேற்கொண்டு வருகிறோம். மும்பை மட்டுமன்றி, புறநகர்ப் பகுதிகளிலும் அதிகமான கடைகளை நாங்கள் திறந்து வருகிறோம். நாங்கள் எங்கள் பிராண்டை அனைத்து பகுதிகளுக்கு விரிவுபடுத்தவுள்ளோம் என எதிர்காலத் திட்டம் குறித்து நம்பிக்கை தெரிவிக்கிறார் கெளதம்.


ஆங்கிலத்தில் ரிஷப் மன்சூர் | தமிழில் திவ்யாதரன்


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India