Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உலகக் கோப்பை செஸ்: இந்தியா சார்பில் பங்கேற்கும் ஒற்றைத் தமிழர்!

குவிந்து வரும் பாராட்டுக்கள்!

உலகக் கோப்பை செஸ்: இந்தியா சார்பில் பங்கேற்கும் ஒற்றைத் தமிழர்!

Wednesday June 02, 2021 , 1 min Read

ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 3 வரை உலகக் கோப்பை செஸ் போட்டி ரஷ்யாவில் நடக்க இருக்கிறது. இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய போட்டியாளருக்கான தகுதி மற்றும் தேர்வு போட்டியானது அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. கடந்த மே 26 முதல் 30 வரை காணொலி வாயிலாக போட்டி நடந்தது.


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் காரணமாக இப்படி காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. அதன்படி, வீரர்கள் சர்வதேச நடுவர்கள் கண்காணிப்பில், அவரவர் வீடுகளில் அமர்ந்து காணொலியில் நேரலையாக விளையாடினர்.

youth iniyan

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிராண்ட் மாஸ்டர்கள் 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பிரபல செஸ் வீரரான இனியன் பங்கேற்று விளையாடினார். இதில், ஒற்றை வீரராக கிராண்ட் மாஸ்டர்கள் அதிபன், நாராயணன், குகேஷ், விஷ்ணு பிரசன்னா உள்பட 12 வீரர்களுடன் விளையாடி வெற்றி பெற்றார் கிராண்ட் மாஸ்டர் இனியன். மேலும், சேதுராமன் என்ற வீரரை இனியன் டிரா செய்தார்.


அதனடிப்படையில், 12.5 புள்ளிகள் பெற்று போட்டியில் முதல் இடம் பிடித்தார் இனியன். முதல் இடம் பிடித்ததன் மூலம் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கும் ஒற்றை வீரராக இனியன் தேர்வு பெற்று உள்ளார்.


ஈரோட்டில் தனது வீட்டில் இருந்தே மிகச் சிறப்பாக விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தி தமிழகத்துக்கு பெருமை சேர்த்த இனியன் மற்றும் அவருக்கு ஊக்கமாக இருந்த அவரின் தந்தை, தாய் மற்றும் பயிற்சியாளர் விஸ்வேஸ்வரன் ஆகியோருக்கும் சதுரங்க விளையாட்டு சங்கம் உள்ளிட்ட பலர் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.