Brands
YS TV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

12 வயதில் தோன்றிய ஆர்வம்: முன்னணி புகைப்படக்கலைஞராக மிளிரும் தர்மச்சந்துரு!

புகைப்படக்கலைக்கு எல்லைகளோ வகையோ கிடையாது காட்டாற்று வெள்ளம் போல கிடைத்த இடமெல்லாம் சென்று தனது கேமரா லென்ஸ் கண்களால் நம்மை வியக்க வைக்கிறார் தர்மச்சந்துரு.

12 வயதில் தோன்றிய ஆர்வம்: முன்னணி புகைப்படக்கலைஞராக மிளிரும் தர்மச்சந்துரு!

Thursday August 19, 2021 , 4 min Read

அழகான தருணங்களை, நீங்காத நினைவுகளாக பதிய வைப்பவை புகைப்படங்கள். விளையாட்டுப் பிள்ளை முதல் வளர்ந்துவிட்டவர்கள் வரை ஒரு ‘கிளிக்’ இல்லாமல் இல்லை இன்றைய உலகில்.


எனினும் புகைப்படத் துறையில் ஜொலிப்பவர்கள் சிலரே, வழக்கமாக நாம் பார்க்கும் கேமரா லென்ஸ்களை கலைக்கண்ணோட்டத்தோடு அற்புதமான படைப்புகளாகத் தருபவர்களில் இளம் புகைப்படக்காரர் தர்மச்சந்துருவும் ஒருவர் என்றால் அது மிகையல்ல.

சந்துரு

புகைப்படக்காரர் தர்மச்சந்துரு

கலைக்கான பயணம், ரசனையான தேடல், புகைப்படக்கலையில் தன்னை தனித்துகாட்ட வேண்டும் என்ற ஆர்வத்தோடு சொந்த அனுபவங்களைக் கொண்டு இன்று முன்னோடி புகைப்படக்கலைஞர்களில் ஒருவராக வலம் வருகிறார் சென்னையைச் சேர்ந்த தர்மச்சந்துரு.


உலகப் புகைப்பட தினத்தை முன்னிட்டு அவரிடம் பேட்டி கண்டது யுவர் ஸ்டோரி தமிழ். உற்சாகத்தோடு பேசத் தொடங்கினார் அவர்,

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். புகைப்படம் எடுக்கும் ஆர்வம் சிறுவயது முதலே இருந்தது, 12 வயதிலேயே சொந்தமாக canonsureshot பிலிம் ரோல் கேமிரா வைத்திருந்தேன் அதில் கிளுக்கிய ‘Silhouette’ புகைப்படம் ஒன்று அனைவரின் பாராட்டையும் பெறவே எனக்குள்ளாக புகைப்படக் கலைஞராகும் ஆர்வம் அதிகரித்துவிட்டது,” என்றார்.

சிறு வயது முதலே திரைப்படங்களைப் பார்க்கும் போது அதன் ஒளிப்பதிவுகளையே அதிகம் பார்க்கும் பழக்கம் இருந்ததால் இந்தத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற உள்ளுணர்வு தர்மச்சந்துருவிற்கு இருந்துள்ளது.


தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்து வந்த போதும் அப்போது இவற்றைக் கற்பதற்கான போதிய வாய்ப்புகளும், இணையதள வசதிகளும் இல்லாததால் சுயமாக கற்கத் தொடங்கி இருக்கிறார்.

“புகைப்படத் துறைக்கென்ற பிரத்யேகமான புத்தகங்களின் விலை அதிகம், எனினும் பழைய புத்தங்கள் சென்னையில் குறிப்பிட்ட சில இடங்களில் கிடைக்கும் அந்த இடங்களுக்குத் தேடிச்சென்று அவ்வகை புத்தகங்களை வாங்கி சேகரித்து புகைப்படத்துறை குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொண்டேன். 2004ம் ஆண்டிற்குப் பிறகு இணையதள வசதிகள் பெருகிய நிலையில் அதனையும் பயன்படுத்தி இந்தத் துறைக்கான அறிவை வளர்த்துக்கொண்டேன்,” என்கிறார் சந்துரு.

புகைப்படத்துறை தான் தன்னுடைய எதிர்காலம் என்று முடிவெடுத்து விட்டடாலும் பெற்றோரின் ஆசைக்காக கணிணிப் பொறியியல் முடித்துவிட்டு, பின்னர் தன்னுடைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கி இருக்கிறார் இவர்.

“பெற்றோரின் ஆசைக்காக BE முடித்துவிட்டு பின்னர் என்னுடைய துறையான புகைப்படக்கலையை நோக்கி உலகம் முழுவதும் சுற்றத் தொடங்கினேன். என்னுடைய புகைப்படங்கள் அனைத்தும் இதழ்களில் வெளியாகத் தொடங்கியதால் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது.”

புகைப்படத்துறையை தேர்ந்தெடுப்பவர்கள் ஒரு தனி genre-இல் பிரகாசிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சந்துரு சற்றே வித்யாசமானவர் genre என்று ஒரு எல்லைக்குள் தன்னைக் கட்டுபடுத்திக்கொள்ளாமல் பல வகையான genreகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எல்லாவற்றிலும் புகுந்து வந்து ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.


பல மணி நேரம் காத்திருந்து பதிவு செய்ய வேண்டிய வனவிலங்குகள், பறவைகளின் புகைப்படங்களானாலும், மனதை இலகுவாக்கும் இயற்கைச் சூழல்கள், மலைகள், மேகங்கள், மழை, பனிமூட்டங்கள், திருவிழாக்கள், நகரங்கள், கடலுக்கு அடியிலான உலகம், விளையாட்டுக்களம் என எல்லாவற்றிலும் தன்னைச் சிறந்த புகைப்படக்கலைஞராக நிரூபித்திருக்கிறார் சந்துரு.

தர்மசந்துரு

தர்மச்சந்துரு எடுத்த புகைப்படங்கள்

25 ஆண்டுகளாக இந்தத் துறையில் இருக்கும் சந்துரு, 2009 காலகட்ட தொடக்கத்தில் பி.சி.ஸ்ரீராம், கே. பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்டோரிடம் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார். வெறும் படைப்புகளை படைக்கும் புகைப்படக்கலைஞராக நின்றுவிடாமல் அனுபவங்களால் தான் கற்ற கலையை மற்றவர்களுக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கிய இவர், பயிலரங்கங்கள், பயிற்சி பட்டறைகளில் பங்கேற்து இதுவரை 10 ஆயிரம் பேருக்கு பயிற்சிகளை வழங்கி இருக்கிறார்.

”வெறும் புகைப்படக்கலைஞர் என்பதைத் தாண்டி என்னை நானே ஒரு பிராண்டாக உருவாக்கி பலருக்கு மெண்டர் ஆக இருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறுகிறார் சந்துரு.”

படங்களாக இருப்பவை அனைத்துமே கலைநயம் வாய்ந்ததல்ல, குறிப்பாக மொபைல் போன்களில் கேமராக்கள் வந்துவிட்டதால் பலரும் ட்ரிக்குகளை வைத்து எடுக்கும் புகைப்படங்கள் எடுத்து மகிழ்கின்றனர். இவ்வகை மகிழ்ச்சியானது சிறிது நேரமே. ஆனால்,

“ஒரு கலை என்றால் அதற்கான மரியாதையைக் கொடுக்க வேண்டும். மொபைல் போனில் மட்டுமே புகைப்படம் எடுத்து புகழ்பெற்றவர் என்று யாராவது இருக்கிறார்களா, இது வெறும் உடனடியாக சாப்பிடும் நூடுல்ஸ் போன்றது எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் கேமராவை கையில் பிடித்து சரியான shutterspeed, focal length செட் செய்து சரியான lighting-இல் புகைப்படங்கள் எடுப்பது மனதிற்கு மகிழ்ச்சியையும் அந்த கலையை வளர்த்தெடுப்பதற்கான ஆத்ம திருப்தியையும் கொடுக்கும்,” என்கிறார் சந்துரு.

இந்திய புகைப்படக்கலைஞரான ரகுராய், அமெரிக்க புகைப்படக்கலைஞர்களான ஸ்டீவ் மெக்கர்ரி, ஆர்ட் வொல்ப் உள்ளிட்டோரை தனது முன்மாதிரிகளாகக் கொண்டு செயல்படும் சந்துரு, ஆர்ட் வொல்ப்பை பார்த்தே பிராண்டுகளுக்கு பின்னால் புகைப்படக்கலைஞன் ஓடாமல் தன்னை ஒரு பிராண்டாக உருவாக்க வேண்டும் என்பதைக் கற்றதாகக் கூறுகிறார்.

dharma chandru

புகைப்படக்கலையில் பிரதானமானது என்றால் திருமணங்கள் மற்றும் பேஷன் ஷோக்களில் எடுக்கும் புகைப்படங்களே, ஆனால் இவற்றில் பங்கெடுக்காமலும் கூட சிறந்த கலைஞராகத் திகழ முடியும் என்பதை ஆர்ட் வொல்ப்பை பார்த்தே கற்றுக்கொண்டேன் என்று கூறும் சந்துரு, நாமே பிராண்டாக மாற முடியும், பிராண்டுகளுடன் சேர்ந்து நாம் செயலாற்ற முடியும் என்பதை உணர்ந்தேன்.


2012ம் ஆண்டு முதல் கேனான் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இவர், 2011 ஐசிசி உலகக்கோப்பை, இந்தியன் சூப்பர் லீக், ஐபிஎல் போட்டிகள், அமேசான், பே பால் உள்ளிட்ட பிராண்டுகளோடும் கரம் கோர்த்து செயல்பட்டு வருகிறார். இந்த நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படும் புகைப்பட போட்டிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார் சந்துரு. Incredible India, enchanting Tamilnadu, Karnataka tourism உள்ளிட்டவற்றுடனும் இணைந்து செயலாற்றி இருக்கிறார் இவர்.

dharmachandru

2010-2011 காலகட்டத்தில் 13 நாட்கள் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 6ஆயிரம் கிலோமீட்டர் சுற்றி புதைந்து கிடந்த புகழ்பெறாத 40 நீர் வீழ்ச்சிகளை கண்டறிந்து என்னுடைய கேமராக்கள் மூலம் அனைவருக்கும் அடையாளம் காட்டி இருக்கிறேன். இதுதவிர ஆஸ்ட்ரோ போட்டோகிராபி, நகரங்களின் பிரதிபலிப்பு என்று பல வகையான புகைப்படங்களைப் பதிவு செய்வதற்காக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்திருக்கிறேன்.


புகைப்படக்கலையில் 20 genreகளை சுற்றி வந்துவிட்டதால் அடுத்தகட்டமாக பேஷன் துறையில் இறங்கத் திட்டமிட்டு இருக்கிறேன். புகைப்படக்கலைஞராகும் ஒவ்வொருவரின் முதல் தேர்வும் பேஷன் துறையாக இருக்கும். ஆனால், நான் சற்றே வித்தியாசகமாக அதனை என்னுடைய கடைசி தேர்வாக வைத்திருக்கிறேன். இதுவரை நான் கற்ற அனுபவங்களை வைத்து இதிலும் என்னுடைய அங்கீகாரத்தைத் பெறுவேன், என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அஜித்-தோனி

தர்மசந்துரு எடுத்த புகைப்படங்கள்

ஏற்கனவே 2 போட்டோஷூட் முடித்துவிட்ட நிலையில், இனி வரும் காலகட்டத்தில் main stream ஊடகமான பேஷன் துறையில் கவனம் செலுத்தத் திட்டமிட்டிருக்கிறார் தர்மச்சந்துரு.


வளர்ந்து வரும் இளம் புகைப்படக்கலைஞர்களுக்கு உலக புகைப்படத்தினத்தில் இவர் கொடுக்கும் செய்தியானது,

“எல்லைகளை வைத்துக்கொள்ளாமல் கலையை கற்றால் வெற்றிகள் நிச்சயம்.”