உலகப் பணக்காரர்: முதல் இடத்துக்கு பெசோஸ்-பில் கேட்ஸ் இடையே நிலவும் கடும் போட்டி!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பதில் மாறி மாறி முன்னிலை வகிக்கும் ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இப்போது முதல் இடத்தில் யார் தெரியுமா?

7th Nov 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

சமீபத்தில் அமேசானின் பங்குகள் சரிந்த நிலையில் அமேசான் நிறுவனர்-சிஇஓ ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.


அமேசான் நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டின் முடிவுகள் வெளியானதை அடுத்து அமேசானின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால் பெசோஸ் சொத்து மதிப்பு 103.9 பில்லியன் டாலராக குறைந்தது. இதன் விளைவாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 105.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்தார்.


ஆனால் அடுத்த ஒரே நாளில் அமேசான் பங்கு மதிப்பு அதிகரித்தது. தற்போதைய சொத்து மதிப்பு 111 பில்லியன் டாலருடன் பெசோஸ் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தார் என ’ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ்’ தெரிவிக்கிறது.

பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் இடையேயான சொத்து மதிப்பில் இதுவரை இல்லாத அளவிற்கு வெறும் 3 பில்லியன் டாலர் மட்டுமே இடைவெளி நிலவுகிறது.

பெசோஸ் அமேசான் பங்குகளில் 12 சதவீதம் வைத்துள்ளார். நிறுவனத்தின் மதிப்பீட்டில் காணப்படும் சிறு ஏற்ற இறக்கங்களும் அவரது சொத்து மதிப்பில் பல பில்லியன் டாலர் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். மூன்றாம் காலாண்டில் அமேசானின் லாபம் 27 சதவீதம் குறைந்ததால் பெசோஸின் சொத்து மதிப்பும் குறைந்தது.

Gates-Besoz


2018-ம் ஆண்டு மத்தியில் 160 பில்லியன் டாலராக இருந்த இவரது சொத்து மதிப்பு இந்த ஆண்டில் பத்து மில்லியன் டாலர் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் இவரது சொத்து மதிப்பு குறையத் தொடங்கியது. இவரது மனைவி மக்கின்சி பெசோஸ் உடனான 25 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவிற்கு வந்தாக அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து 150 பில்லியன் டாலராக இருந்த மதிப்பு 115 பில்லியன் டாலராக குறைந்தது.

மக்கின்சிக்கு 35.6 பில்லியன் டாலர், அதாவது அமேசான் நிறுவனத்தின் பங்குகளில் 25 சதவீதத்தை பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதனால் மக்கின்சி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரர் ஆனதுடன் உலகின் 20 முன்னணி பணக்காரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார்.


இதற்கிடையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்து, குறிப்பாக அதன் க்ளௌட் கம்ப்யூட்டிங் பிரிவின் வளர்ச்சியை அடுத்து பில் கேட்ஸ் சொத்து மதிப்பு இந்த ஆண்டு 18 பில்லியன் டாலர் அதிகரித்தது.

பில் கேட்ஸ் 24 ஆண்டுகள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்தார் என்பதும் 2017ம் ஆண்டு பெசோஸ் அவரை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்போதிருந்து இந்த இரு தொழில்முனைவோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.


பில் கேட்ஸ் 2014-ம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக பங்களிப்பதை நிறுத்திக்கொண்ட பிறகு தனது மனைவியுன் இணைந்து நடத்தி வரும் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்கினார். அத்துடன் தனது ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான சொத்து மதிப்பைக் தொண்டு பணிகளுக்கு ஒதுக்கியுள்ளார்.


இந்த நற்பணிகளை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் இன்று அவர் முதலிடம் வகித்திருப்பார்.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India