Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சமூகம், தொழில், கலைத் துறை என ஜொலிக்கும் இளம் தொழில்முனைவர் கவிப்ரியா ஆனந்தன்!

களம் எதுவாயினும் இறங்கி ஆடி விடும் தன்னம்பிக்கையோடு, துணிவுடன், நெஞ்சில் நிறைந்திருக்கும் கனிவுடன், சமூகத்தில் நலிந்தவர்கள், ஆதரவற்றவர்களை மகிழ்வித்து மகிழும் மனிதாபிமானம் கொண்டவராக பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்து வருகிறார் இளம் தொழில்முனைவோரான கவிப்ரியா.

சமூகம், தொழில், கலைத் துறை என ஜொலிக்கும் இளம் தொழில்முனைவர் கவிப்ரியா ஆனந்தன்!

Tuesday September 07, 2021 , 3 min Read

ரத்தன் டாடா, அப்துல் கலாம், இன்போசிஸ் நாராயண மூர்த்தி, ஆதி கோட்ரேஜ், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற எல்லோரின் பாராட்டையும் பெற்ற பெண், உலகப் புகழ் வாய்ந்த ஹார்வார்ட் பிசினஸ் ஸ்கூல் மாணவி, தொழில் ஞானம், படிப்பு, கலை, நடனம், எழுத்து, சினிமா இயக்கம்- இப்படி பல துறைகளில் நேர்த்தி கொண்ட திறமை, இவை அனைத்தையும் ஒருங்கேப் பெற்று அத்தனையையும் அழகாய் கொண்டு செல்லும் நவீனப் பெண் தான் கவிப்ரியா ஆனந்தன்!

kavipriya

கவிப்ரியா ஆனந்தன்

 அப்படி என்ன செய்து விட்டார்? செய்துக்கொண்டிருக்கிறார்?


மூன்று நிமிடத்தில் தான் சொல்ல வேண்டிய கருத்துக்களை பொட்டில் அறைந்தாற் போல் தெளிவாகப் பேசுகிறது சென்னையைச் சேர்ந்த தொழில்முனைவோரான கவிப்ரியா ஆனந்தன் இயக்கியுள்ள, ‘புரொடக்ட் (PROTECT) -கலையும் கனவுகள்’ குறும்படம்.


இக்குறும்படம் சர்வதேச அளவில்  திரை விழாக்கள் பலவற்றில் திரையிடப்பட்டு அபரிதமான  பாராட்டுகளைப் பெற்றுள்ளது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி பிரபல இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் இப்படத்தால் கவரப்பட்டு சமூக வலைதளங்களில் பாராட்டி பதிவிட்டு அதன் தகுதியை பறைசாற்றி உள்ளது பெருமைப்பட வேண்டிய விஷயம்.

சிறந்த தொழில்நுட்பத்தோடு தன் மனதில் நினைத்ததை காட்சிகளிலும் தெளிவாகக் கொண்டு வந்திருப்பது தான் கவிப்ரியாவின் சாமர்த்தியம். பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லோருக்கும் நிச்சயம் இந்தப் படம் பதைபதைப்பை ஏற்படுத்தும்.

இக்கருவை தேர்ந்தெடுத்ததேன்? 

தொழிலதிபர், எழுத்தாளர், இயக்குநர், கதக் நடனம் எனப் பன்முகத் திறமையாளரான கவிபிரியா தான் எடுத்துள்ள குறும்படத்தின் கரு பற்றி விளக்கியபோது,

"பாலியல் தொழிலாளி என முகம் சுளிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணிற்கு பின்னிலும் ஒரு கதை இருக்கிறது. வீட்டில் அவளும் தேவதையாகப் பிறந்து, கொண்டாடப்பட்டு, கனவுகளோடு வளர்க்கப்பட்டிருப்பாள். கடத்தல் போன்ற கயமையின் சதியால், அவளது வாழ்க்கை மாறியிருக்கலாம். அவர்களும் மரியாதைக்குரியவர்களே. கலைந்த, கலைக்கப்பட்ட அவர்களது கனவுகளை அழுத்தமாக பதிவு செய்ய நினைத்தேன்,” என்றார்.

தன் குறும்படம் பற்றி கவிப்ரியா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் அவரது சமூக அக்கறைத் தெரிகிறது. கவிப்ரியா, பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். ஹார்வேர்டு பல்கலைகழக மாணவியான இவர், சென்னையில், ‘Adding Smiles' 'ஆடிங் ஸ்மைல்ஸ்' என்ற நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.


உலகமே சிதைந்து சின்னா - பின்னமான இந்த கொரோனா கால கட்டத்திலும் கூட டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனச் சொல்லப்படும் ஆன்லைன் தொழில் மூலம் தொழிலை நசியாமல் பார்த்துக் கொண்டது இவரது சாமர்த்தியம்!

with A.R.Rahman

ஊட்டியில் பிறந்து வளர்ந்தவரான கவிபிரியா, சிறுவயது முதலே நடனத்திலும், சமூக சேவையிலும் ஆர்வம் கொண்டவராக இருந்து வந்துள்ளார். தன் பள்ளிப் பருவத்திலேயே ஆதரவற்றோர் மற்றும் காதுகேளாதோர், வாய் பேச முடியாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ளோருடன் ஆடிப்பாடி அவர்களைச் மகிழ்விப்பது, அங்குள்ளோரின் பிறந்தநாளைக் கொண்டாடுவது போன்றவற்றை ஆரம்பித்து விட்டார்.


இதுவரை, சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிறந்தநாள்களை அவர் கொண்டாடியுள்ளார். அதோடு நடனம் மூலம் மற்றவர்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும் என்பதே கவிபிரியாவின் நம்பிக்கை. தற்போது பிஸியான தொழில் முனைவோராக வலம் வரும் வேளையிலும் மறக்காமல் விடுமுறை நாட்களில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று வருகிறார்.


சின்ன வயசுல இருந்தே எனக்கு கதை சொல்றது ரொம்ப பிடிக்கும். 7ம் வகுப்பு படிக்கும் போதே அப்துல்கலாம் ஐயா அவர்களுடைய புத்தகத்திற்காக வேலை பார்த்திருக்கிறேன். அந்தந்த வயதிற்கு தகுந்த மாதிரி குணாதிசயங்களை எழுத்தில் கொண்டு வருவது என்னுடைய சிறப்பு. அதேமாதிரி நடனமும் எனக்கு  பிடித்த ஒன்று.

”நடனத்தை ஒரு கருவியாகக் கொண்டு மற்றவர்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும் என நம்புகிறேன். அப்படி ஆரம்பித்தது தான் (Adding Smiles – Happiness Factory) ஹேப்பினஸ் பேக்டரி! இதன் முக்கியக் குறிக்கோளே மற்றவர்களை, குறிப்பாக ஆதரவற்றவர்களை நடனம் மூலம் எப்படி மகிழ்ச்சி படுத்துவது என்பது தான்!, என்கிறார் கவிப்ரியா. 
happiness factory

ஆதரவற்ற குழைகளுடன் நடனம் ஆடும் கவிப்ரியா

இப்படி சமூக அக்கறையுடன் ஆரம்பித்த ஒரு விஷயம், இன்று கன்டென்ட் தொழிலில் நம்பகத்தன்மையான நிறுவனமாக ’ஆடிங் ஸ்மைல்ஸ்’ நிறுவனம் திகழ்கிறது.


கல்லூரிப் படிப்பிற்காக சென்னை வந்தவர், முதலாம் ஆண்டு படிக்கும் போதே தொழில் முனைவோர் ஆகி விட்டார். முதலில் பகுதி நேரமாக Harley Davidson எனும் வாகன கம்பெனியில் Business Head வேலை! அதில் சம்பாதித்த பணத்தை முதலீடாகக் கொண்டு, சொந்த நிறுவனம்!


மூன்று பேர்களுடன் ஆரம்பிக்கப் பட்ட அதில், இன்று 97 ஊழியர்கள், 14க்கும் மேற்பட்ட நாடுகளில் ’ஆடிங் ஸ்மைல்ஸ்’ நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவை எல்லாமே இவரது கடின, ஆத்மார்த்த, சமயோசித்த உழைப்பின் வெகுமதி. வெளி நாடுகளில் போல இங்கும் படிப்போடு உழைப்பையும் தொடர்ந்திருக்கிரார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

with ratan tata

ரத்தன் டாடா உடன் கவிப்ரியா ஆனந்தன்

கடந்த 2017ம் ஆண்டு “இளம் சாதனையாளர் விருது”, 2018 ம் ஆண்டு “சிறந்த சமூக தொழில்முனைவோர் விருது”, 2020ம் ஆண்டு மரியாதைக்குரிய “டைம்ஸ் பிசினஸ் விருது” ; என இளம் வயதிலேயே தொழில் சார்ந்து விருதுகளைக் குவித்து வருகிறார். தொழிலில் ஒருபுறம் வெற்றியாளராக சாதித்து வரும் கவிப்ரியா, கலையும் கனவுகள் போல் சமூக அக்கறைக் கொண்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

வெற்றியின் ரகசியம்?

”கடின உழைப்புக்கு நிகர் வேறு எதுவுமில்லை. நிச்சயம் நமது உழைப்பிற்கான பலன் நமக்கு கிடைக்கும். முதலில் நமக்கான பாதை எது என்பதில் தெளிவு இருக்க வேண்டும். பின்பு அதற்கான தேடல் அவசியம். தொடர்ந்து அதில் பயணிக்க, பயணிக்க நமது பாதை புரியும். எப்போதும் முதல் அடி எடுத்து வைக்க பயப்படக்கூடாது. அதுதான் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். தயக்கம் காட்டக்கூடாது. எடுத்த காரியத்தில் கடின உழைப்பைத் தர மறக்கக்கூடாது,” என வருங்கால தொழில்முனைவோர்களுக்கு அறிவுரை கூறுகிறார் கவிப்ரியா.