2022: யூடியூப்பில் ட்ரென்ட் ஆன டாப் 10 இந்திய வீடியோஸ்!
யூடியூப் 2022ம் ஆண்டு ட்ரெண்டாகி கலக்கிய டாப் 10 வீடியோக்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டும் விரைவில் முடியப்போகிறது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போதும், அந்த ஆண்டு நடந்த நல்ல விஷயங்களை நினைவு கூர்வதை மனிதர்களைப் போல் இப்போது பன்னாட்டு நிறுவனங்களும் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், யூடியூப் 2022ம் ஆண்டு ட்ரெண்டாகி கலக்கிய டாப் 10 வீடியோக்களின் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காலத்தில் சாமானியர்கள் தொடங்கி பிரபலங்கள் வரை பலருக்கும் யூடியூப் பொழுதுபோக்குத் தளமாகவும், வருவாய் ஈட்டும் இடமாகவும் மாறியது. அதனால் 2022ம் ஆண்டு சோசியல் மீடியாக்களைப் பொறுத்தவரை யூடியூப்பின் பங்களிப்பு மிகப்பெரியதாக உருவெடுத்துள்ளது.
அந்த வகையில், யூடியூப் நிறுவனம் சிறந்த டிரெண்டிங் வீடியோக்கள், சிறந்த மியூசிக் வீடியோக்கள், சிறந்த குறும்படங்கள், சிறந்த 20 பிரேக்அவுட் கிரியேட்டர்கள், மற்றும் சிறந்த பெண் கிரியேட்டர்கள் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்டுள்ளது.
2022ல் ட்ரென்ட் ஆன டாப் 10 வீடியோக்கள்:
1. ஏஜ் ஆஃப் வாட்டர் ஃப்ரம் ரவுண்ட்2ஹெல் (Age of Water from Round2Hell) இந்த ஆண்டு யூடியூப்பில் 54 மில்லியன் பார்வைகளைப் பெற்று அதிக ட்ரென்ட் ஆன வீடியோவில் டாப்பில் உள்ளது. நம் வாழ்வில் தண்ணீரின் முக்கியத்துவத்தை காட்டும் இது ஒரு டாக்குமெண்டரி படமாகும்.
2. 56 மில்லியன் பார்வைகளுடன், ’ஷார்க் டேங்க்’ ஷோவின் (Shark Tank Show) ஆஷிஷ் சஞ்சலானி பங்கேற்ற ‘சாஸ்தா ஷார்க் டேங்க் பகடி’ வீடியோ வைரலாகியுள்ளது.
3. கேரிமினாட்டியின் இந்தியன் ஃபுட் மேஜிக் (CarryMinati's Indian Food Magic) வீடியோ 33 மில்லியன் பார்வைகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.
4. சன் டிவியின் (Sun TV) யூ-டியூப் சேனலில் வெளியிடப்பட்ட 'பீஸ்ட்' ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘அரபிக்குத்து’ ப்ரோமோ வீடியோ 33 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
5. ஹர்ஷ் பெனிவாலின் டாரு வித் டாட் 3 (Daaru with Dad 3) இந்த ஆண்டு 25 மில்லியன் பார்வைகளுடன் சிறந்த டிரெண்டிங் வீடியோக்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது.
6. பிபி கி வைன்ஸின் தானியங்கி கார் வீடியோவை இதுவரை 21 மில்லியன் பேர் கண்டு ரசித்துள்ளனர்.
7. தி மிருதுலின் 'தூதியா' 38 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.
8. GTA V கேம்ப்ளே-யின் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் சந்திப்பு சம்பந்தமான வீடியோ 27 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.
9. “Free Fire World Series 2022 Sentosa Final” வீடியோவை 20 மில்லியன் பேர் கண்டுள்ளனர்.
10. அமித் பதனாவின் 'சித்தியா கர்' 19 மில்லியன் வியூஸ்களைப் பெற்றுள்ளது.