2022: தமிழ்நாட்டில் தொடங்கி இந்திய அளவில் திரும்பி பார்க்கவைத்த 10 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்!
ட்ரோன் துறை தொடங்கி பேமெண்ட் கேட் வே வரை பல துறைகளிலும் 2022-ல் மகத்தான வெற்றிகளை அடைந்து, தமிழ்நாட்டில் தொடங்கி இந்திய அளவில் திரும்பி பார்க்கவைத்து கோடிகளை குவிக்கும் 10 நிறுவனங்களைப் பற்றியது இந்தத் தொகுப்பு.
தொழில்முனைவுப் பாதையில் சவால்கள் பலவற்றை சந்தித்து வெற்றியை நோக்கி பயணித்து வருபவர்களை தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது யுவர் ஸ்டோரி தமிழ். ஸ்டார்ப் அப் உலகில் களமிறங்கிய இளைஞர்கள் எப்படி எதிர்நீச்சல் போட்டு ஸ்டார்களாக ஜொலிப்பதோடு மட்டுமில்லாமல், முதலீடுகளை குவித்து தங்கள் தொழிலை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றவர்கள் ஒரு சிலரே.
அப்படி ஸ்டார்ட்-அப் ஆக தொடங்கி பல்வேறு துறைகளில் வேகப்பாய்ச்சல் எடுத்து, இந்திய அளவில் பிரபலமாகி, கோடிகளில் வருவாய் குவிக்கத்துவங்கிய தமிழ்நாட்டைச்சேர்ந்த நிறுவனங்கள் பலவற்றை 2022 ஆண்டில் யுவர்ஸ்டோரி தமிழ் அடையாளம் கண்டது. அவர்களில் இருந்து ஒரு சில வெற்றியாளார்களின் கதைகளின் தொகுப்பு இதோ!
2022ல் திரும்பிப் பார்க்கவைத்த தமிழக ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்
ட்ரோன் துறையில் பறக்கும் சென்னை நிறுவனம்:
இந்தியாவில் வளர்ந்துவரும் ட்ரோன் துறையில் முன்னிலை வகிக்கிறது சென்னை நிறுவனமான ‘கருடா ஏரோஸ்பேஸ்’ (
). பள்ளி, கல்லூரி காலத்தில் பிரபல நீச்சல் வீரராக இருந்த அக்னீஷ்வர், பின்னர், தொழில்முனைவில் கால்பதித்து, ட்ரோன்களின் தேவைகளை அறிந்து சென்னையில் இந்த நிறுவனத்தைத் தொடங்கி ரூ.150 கோடி வருவாய் இலக்குடன் பயணிக்கிறார்.கருடா ஏரோஸ்பேஸ் ஆரம்பத்தில் ட்ரோன்களின் சேவையை மட்டுமே வழங்கினர். அதாவது, நிறுவனங்களுக்குத் தேவையான ட்ரோன்களை பைலட்களுடன் அனுப்பிவைப்பது. சேவை முடிந்தவுடன் அந்த ட்ரோன் வேறு நிறுவனங்களின் சேவைகாக அனுப்பி வைக்கப்படும். ஆனால், கோவிட் காலத்தில் ட்ரோன்களுக்கு நிறைய ஆர்டர்கள் வந்தன. பல இடங்களில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்தது. தவிர ட்ரோன் பயன்படுத்தி பல வேலைகளை செய்ய முடியும் என்பதையும் இந்நிறுவனம் புரிந்துகொண்டது.
மத்திய அரசின் 'கிஷான் ட்ரோன் சுவிதா' என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் துவக்கிவைத்தார். அதில், ’கருடா ஏர்ஸ்பேஸ்’ வேளாண் பணிக்காக 100 அதிநவீன ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அதுதவிர, பல்வேறு தேவைகளுக்காக, 2500 ட்ரோன்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2024-ம் ஆண்டில் ஒரு லட்சம் ட்ரோன்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறாது கருடா ஏரோஸ்ப்பேஸ்.
முழுமையாக வாசிக்க: ரூ.150 கோடி இலக்குடன் சென்னை இளைஞரின் ட்ரோன் நிறுவன பயணம்!
பெண்கள் உள்ளாடை விற்பனையில் புது முயற்சி
அன்றாட வாழ்பனுவத்தில் இருந்து பிறந்த யோசனையின் உதயமானது கோபிநாதன் நிறுவிய ‘ஷைஅவே’ (
) என்னும் இ-காமர்ஸ் நிறுவனம். பெண்களுக்கான உள்ளாடைகளை இந்தியா முழுவதும் விற்பனை செய்யும் இந்நிறுவனம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை நிறுவி இருப்பவர் கோபிநாதன், சென்னையில் இருந்து இயங்கும் இது இந்தியா முழுதும் சேவை அளிக்கிறது.நிறுவனம் தொடங்கி மூன்று வாரங்களில்தான் முதல் ஆர்டர் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சீராக ஆர்டர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தற்போது சராசரியாக தினமும் 800 ஆர்டர்கள் வருவதாக, நிறுவனம் தெரிவிக்கிறது.
இவர்களுடைய வாடிக்கையாளர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ளனர். சராசரியாக ஒரு வாடிக்கையாளர்கள் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆர்டர் செய்கிறார்.
கடந்த நிதி ஆண்டில் சுமார் 40 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டினர். வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால் இந்தாண்டு 100 கோடி ரூபாய் விற்பனையை இலக்காகக் கொண்டு செயல்பட்டுவருகின்றனர்.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதன் பின்னணியில் ஒரு நிஜக் கதையும் உண்டு. அது குறித்து
விரிவாக வாசிக்க: ஆன்லைனில் ரூ.40 கோடி வருவாய்: சென்னையில் தொடங்கிய பெண்கள் உள்ளாடைகள் ப்ராண்ட்!
பேமெண்ட் கேட்வே-யில் புது வரவு:
சென்னையில் உருவாகி கவனம் ஈர்க்கும் மற்றொரு நிறுவனம் ‘இணை டெக்னாலஜீஸ்’. கார்த்திக் நாராயணன் மற்றும் அனந்த பட்டாபிராமன் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம், தேவைப்படும் நிறுவனங்களுக்கு பேமண்ட் கேட்வே வசதி செய்து தரும் டெக் நிறுவனம்.
தற்போது சர்வதேச அளவில் எங்கிருந்து வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். ஆனால், அவர்களிடம் இருந்து பணத்தை வசூலுப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. கரன்ஸி, பேமெண்ட் கேட்வே என பல சிக்கல்கள் இருக்கின்றன. இந்த சிக்கலுக்கான தீர்வை வழங்க உருவாக்கப்பட்டதுதான் இந்த நிறுவனம்.
கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி ‘இணை டெக்னாலஜீஸ்’ தொடங்கப்பட்டது. எந்தத் தொழிலிலும் இருக்கலாம், அவர்களுக்கான பேமெண்ட் கேட்வேவை ‘இணை’ மூலம் எளிதாக அமைத்துக்கொள்ளலாம்.
60 நிமிடங்களில் 6 கண்டங்களில் உள்ள நாடுகளில் இருந்து பேமெண்ட் பெற்றுக்கொள்ள முடியும். தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் பல பேமெனெட் முறைகள் இருக்கும். இவற்றில் பெரும்பாலானவற்றை இவர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 4 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி திரட்டி இருக்கிறார்கள். ஒரு மணிநேரத்தில் பேமெண்ட் கேட்வேவை ஒருங்கிணைக்க முடியும்.
இந்நிறுவனம் உருவான கதை: 60 நிமிடங்களில் பேமெண்ட் கேட்வே ரெடி: நிறுவனங்களுக்கு டெக் சேவை புரியும் ‘இணை டெக்னாலஜீஸ்’
ஆப் உருவாக்கத்தில் அசத்தும் ஸ்டார்ட்-அப்
மென்பொருள் பிரிவில் தற்போது low code no code என்பதில் பெரும்பாலான நிறுவனங்கள் கவனம் செலுத்துகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த ‘வஜ்ரோ’ (
) நிறுவனம் இப்பிரிவில் வேகமாக வளர்ந்து வருகிறது.தற்போதைய நிலையில் இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு செயலிகள் தேவைப்படும். அந்த செயலியில் பொருட்களை வகைப்படுத்துவதற்குத் தேவையான டூல் இருக்க வேண்டும், பேமெண்ட் கேட்வே இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விஷயங்கள் தேவைப்படும்.
இவற்றை சொந்தமாக உருவாக்க வேண்டும் எனில் பல லட்சங்கள் தேவைப்படும். பெரிய நிறுவனங்கள் எனில் கோடிகள் கூட செலவாகும். ஆனால், இதுபோன்ற நிறுவனங்களுக்காக ஏற்கெனவே டூல்களை உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனம்தான் பாஸ்கர் அக்னீஸ்வரன் மற்றும் நிவின் சந்தோஷின் ‘வஜ்ரோ’.
இவர்கள் பலவிதமான டூல்களை வைத்திருக்கிறார்கள். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அவற்றை தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தேவையான செயலியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவேளை கூடுதலாக எதாவது வசதி தேவை என்றால் குறைந்த கோடிங் பயன்படுத்தினால் போதும். இதுதான் low code no code.
இந்நிறுவனம் குறித்து முழுமையாக அறிந்துகொள்ள: ஆன்லைன் பிசினஸ் நிறுவனங்களுக்கு 60 நிமிடங்களில் ஆப் ரெடி செய்து தரும் சென்னை நிறுவனம்!
ஆன்லைனில் மாம்பழ விற்பனை
‘மேங்கோ பாயிண்ட்’ (
) என்பது மாம்பழங்களை ஏற்றுமதி செய்யும் சென்னை நிறுவனம். திருவள்ளூர் அருகே ஒரு ஆலை அமைத்து அங்கு பழங்களை வரிசைபடுத்தி ஏற்றுமதி செய்யத் தொடங்கினார்கள் பிரசன்னா வெங்கடரத்தினம் மற்றும் மஞ்சுளா காந்தி ரூபன் இணையர்.2021-ம் நிதி ஆண்டில் சுமார் 1.75 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தோம். கடந்த நிதி ஆண்டில் 3.15 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்தனர். நடப்பு நிதி ஆண்டில் சுமார் 8 கோடி அளவுக்கு வருமானம் நிர்ணயம் செய்துள்ளனர்.
2020ல் கொரோனா காலத்தில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதால், இவர்கள் இ-காமர்ஸ் மூலம் தங்களிடம் தங்கிப்போன மாம்பழங்களை விற்கத்தொடங்கினர். இதுவே நல்ல ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியா ஆக MangoPoint ஆன்லைன் மூலம் மாம்பழங்களை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வேகமாக வளர்ந்து வருகிறது.
நேரடி தவிர இதர ரீடெய்ல் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்கிறார்கள். மாம்பழம் இருக்கும் காலத்தில் மாம்பழங்களுக்கான பேக் ஹவுஸ் ஆக இது செயல்படும். இதர காலங்களை காய்கறி மற்றும் பழங்களை விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்யும் பேக் ஹவுஸ் ஆக இது இருக்கும். இந்த நிறுவனத்தில் சென்னை ஏஞ்சல்ஸ் , நேட்டிவ் ஏஞ்சல் நெட்வோர்க், கெய்ருட்சு ஆகிய நிறுவனங்கள் இணைந்து 1.82 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கின்றன.
இந்த நிறுவனம் உருவான கதையும், கோவிட் தந்த தாக்கத்தின் விளைவும் கவனிக்கத்தக்கவை. அதுகுறித்து விரிவாக வாசிக்க: ரூ.3.15 கோடி மதிப்பு மாம்பழங்களை விற்பனை செய்த நிறுவனம் நடத்தும் சென்னை தம்பதி!
ஸ்டார்ட்-அப் உலகில் சாதித்துக் காட்டும் நண்பர்கள்
ஜீரோவில் தொடங்கி இப்போது மில்லியன்களை ஈட்டும் ‘காண்டஸ்’ (
) எனும் ஸ்டார்ட்-அப் உருவாக்கத்துக்குப் பின்னால் நிறுவனர் ஸ்ரீராம் மனோகரன் மற்றும் இணை நிறுவனர் பாலா கந்தசுவாமி இருக்கின்றனர். இந்த சென்னை நண்பர்கள் தொடங்கிய இந்த நிறுவனத்தில் இப்போது 400-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் அளவுக்கு மகத்தான வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.தொழில்நுட்ப ரீதியில் காலத்துக்கு ஏற்றார்போல் புராடக்டுகளை வழங்குவதுதான் இவர்களின் ஹைலைட். ஹெல்த்கேர், இ-காமர்ஸ், நிதிச்சேவைகள், இ-லேர்னிங் என பல இடங்களில் இவர்களுடைய புராடக்ட் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் உருவாக்கியுள்ளனர்.
கையில் சில பல சூப்பர் ஐடியாக்களும், தீவிர முயற்சியும் இருந்தாலே புதிய நிறுவனத்தைத் தொடங்கி சிறப்பாக ஏற்றம் காண முடியும் என்பதற்கு இவர்களே உதாரணம்.
இவர்கள் குறித்து முழுமையாக வாசிக்க: ஜீரோ டு ரூ.35 கோடி: நண்பர்கள் தொடங்கிய சென்னை நிறுவனத்தின் வளர்ச்சிக் கதை!
சிறு நிறுவனங்களுக்கு பெரிய சேவை
சிறு நிறுவனங்களும் தங்களுக்கு டெக்னாலஜி அவசியம் என்பதை புரிந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பம் இல்லை என்பதே களம். இந்த இடைவெளியை புரிந்துகொண்ட லோகேஷ் வேலுசாமி, சிறு நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
கோவையைச் சேர்ந்த இந்த
என்னும் ஸ்டார்ட்-அப் நிறுவனம், சிறு நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்கித் தரும் சேவையை புரிகிறது.ரீடெய்ல், ஜூவல்லரி, பவுல்ட்ரி, உற்பத்தி என 14 வகையான துறைகளுக்குத் தேவையானவற்றை இவர்கள் வழங்குகிறார்கள். மாதம் 156 ரூபாய்க்குக் கூட இவர்களின் சாப்டவேரை பயன்படுத்த முடியும். தேவைக்கு ஏற்ப இதற்கான கட்டணம் உயரந்துகொண்டே இருக்கும்.
தற்போது 400க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்கள் இவர்களின் சாப்ட்வேரை பயன்படுத்துகிறார்கள். பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் உடனடியான விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் இதனை வடிவமைத்துள்ளனர்.
இந்த நிறுவனம் உருவான கதையும், செயல்படும் விதமும் நிச்சயம் பிசினஸ் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கக் கூடும்.
அது குறித்து முழுமையாக வாசிக்க: சிறு நிறுவனங்கள் அடுத்தக்கட்ட வளர்ச்சி அடைய டெக்னாலஜி சேவையை வழங்கும் கோவை நிறுவனம்!
சென்னையில் இருந்து அடுத்த யூனிகார்ன்
2014-ம் ஆண்டு சென்னையில் சுயநிதியில் மூன்று இளைஞர்களால் தொடங்கப்பட்ட ‘
Fintech' என்னும் நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப், இன்று அபார வளர்ச்சி அடைந்து இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சேவை அளிக்கும் 60 கோடி டாலர் (சுமார் ரூ.4500 கோடி) மதிப்பு நிறுவனமாக ஆகியுள்ளது.விரைவில் யூனிகார்ன் நிலையை எட்ட இருக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனர்கள் பிரபு, மதுசுதனன் மற்ரும் முத்துகுமார். அக்மார்க் தமிழர்களான இவர்களின் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 60 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த 3 ஆண்டுகளில் சராசரியாக மூன்று மடங்கு அளவு வளர்ச்சி அடைந்திருக்கின்றனர். இடையில் இரு நிறுவனங்களை கையகப்படுத்தினர். 2020-ம் ஆண்டுக்கு முன்பாக பணியாளர்களின் எண்ணிக்கை 100-க்குள்ளாக மட்டுமே இருந்தது. தற்போது 650 ஊழியர்கள் உள்ளனர்.
கிரெடிட் கார்டு, பிரீபெய்ட் கார்டு, டிராவல் கார்டு உள்ளிட்ட பல சேவைகளை நாட்டில் உள்ள முக்கியமான வங்கிகளுக்கு வழங்கி வருகிறது ‘M2P Fintech'.
அடுத்த சில ஆண்டுகளில் ஃபின் டெக் துறையின் முக்கிய நிறுவனமாக எம்2பி இருக்கக்கூடும் என்பதில் சந்தேமேயில்லை.
அந்நிறுவனம் உருவான கதை இதுதான்: சென்னையில் இருந்து ரூ.4500 கோடி மதிப்பு ஃபின்டெக் நிறுவனம்: மூன்று இளைஞர்களின் அசாத்திய வெற்றிக்கதை!
சிறு நிறுவனங்கள் கல்லா கட்ட உதவும் ஸ்டார்ட்-அப்
கார்த்திக் ஜெகந்தாதன், யோகேஷ் நாராயணன் மற்றும் யதிந்தர் பஞ்சநாதன் ஆகிய மூன்று நண்பர்கள் இணைந்து சென்னையில் உருவாக்கிய நிறுவனம் '
'சிறு நிறுவனங்களுக்கு ஒரு லீட் கிடைக்கும். அதனை பிஸினஸாக மாற்றுவதில்தான் வெற்றியும், வருவாயும் இருக்கிறது. அங்குதான் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. லீட் கிடைப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன, அதனை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் இருந்தன. அதைத்தான் வாய்ப்பாக பார்த்தனர் ‘கல்லாபாக்ஸ்’ நிறுவனர்கள்.
வாட்ஸ்-அப் பயன்பாடு அதிகரித்ததான் காரணமாக, ஒரு நிறுவனத்துக்கு ஒரு வாட்ஸ் அப் எண். அதில் எத்தனை ஆயிரம் பரிவர்த்தனைகள் நடந்தாலும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ள முடிகிற மாதிரியான ஒரு சாப்ட்வேரை வடிவமைத்தனர். இதன் மூலம் எவ்வளவு லீட் வருகிறது. அதன் தற்போதைய நிலை என்ன, யார் வாடிக்கையாளர்களாக மாறி இருக்கிறார்கள், அந்த பரிவர்த்தனையில் என்ன தவறு நடக்கிறது என்பது உள்ளிட்ட பலவற்றையும் ஒரே இடத்தில் பார்த்துக்கொள்ள முடியும்.
அதனால், சிறு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கும் இவர்கள், ஒரு மாதம் ஒரு பயனாளருக்கு ரூ.500 மட்டுமே வாங்குகின்றனர். அமெரிக்காவில் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அதைவிட இந்தியாவில் 7 கோடி சிறு நிறுவனங்கள் உள்ளன. டிஜிட்டலுக்கு மாறாமல் தொழில் விரிவடையாது என்பதை சிறு நிறுவனங்களும் புரிந்து வைத்துள்ளன. அதனால் இங்கு வாய்ப்பு அதிகம், என்பதால் வேகமாக வளர்ந்து வருகின்றனர்.
பிரைம் வென்ச்சர் பார்ட்னஸ், 100X எண்டர்பிரனர் ஃபண்ட் உள்ளிட்ட முதலீட்டு நிறுவனங்களிடமிருந்து 1.2 மில்லியன் டாலர் நிதியை திரட்டி இருக்கிறது.
இப்படி வேகமாக வளர்ந்து வரும் கல்லாபாக்ஸ் பற்றி விரிவாக படிக்க: சிறு நிறுவனங்கள் கல்லா பெட்டியை நிரப்ப உதவிடும் சென்னை ஸ்டார்ட்-அப் ‘Gallabox'
ஓர் அசாதாரண சாதனைப் பயணம்
மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த மோகன் ‘இப்போ பே’ (
) என்கிற பேமெண்ட் அக்ரிகேட்டர் ஸ்டார்ட் அப் தொடங்கி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த சிறு வணிகங்கள் கட்டணங்கள் பெற உதவுகிறார்.ராமேஸ்வரத்தில் உள்ள தாமரைக்குளம் என்கிற சிறிய கிராமத்தில் உள்ள மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, பட்டப்படிப்பு முடித்து சம்பாதிக்கும் நோக்கத்துடன் சென்னை வந்தார். சிறு நிறுவனம் ஒன்றில் புரோக்கிராமராக வேலை செய்தபோதும் சொந்தமாக தொழில் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்கிற ஆர்வம் தொடர்ந்து அவருக்கு இருந்தது.
2010-ம் ஆண்டு வெப் டெவலப்மெண்ட் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். விரைவில் இந்நிறுவனம் நல்ல வருவாய் ஈட்டத் தொடங்கியது. 50-க்கும் மேற்பட்ட பேமெண்ட் அக்ரிகேட்டர்களை ஒருங்கிணைத்ததால், இவருக்கு தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. மெல்ல தன் வெப் டெவலப்மெண்ட் நிறுவனத்தை சாஃப்ட்வேர் டெவலெப்மெண்ட் நிறுவனமாக ஆக்கினார்.
அடுத்தக்கட்ட பாய்ச்சலுடன் கிராமப்புற இந்தியாவுக்கான வங்கிச் சேவைகளை வழங்கும் ‘இப்போ பே’ (IppoPay) காயின்பேஸ் வென்சர்ஸ், பெட்டர் கேபிடல், ப்ளும் பவுண்டர்ஸ் ஃபன்ட் மற்றும் முன்னணி ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து 2.1 மில்லியன் டாலர் விதை நிதி பெற்று அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது.
தொடர்ந்து வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தி தமிழகத்தில் முன்னணி வகிக்கவும், அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் செயல்படவும் திட்டமிட்டுள்ள இந்நிறுவனத்தின் உத்வேகக் கதை இது: ரூ.1 கோடி வர்த்தகம் செய்த 'IppoPay'- லாக்டவுனில் தொடங்கிய ராமேஷ்வர மீனவரின் மகன்!
2021: கடுமையான காலத்திலும் சவாலை சமாளித்து வெற்றிப் பாதை கண்ட ‘ஸ்டார்ட் அப் நாயகர்கள்’
Edited by Induja Raghunathan