முக்கிய நகரங்களுக்கு கஃபே சேவை விரிவாக்கம்: 2026-க்குள் ரூ.1000 கோடி வருவாய் குறிவைக்கும் Zepto!
இன்றைய வேகமான நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு விரைவான உணவுகளை வழங்கும் ஆன்லைன் கஃபே, புதிதாக காய்ச்சப்பட்ட சாய், காபி, நாள் முழுவதும் காலை உணவு, பேஸ்ட்ரிகள் மற்றும் சுவையான சிற்றுண்டிகள் உட்பட 148 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட பல்வேறு மெனுவைக் கொண்டுள்ளது.
விரைவு வர்த்தக தளமான Zepto, தங்களது கஃபே சேவையை முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்துவதாக அறிவித்தது. மேலும், 2026-ம் ஆண்டுக்குள் ரூ.1,000 கோடி ரெவின்யு ரன் ரேட் (RRR)-ட்டிற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
RRR என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரெவின்யு ரன் ரேட் என்பது நிறுவனத்தின் நிதி வருவாய் அளவீடாகும். அதாவது, நிறுவனத்தின் சமீபத்திய வருவாயை ஓராண்டுக்குக் கணிப்பதன் மூலம் நிறுவனத்தின் எதிர்கால வருவாயைக் கணிக்கும் அளவீடாகும்.
இந்த ரெவின்யூ ரன் ரேட் இலக்கை எட்ட மும்பை, டெல்லி, பெங்களூரு, விரைவில் ஹைதராபாத், சென்னை, புனேயிலும் கஃபேக்களைத் தொடங்குவதன் மூலம் அடைய திட்டமிட்டுள்ளது ஜெப்டோ.
ஜெப்டோ சி.இ.ஓ. ஆதித் பலிச்சா இது தொடர்பாகக் கூறியபோது,
“உயர்தர உணவு தயாரிப்பு செயல்முறைகளுடன் 10 நிமிட டெலிவரியை நாங்கள் சாத்தியமாக்கியுள்ளோம். இதனாலேயே வாடிக்கையாளர்களின் அன்பைப் பெற்றுள்ளோம். எங்கள் கஃபேக்களுக்கான அதி நவீன சாதனங்களை வாங்க எங்கள் குழு முழுவீச்சுடன் ஆய்வு செய்தது. இதில், கையாலேயே காய்ச்சும் முறைகள் கொண்ட காஃபி எந்திரமும் உள்ளடங்கும். எங்களின் விரிவடைந்து வரும் டார்க் ஸ்டோர் நெட்வொர்க்கில் வெறும் 15% மூலம் Zepto Cafe இப்போது 160 கோடி ரூபாய் (மதிப்பிடப்பட்ட) வருடாந்திர ரன் ரேட்டை (ARR) அடைந்துள்ளது."
நாங்கள் புதிய நகரங்களுக்கு விரிவடைந்து, ஒவ்வொரு மாதமும் 100-க்கும் மேற்பட்ட புதிய கஃபேக்களை தொடங்குவதால், அடுத்த நிதியாண்டில் ரூ.1,000 கோடி ARR ஐ அடைவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம், என்று கூறினார் சி.இ.ஓ. பலிச்சா.
இன்றைய வேகமான நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு விரைவான உணவுகளை வழங்கும் ஆன்லைன் கஃபே, புதிதாக காய்ச்சப்பட்ட சாய், காபி, நாள் முழுவதும் காலை உணவு, பேஸ்ட்ரிகள் மற்றும் சுவையான சிற்றுண்டிகள் உட்பட 148க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட பல்வேறு மெனுவைக் கொண்டுள்ளது.