Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!
சர்வதேச சாதகப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பச்சை விளக்கு ஒளிர்ந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
சர்வதேச சாதகப் போக்குகளின் எதிரொலியாக, இந்தியப் பங்குச் சந்தை வர்த்தகத்தில் பச்சை விளக்கு ஒளிர்ந்து வருகிறது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.20) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 398.21 புள்ளிகள் உயர்ந்து 77,017.54 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 105.15 புள்ளிகள் உயர்ந்து 23,308.35 ஆக இருந்தது.
பங்குச் சந்தையில் தொடக்கத்தில் இருந்தே ஏற்றம் நிலவி வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதே ட்ரெண்ட் தொடருமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 272.22 புள்ளிகள் (0.36%) உயர்ந்து 76,891.55 ஆகவும், நிஃப்டி 64.25 புள்ளிகள் (0.28%) உயர்ந்து 23,267.45 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் டோக்கியோ, ஹாங்காங், ஷாங்காய் பங்குச் சந்தைகளில் எழுச்சியும், சியோல் பங்குச் சந்தையில் வீழ்ச்சியும் நிலவுகிறது. சர்வதேச சந்தைகளின் சாதகப் போக்கின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது பொருளாதார நடவடிக்கைகளை சர்வதேச அளவில் வர்த்தகர்கள் உற்று நோக்கியுள்ளனர்.
ஏற்றம் காணும் பங்குகள்:
கோடக் மஹிந்திரா பேங்க்
விப்ரோ
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஏசியன் பெயின்ட்ஸ்
டைட்டன் கம்பெனி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாரதி ஏர்டெல்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
எல் அண்ட் டி
டாடா ஸ்டீல்
ஐடிசி
ஐசிஐசிஐ பேங்க்
சன் பார்மா
டாடா மோட்டார்ஸ்
நெஸ்லே இந்தியா
இன்ஃபோசிஸ்
டிசிஎஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, 14 பைசா குறைந்து ரூ.86.47 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan