Gold Rate Chennai: தங்கம் விலை உயர்வு - சவரன் ரூ.60,000-ஐ நோக்கி நகர்வு...
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில தினங்களில் சவரன் விலை ரூ.60,000-ஐ தொடும் என கருதப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதே நிலை நீடித்தால், இன்னும் சில தினங்களில் சவரன் விலை ரூ.60,000-ஐ தொடும் என கருதப்படுகிறது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 குறைந்து ரூ.7,435 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 குறைந்து ரூ.59,480 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.16 குறைந்து ரூ.8,111 ஆகவும், சவரன் விலை ரூ.128 குறைந்து ரூ.64,888 ஆகவும் இருந்தது. இந்நிலையில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம் - திங்கள்கிழமை (20.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.15 உயர்ந்து ரூ.7,450 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.120 உயர்ந்து ரூ.59,600 ஆகவும் உள்ளது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.12 உயர்ந்து ரூ.8,123 ஆகவும், சவரன் விலை ரூ.96 உயர்ந்து ரூ.64,984 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (20.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,04,000 ஆகவும் மாற்றம் இன்றி விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இப்போது வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை உயர்ந்து வருவதும் ஆபரணத் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையாததற்கு காரணம்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,450 (ரூ.15 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.59,600 (ரூ.120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.8,123 (ரூ.12 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.64,984 (ரூ.96 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை

Edited by Induja Raghunathan