வரலாறு காணாத வீழ்ச்சி; கடும் சரிவை நோக்கி Zomato நிறுவன பங்குகள்!
ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகளின் விலை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளின் விலை வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஜொமோட்டோ, 2021ம் ஆண்டு முதல் பங்கு சந்தையில் கால் பதித்தது. 2021ம் ஆண்டு ஜூலை மாதம் ஜொமாட்டோ ஐபிஓ-விற்கு (IPO) பங்குச் சந்தை ஒழுங்கு ஆணையமான செபி ஒப்புதல் அளித்தது.
இதன் மூலமாக 8,250 கோடி ரூபாய் மூலதனம் திரட்ட ஜொமாட்டோ நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆனால், ஓராண்டில் ஜொமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் நல்ல லாபம் ஈட்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
Zomato தனது மைல்கல் முயற்சியான ஐபிஓ-வை வெளியிட்டு ஓராண்டு நிறைவை எட்டியுள்ளது. இதனிடையே, நிறுவனர்கள், பங்குதாரர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கான ஓராண்டு லாக்-இன் முடிவடைந்ததால், இன்று காலை ஜொமாட்டோ பங்கு விலை 11 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது.
கடந்த வாரம் MoneyControl இடம் பேசிய ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனமான InGovern இன் நிறுவனர் மற்றும் MD ஸ்ரீராம் சுப்ரமணியன், லாக்-இன் காலக்கெடு முடிந்துள்ளதால் வாரம் முழுவதும் ஜொமாட்டோவின் பங்குகள் விற்பனையின் அழுத்தத்தை ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். ஒரு வருட ஓவர்ஹாங்கின் மொத்த செலுத்தப்பட்ட மூலதனம் சுமார் 78 சதவீதமாகும்.
"ப்ரோமோட்டர் இல்லாததால், நிறுவனர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களும், லாக்-இன் செய்யப்பட்ட 77.87 சதவீதத்தை கூட்டாக வைத்திருக்கும் பங்குகளை ஜூலை 23 அன்று எந்த வெளிப்பாடும் இல்லாமல் விற்க முடியும்," எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் கணிப்பை உண்மையாக்கும் வகையில், ஜூலை 25ம் தேதி திங்கட்கிழமை காலை சந்தைகள் தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள், Zomato பங்கு விலை கிட்டத்தட்ட 12 சதவீதம் குறைந்தது. நாம் இதைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பங்கின் தினசரி குறைந்தபட்ச விலை ரூ.46.80ஐ எட்டியிருக்க கூடும்.
ஜொமாட்டோ நிறுவனம் தனது பங்குகளை ஜூலை 23ம் தேதி 2021, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் வெளியிட்ட போது, ஒரு பங்குக்கு ரூ.71 என்ற விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது, 51 சதவீதம் அதிகமான சந்தாவுடன் பட்டியலிடப்பட்டது. கடந்த ஆண்டு சந்தைக்கு வந்தபோது, BSE-யில் ரூ.115-ஐ எட்டியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் மார்க்கெட் புல் ஓட்டத்தின் போது, Zomato பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.169 ஐ எட்டியது.
இதற்கு முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ஜோமாட்டோ பங்குகளின் மதிப்பு பங்குகளின் மதிப்பு சுமார் 12 சதவிகிதம் குறைந்தது. 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் 141.35 ரூபாயாக இருந்த பங்கின் விலை, ஏப்ரல் மாதத்தில் 71.6 ரூபாய் என்ற அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்தது.
ஆங்கிலத்தில் - தருதர் மல்ஹோத்ரா | தமிழில் - கனிமொழி