Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஆண்டுக்கு ரூ.600 கோடி வர்த்தகம் - டிவி தயாரிப்புகளில் சாதிக்கும் பிகாம் பட்டதாரி இளைஞர்!

பிகாம் பட்டதாரி இளைஞர் ஒருவர் டிவி தயாரிப்புத் தொழிலில் சாதித்து, ஆண்டுக்கு ரூ.600 கோடி வர்த்தகம் மேற்கொள்வதுடன், ரூ.1,000 கோடியில் புதிய ஆலையை அமைக்க தீவிரம் காட்டி வருகிறார்.

ஆண்டுக்கு ரூ.600 கோடி வர்த்தகம் - டிவி தயாரிப்புகளில் சாதிக்கும் பிகாம் பட்டதாரி இளைஞர்!

Tuesday May 16, 2023 , 2 min Read

ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கி, அதனை வெற்றிகரமானதாக வடிவமைக்க ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் வணிக மேலாண்மை சம்பந்தமான படிப்பை படித்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்ற எண்ணம் பலரிடமும் உண்டு. ஆனால், பி.காம் படித்த பட்டதாரி இளைஞர் ஒருவர் தனது விடாமுயற்சியால் ஆண்டுக்கு ரூ.600 கோடி வர்த்தக மதிப்புள்ள நிறுவனத்தை கட்டமைத்து சாதித்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த சாகர் குப்தா என்ற பி.காம் பட்டதாரி தனது தந்தையுடன் சேர்ந்து ஆரம்பித்த வியாபாரத்தை சொந்தத் தொழிலாக மாற்றி, தற்போது ரூ.1,000 கோடியில் தொழிற்சாலை அமைக்கும் அளவுக்கு மிகப் பெரிய வர்த்தகமாக மாற்றியுள்ளார்.

யார் இந்த சாகர் குப்தா?

டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டம் பெற்ற சாகர் குப்தாவிற்கு ஆடிட்டர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதேசமயம் சொந்தமாக உற்பத்தி தொழிலை உருவாக்க வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இவரது தந்தையான சிபி குப்தா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செமிகண்டக்டர் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். எனவே, படித்து முடித்த அடுத்த ஆண்டே சாகர் குப்தா தனது வர்த்தகத்தில் பங்கெடுத்தார்.

Ekka

2017-ம் ஆண்டு தந்தையின் வர்த்தகத்தை மாற்றி அமைத்த சாகர் குப்தா, விற்பனையாளரில் இருந்து உற்பத்தியாளராக உருவெடுத்தார். எல்இடி தொலைக்காட்சிப் பெட்டிகளை சொந்தமாக உற்பத்தி செய்து முன்னணி நிறுவனங்களுக்கு சப்ளே செய்ய முடிவெடுத்த சாகர் குப்தா, இதற்காக 2019-ம் ஆண்டு நொய்டாவில் “எக்கா எலக்ட்ரானிக்ஸ்” என்ற தனது சொந்த நிறுவனத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனம் சாம்சங், தோஷிபா மற்றும் சோனி போன்ற பிராண்டுகளுக்கு எல்இடி டிவிக்களை உற்பத்தி செய்கிறது.

சீனாவின் சவால்:

சாகர் குப்தா எல்இடி டி.வி.க்களை தயாரிக்க ஆரம்பித்த காலக்கட்டத்தில் இந்தியாவில் சீன நிறுவனங்களின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது கொண்டிருந்தது. இருப்பினும் விடாமுயற்சியுடன் தொடர்ந்து உற்பத்தியை மேம்படுத்திய சாகர் குப்தாவிற்கு வெற்றி கிடைத்தது.

Ekka

தற்போது சாகர் குப்தாவின் நிறுவனம் எல்சிடி, எல்இடி உள்ளிட்ட உயர் ரெசல்யூஷன் கொண்ட 24 முதல் 60 அங்குலம் வரையிலான டிவிக்களை 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உருவாக்கி வருகிறது. மாதத்திற்கு 1 லட்சம் வரை டிவிக்களை உற்பத்தி செய்யும் இந்நிறுவனம், சில ஆண்டுகளிலேயே மில்லியன் கணக்கான டிவிக்களை தயாரித்து அளித்து சாதனை படைத்துள்ளது.

ஆண்டுக்கு 600 கோடி வர்த்தகம்

தற்போது எல்இடி, எல்சிடி டி.வி. மானிட்டர்களை கடந்து வாஷிங் மெஷின்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் வாட்ச் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை தயாரிக்கும் பணியில் சாகர் குப்தாவின் கவனம் திரும்பியுள்ளது. இதற்காக நொய்டாவில் ரூ.1,000 கோடி முதலீட்டில் தொழிற்சாலை ஒன்றினை கட்டமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது எக்கா எலக்ட்ரானிக்ஸ் தயாரிக்கும் டிவிக்களுக்கு மாநகரங்களை கடந்து 2 மற்றும் 3வது அடுக்குகளில் உள்ள நகரங்களில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் 2022 - 2023-ம் ஆண்டில் மட்டும் நிறுவனம் 600 கோடி ரூபாய் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

Ekka
முதற்கட்டமாக தொழிற்சாலை அமைப்பதற்கான நிலம், உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக 400 கோடி ரூபாயை முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் 43 இன்ச் முதல் 90 இன்ச் வரையிலான சைஸ் டிவிக்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஆலை மூலம் 1,500 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது.

தற்போது சோனேபட்டில் உள்ள தொழிற்சாலையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.