Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தொண்டாற்றும் தன்னார்வலர்களை இணைக்க பொதுநலனுடன் செயிலி உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரி!

தொண்டாற்றும் தன்னார்வலர்களை  இணைக்க பொதுநலனுடன் செயிலி உருவாக்கிய ஐஏஎஸ் அதிகாரி!

Thursday May 17, 2018 , 2 min Read

2015ல் சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது, பல தன்னார்வலர்களும், அரசு சாரா மையங்களும் மக்களுக்கு உதவிட முன் வந்து உதவிக்கரம் நீட்டினர். அதன் பிறகு பல நிகழ்வுகளும், மீட்புப் பணிகளும் தன்னார்வளர்களின் உதவியோடு நடந்து வருகிறது. இதனை சீரமைக்கும் வகையிலும், எல்லா தன்னார்வலர்களையும் ஒன்றிணைக்கும் வகையிலும் மருத்துவர் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சந்தோஷ் பாபு பொது நலனுடன் ’Volndear’ என்னும் செயிலியை உருவாகியுள்ளார்.

image


“எனக்கு புது கண்டுபிடிப்புகள் மீது ஆர்வம் அதிகம். ஏதேனும் சிக்கலை சந்தித்தால் அதற்கு நிச்சயம் தீர்வு காண வேண்டும். அப்படி தன்னார்வலர்களுக்கும் அமைப்புகளுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பவே இந்த செயலியை உருவாக்கினேன்,” என்கிறார் சந்தோஷ் பாபு.

உதாரணமாக ஒருவரோ அல்லது ஓர் அமைப்போ இரத்த தான முகாம் நடத்த தன்னார்வளர்கள் தேவை என்றால் இந்த செயிலியில் பதிவிடலாம். அதை பார்த்து இதில் இணைந்திருக்கும் தன்னார்வளர்கள் தங்கள் சேவையை செய்ய தொடர்பு கொள்ளலாம் . இதுவே இச்செயலியின் முக்கிய நோக்கம் ஆகும். அரசு அல்லது அரசு சாரா அமைப்புகள், தனிப்பட்ட தன்னார்வலர்கள் என எவர் வேண்டுமானாலும் இந்த செயிலியில் இணைந்துக் கொள்ளலாம்.

“இதன் பயன்பாடு சமூக வலைத்தளம் போன்று தான் இருக்கும். ஆனால் பொது நல பயன்பாட்டுக்கு மட்டும் உபயோகப்படும்,” என்கிறார்.

இந்த செயிலியை உருவாக்கும் நோக்கம் தனக்கு சென்னை வெள்ளத்திற்கு பிறகு தான் புலப்பட்டது என்கிறார் இவர். அபொழுது தான் தனிச்சையாக, பலர் உதவி செய்யத் தயாராக இருந்த நிலையிலும் எப்படி உதவுவது எங்கு உதவி தேவை என்று தெரியாமல் இருந்தனர் என குறிப்பிடுகிறார்.

image


தற்பொழுது சிக்மா தொழில்நுட்ப நிறுவனத்தின் உதவியோடு இந்த செயலியின் பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளார் இவர். மேலும் தனது சமூக வலைதளத்தில் இந்த செயிலியை பயன்படுத்தி தேவையான மாற்றங்களை குறிப்பிடக்கோரி அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார் சந்தோஷ் பாபு.

தற்பொழுது தமிழ்நாடு கைத்தொழில்கள் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பணியாற்றும் இவர், இதற்கு முன் தான் பணியாற்றிய ஒவ்வொரு பொறுப்பிலும் பல புதுமைகளை புகுத்தி வெற்றிக்கண்டுள்ளார். இதுவரை 150க்கும் மேலான அரசாங்க சிக்கல்கள் பலவற்றுக்கு தீர்வு கண்டுள்ளார் இவர். 

செயலியை பதிவிறக்கம் செய்ய: Volndear