இளம் தொழில்முனைவரின் ஆக்கம் : 'ஹேப்பினெஸ் பாக்ஸ்ட்'
கேளிக்கைகளை விரும்பும் இளைஞர்களிடையே, விதி பன்சாரி தனது 21வது வயதிலேயே தொழில்முனைவராகும் அசாதாரண பாதையை தேர்வு செய்தார்.
ஏழு மாதங்களுக்கு முன்பு, பரிசுப்பொருட்கள் மற்றும் சுவையான இனிப்பு வகைகளுக்கான "ஹேப்பினெஸ் பாக்ஸ்ட்"(Happiness Boxed) என்ற ப்ரத்யேக இணையதளம் அவரால் நிறுவப்பட்டது.
எப்போதும் ஒரு தொழில்முனைவராக இருக்க வேண்டும் என நான் உறுதி கொண்டதால், இது கடினமாக இல்லை என்கிறார் விதி.
நண்பர்கள் பலரைப் போன்று எம்.எஸ்சி பட்டத்திற்கு பதிவுசெய்து பின்பு முழுநேர பணி புரிவது, அவரது தேர்வாக இல்லை. "என் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே நான் இடர்களை ஆராய முடிவு செய்துவிட்டேன்" என்கிறார் விதி. அதில் அவருக்கு எந்த வருத்தமும் இல்லை! என்றும் கூறுகிறார்
மும்பையில் பிறந்து வளர்ந்த விதி, தன்னை அப்பாற்பட்டு சிந்திக்க ஊக்குவிக்கும் சூழலில் வளர்ந்தார்.
ரஸ்ஸல் ஸ்குவார் சர்வதேச கல்லூரியில் இளங்கலை பொருளியல் மற்றும் மேலாண்மை பட்டம் முடித்துவிட்டு, லண்டன் பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவராக பயிலும் போதே, ஒரு தொழில்முனை நிறுவனம், தனியார் வங்கி மற்றும் வலைதள பத்திரிக்கையில் பகுதி நேரமாக பணிபுரிந்துள்ளார். தனது கல்விக்கு உறுதுணையாக உள்ளிருப்பு பயிற்சிகளை மேற்கொண்டு, தனது குடும்ப தொழிலிலும் அப்போதே ஈடுபட்டார்.
"நான் என் அப்பாவின் வணிக நிர்வாகத்தை கண்டேன், எனவே இது எனக்கு மிகக்கடினமான முடிவு அல்ல. சொந்தமாக ஏதேனும் தொழில் தொடங்கும் யோசனை என் மனதின் மற்றொரு பக்கத்தில் எப்போதும் இருந்தது. ஆனால் இவ்வளவு சீக்கிரம் அது நிறைவேறும் என்று நினைக்கவில்லை" என்றார் விதி.
இனிப்பு சார் தொழில் செய்யும் ஒரு இனிப்பு பிரியர்
அவரது நகரில் உள்ள பல விற்பனையாளர்கள் மற்றும் வீட்டில் இருந்தபடியே விற்பனை செய்பவர்களை பார்த்து, பரிசுப்பொருட்கள் மற்றும் சுவையான இனிப்பு வகைகளுக்கான ஒரு வலைதள முன்வாயில் துவங்கும் யோசனை வித்திட்டது.
அவர் உணவின் மீது இருந்த ஆர்வத்தினால் அதை பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஹேப்பினெஸ் பாக்ஸ்ட்(Happiness Boxed) என்ற நிறுவனத்தை நிறுவினார்.
மேலும், அவரே ஒரு சாக்லேட் விரும்பியாக இருப்பதனால், தொழில் நுணுக்கங்களை பயில்வது அவருக்கு எளிதாக அமைந்தது.
மேற்கத்திய இனிப்பு வகைகளோ அல்லது இந்திய இனிப்பு வகைகளோ எதுவாயினும் தம்மால் இயன்ற அளவு உட்கொள்ள முடியும் என ஒளிவுமறைவின்றி ஒப்புக்கொள்கிறார். “இனிப்பு பண்டங்களே என் முக்கிய உணவாக இருந்துள்ளது; சுருக்கமாக, நான் சாக்லேட்டில் தான் ஜீவிக்கின்றேன் என்றே கூறலாம்." என்கிறார் விதி.
ஹேப்பினெஸ் பாக்ஸ்ட்(Happiness Boxed) போல் எளிதாக, வேறு எம்முறையாலும் உங்கள் விருப்பமுள்ளோருக்கு இனிப்பு பண்டங்களை அன்பளிப்பாக வழங்கிட இயலாது. எவ்வகையான விழாக்களுக்கும் என்ன பரிசளிப்பது என்ற கேள்விக்கு விடையாக எங்கள் தயாரிப்பு அமையும் என்பதை ஆணித்தரமாக கூறமுடியும் என்றுகிறார் நம்பிக்கையோடு விதி.
தற்போது தமது தயாரிப்பை மும்பை முழுவதற்கும் விநியோகிக்கிறார். விரைவில் இவர்களது சிஓடி (COD) சேவையையும் துவக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்களின் சக்தியின் மேல் நம்பிக்கை உடையவர்
சொந்தமாக முழு இணையதளத்தை வடிவமைத்தது மட்டுமின்றி இவரே கைப்பட சந்தைப்படுத்துதல் மற்றும் சமூக ஊடக விளம்பரங்களையும் உருவாக்கியுள்ளார்.
இவர் பெண்களின் சக்தியின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவர் என்பதால், பெண்களுக்கு இண்டெர்ஷிப் அடிப்படையில் தம்மிடம் பணிபுரியும் வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார். இவர் சார்ந்த அனைத்து விற்பனையாளர்களும், வியாபாரத்தில் சம்மந்தப்பட்டவர்களும் கூட பெண்களே என்கிறார்.
தொழில்முனைவர் விதி, ஒரு தலைசிறந்த கொள்கைவாதி எனலாம். அவர் தந்தையே அவருக்கு முன்மாதிரி, “என் தந்தை அதிகாலை எழுந்து, 6 மணிக்கு வேலைக்கு செல்வதை நான் சிறுவயது முதலே காண்கிறேன். 20 ஆண்டுகளுக்கு பிறகு, அவர் இன்று ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருந்த போதிலும் அதே அணுகுமுறை அவரிடம் தொடர்ந்து வருகிறது. அவரிடமிருந்து நான் வாழ்கையை எப்படி சிரமேற்கொண்டு அணுகுவது என்ற போக்கினை கற்றுக்கொண்டேன் என்கிறார் விதி.
திருமணத்திற்கு முன் மிகவும் சுதந்திரமாக சிந்திக்கும் பெண்கள், மணமானதும் தன்னிலை மறந்து செயல்படுகிறார்கள் என்றவொரு தவறான கண்ணோட்டம் இருப்பதை வெகுஜனங்களிடையே காணமுடிகிறது. ஒரு சிலரை மட்டுமே கருத்தில் கொண்டு எல்லா பெண்களுமே ஒரே வார்ப்பில் தான் இருப்பார்கள் என்று கருத்தில் கொள்ளமுடியாது. என் வாழ்கையை எவ்வாறு வாழவேண்டும் என்று தேர்வு செய்வது நானாக மட்டுமே இருக்க முடியும் என்று உறுதிபட பேசுகிறார் விதி.
பல்வேறு ஆர்வங்கள்
விதிக்கு நடனமாடுதல் பிடித்தமான ஒரு விஷயம். மேலும் அவர் ஷாமக் தாவர் நிகழ்கலை பள்ளியில் நடனத்தில் மேம்பட்ட இடைநிலை வரை நிறைவு செய்துள்ளார். நீச்சல் விரும்பியான இவர் இது தவிர்த்து இன்னும் பயணித்தல், பல்வேறு உணவு வகைகளை அலசி ஆராய்தல் போன்ற செயல்களிலும் வல்லுனராக விளங்குகிறார்.
வியாபார நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு தீவிர தொழில்முனைவர் என்று இவரை நாம் தவறாக எடை போடக்கூடாது. வாரஇறுதியில் குடும்பம் மற்றும் நண்பர்களோடு செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் விதி. இதுவே வாரத்தை தொடங்க, உற்சாகத்தையும் எதிர்ப்பார்ப்பையும் அளிக்கிறது என்கிறார் விதி.
விருந்தினர் கூட்டங்களிலும் கவனம் இழக்காமல் சுவாரஸ்யமான மக்களை சந்தித்து அவர்களில் சிலரை இன்று ஹேப்பினெஸ் பாக்ஸ்ட்- இல் (Happiness Boxed) தன்னுடைய சக உறுப்பினர்களாக ஆக்கி உள்ளார் என்று பெருமையுடன் கூறுகிறார் விதி.