பணியிடத்தில் உங்கள் கவனத்தை மேம்படுத்த உதவும் 12 வழிகள்!
கவனச்சிதறல் இல்லாத சூழலை உருவாக்க கற்றுக்கொண்டு, செயல்களுக்கு முன்னுரிமை அளித்து, மேம்பட்ட கவனம் மற்றும் செயல்திறனுக்காக மன நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவும்.
இன்றைய வேகமான மற்றும் எதிர்பார்ப்புகள் நிறைந்த பணிச்சூழலில், கவனத்தை தக்க வைத்துக்கொள்வது சவாலானது. தொடர் கவனச்சிதறல்கள் மற்றும் பலவேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டிய அழுத்தம், ஒரே செயலில் தொடர்ந்து ஈடுபட்டு, அவற்றை செயல்திறனோடு முடிப்பதை சிக்கலாக்கலாம்.
இருப்பினும், உங்கள் கவனத்தையும், செயல்திறனையும் மேம்படுத்த நீங்கள் பலவித நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கையாளலாம். கவனத்தை மேம்படுத்தி, பணியில் தீவிரம் காட்டுவதற்கான 12 வழிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
கவனச்சிதறல் இல்லாத சூழல்:
உங்கள் பணியிடத்தில் கவனச்சிதறலை குறைப்பதில் இருந்து துவங்கவும். உங்கள் மேஜையை சீராக்கி, ஒழுங்கற்ற தன்மை இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். உங்கள் கவனத்தை பாதிக்கக்கூடிய தேவையில்லாத பொருட்களை அகற்றவும். இயலுமாயின், அமைதியான இடம் அல்லது இறைச்சலை போக்கும் ஹெட்போன் மூலம் பின்னணி ஒலிகளை கட்டுப்படுத்தி, கவனத்தை பாதிக்காத சூழலை உருவாக்கவும்.
முன்னுரிமை மற்றும் திட்டமிடல்:
உங்கள் செயல்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பணி நாளை திட்டமிடுங்கள். முக்கியமான, அவசரமான செயல்களைக் கண்டறிந்து முதலில் முடிக்கவும். உங்கள் பணிச்சுமையை சிறிய, நிர்வகிக்கக் கூடிய பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒரு நேரத்தில் ஒரு செயலில் கவனம் செலுத்து, அதிக வேலை உணர்வை குறைக்கவும்.
நேரம் ஒதுக்கீடு பயிற்சி:
நாள் முழுவதும் குறிப்பிட்ட செயல்களுக்கான நேரம் ஒதுக்கவும். பணி கவனம், கூட்டங்கள், இடைவேளை போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்குவதன் மூலம், கவனம் தடைப்பாத வகையில் உங்கள் செயல்களை அமைத்துக்கொள்கிறீர்கள். நாட்காட்டி அல்லது செயல்திறன் செயலி மூலம் உங்கள் நாளை திட்டமிட்டு, உங்கள் நேரத்தை திறம்பட பயன்படுத்தவும்.
இடைவேளைகள் தேவை:
பரவலாகக் கருதப்படுவதற்கு பதிலாக, இடைவேளை எடுப்பது உங்கள் கவனத்தை அதிகமாக்கும். நம் மூளை முத்துணர்ச்சி பெற ஓய்வு தேவை. உங்கள் பணி திட்டத்தில் இடைவேளைக்கு நேரம் ஒதுக்கி நடப்பது, அல்லது கைகால் நீட்டுவது, ஆழமாக மூச்சை இழுத்து விடுவது போன்றவற்றை செய்யவும். உங்கள் மேஜையில் இருந்து நகர்ந்து, உடல் வேலைகளில் ஈடுபடுவது உங்கள் மனதை புத்துணர்ச்சி பெற வைத்து செயல்திறனை மேம்படுத்தும்.
டிஜிட்டல் கவனச்சிதறல்கள் குறைப்பு:
டிஜிட்டல் சாதனங்கள் கவனச்சிதறல் உண்டாக்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. உங்கள் போனில் நோட்டிபிகேஷனை மூடி வைப்பது, தேவையில்லாத பிரவுசர் டேப்களை மூடுவது, பாப் அப் அலர்ட்டை முடக்குவது போன்றவற்றை மேற்கொள்ளவும். குறிப்பிட்ட செயலில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் சமூக ஊடக செயல்பாடுகள் அல்லது பணி சாராத இணையதளங்கள் பயன்பாட்டை குறைக்கும் இணையதளம் அல்லது செயலிகள் கட்டுப்பாடு சேவையை பயன்படுத்தவும்.
விழிப்பு நிலை மற்றும் தியானம்:
விழிப்பு நிலை மற்றும் தியானம் உங்கள் கவனத்தை மேம்படுத்தும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் நேரம் எடுத்து விழிப்பு நிலை பயிற்சிகள் செய்யவும். ஆழமாக மூச்சுவிடுவது போன்றவை உதவும். இந்த பயிற்சிகள் சுய விழிப்பை மேம்படுத்து மன அழுத்தம் குறைத்து இப்போதைய தருணத்தில் கவனம் செலுத்த வைக்கும்.
நீர்த்தன்மை மற்றும் ஊட்டச்சத்து:
நல்ல நீர்த்தன்மை மற்றும் ஊட்டச்சத்து மூளை செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். நீர்த்தன்மை இல்லாதது களைப்பாக்கி, சிந்தனையை பாதித்துக் கவனம் செலுத்துவதை குறைக்கும். நாள் முழுவதும் போதுமான நீர் குடித்து, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் கொண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு உட்கொள்ள வேண்டும். இது மூளையையும், ஆற்றலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
போதுமான தூக்கம்:
இரவில் நல்ல தூக்கம் சீரான செயல்பாட்டிற்கு மிகவும் அவசியம். போதிய தூக்கமின்மை, கவனம், நினைவாற்றல், முடிவெடுத்தலை பாதிக்கும். இரவில் 7- 9 மணி நேரம் தூங்கும் வகையில் அமைத்துக்கொள்ளவும். தூங்குவதற்கு முன் தூண்டுதல் நடவடிக்கைகளை தவிர்த்து, அமைதியான சூழலை உருவாக்கி கொள்ளவும்.
உடற்பயிற்சி தேவை:
சீரான உடல் பயிற்சி உங்கள் மொத்த நலனுக்கு ஏற்றது என்பதோடு, உங்கள் மூளையின் செயல்பாட்டிற்கும் உதவுகிறது. ஜாகிங்கிம், நீச்சல், சைக்கிளிங் போன்ற இரத்த ஓட்டத்தை சீராக்கும் செயல்களை தினசரி அட்டவனையில் சேர்த்துக்கொள்ளவும். லிப்டிற்கு பதில் படிகளில் ஏறலாம் அல்லது மதிய உணவிற்காக நடந்து செல்லலாம்.
செயல்திறன் கருவிகள்:
உங்கள் நேரம், செயல்களை நிர்வகித்து கவனத்தை மேம்படுத்த எண்ணற்ற கருவிகள், செயலிகள் உள்ளன. திட்ட நிர்வாக மென்பொருள், நேரம் கண்காணிப்பு செயலி, செய்யபட்டியல் செயலி போன்றவற்றை பயன்படுத்து உங்கள் பணியை நிர்வகிக்கவும். உங்கள் பணி திட்டத்தை சீராக்கி, அவற்றை கண்காணிக்க இவை உதவும்.
ஒற்றை செயல் கவனம்:
ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வது சிறந்ததாக தோன்றலாம் ஆமால், இது பல நேரங்களில் செயல்திறன், கவனத்தை பாதிக்கிறது. மாறாக ஒரு நேரத்தில் ஒரு செயலில் கவனம் செலுத்தவும். அடுத்த வேலைக்கு செல்லும் முன் கையில் உள்ள வேலையை முடிக்கவும். கையில் உள்ள வேலையில் ஈடுபாட்டை ஏற்படுத்து மன அழுத்தம் குறைக்க இது உதவும்.
வாழ்க்கை- பணி சமன்:
நீண்ட கால கவனம், ஆரோக்கியத்திற்கு நல்ல பணி- வாழ்க்கை சமன் அவசியம். பணிக்கு வெளியே நீங்கள் விரும்பும் செயல்களுக்கான நேரம் தேவை,. உடற்பயிற்சி, பொழுதுபோக்கு, நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிடுவதாக இது அமையலாம். பணி அல்லாத செயல்களில் ஈடுபடுவது, மனதை புத்துணர்ச்சி பெற வைத்து, மன அழுத்தம் குறைத்து, பணியில் உங்கள் கவனத்தை மேம்படுத்தும்.
இந்த 12 உத்திகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் கவனத்தை நன்றாக மேம்படுத்தலாம். இந்த பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள நேரமும், முயற்சியும் தேவை. உங்களுக்கு பலன் தரும் பல்வேறு உத்திகளை முயன்று பாக்ர்கவும். பயிற்சி மூலம், நீங்கள் கவனம் மிக்க, செயல்திறன் வாய்ந்த மனநிலையை உருவாக்கி தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
நியூகிளியஸ் ஏஐ (Nucleus_AI) | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan