முகேஷ் அம்பானி கூறும் 13 வெற்றிக்கான வழிகள்...
கோகிலா பெண் அம்பானி மற்றும் திருபாய் அம்பானி இருவருக்கும் முகேஷ் அம்பானி பிறந்தபோது அவர்கள் குடும்பம் ஒரு நடுத்தரவர்க்க குடும்பம். ரிலையன்ஸ் என்ற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அப்போதும் திருபாய் அம்பானி அவர்கள் முயற்சிகள் செய்தவண்ணம் இருந்தார்.
மிகப்பெரிய தளம் தனது தந்தையிடம் இருந்து கிடைத்தாலும், முகேஷ் அம்பானியின் அயராத உழைப்பும், அசரவைக்கும் நிர்வாகத்திறமையும் தான் இன்று ரிலையன்ஸ் நிறுவனம் இமயம் அளவிற்கு வளர்ந்து நிற்க காரணம்.
முகேஷ் அம்பானி கடந்து வந்த பாதை கடினமானது கரடு முரடானது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பதை உண்மையாக அனுபவித்ததன் காரணமாக அவரது உழைப்பிற்கு பலனாக இந்திய பணக்காரர்கள் வரிசையில் முதலிடம், உலக அளவில் 18-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்து அவரை தேடி வந்தது.
குடும்பத்திற்குள்ளே இருந்த சிக்கல், வெளிநிறுவனங்கங்கள் தந்த போட்டி, காலத்திற்கு ஏற்ப நிறுவனத்தை கட்டமைத்தல் இவ்வாறு எந்த செயலாக இருந்தாலும் அதில் தன்னை முழுக்க அர்ப்பணித்து புதிய உச்சங்களை தொட முகேஷ் தயங்கியது இல்லை . இதன் காரணமாக ஒவ்வொரு தொழில்முனைவோரும் அவரிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம்.
அவர் கூறிய 13 பொன்மொழிகள் உங்களுக்காக :
சிக்கலை அடையாளம் பார்த்து அதற்கு தீர்வு கொடு
ஒவ்வொரு தொழில்முனைவோரின் எண்ணமும் முழுவதும் பணத்தை நோக்கி இருத்தல் கூடாது என்பதை பல வருடங்களாக கூறுவது மட்டுமன்றி நிரூபித்தும் வருபவர் முகேஷ் அம்பானி. வாடிக்கையாளருக்கு சரியான மதிப்பு கிடைப்பதற்கு தொழில்முனைவோர் முயல வேண்டும். உங்கள் தொழிலின் அடிநாதமாக வாடிக்கையாளர் எதிர்கொள்ளும் சிக்கலும், அதற்கான தீர்வும் இருத்தல் வேண்டும் என்பது அவரது கருத்து.
\"முதன் முதலாக, தொழில் முனைவது பற்றி எனது தந்தை நான் அமெரிக்கா சென்று வந்தவுடன் கற்பித்தார். எனது வேலை என்ன, பொறுப்புகள் என்ன என்று கேட்ட போது, உனக்கு வேலை வேண்டும் என்றால் நீ மேலாளராக இருப்பாய். ஒரு தொழில் முனைவோன் என்ன செய்யவேண்டும் என்பதை அவனாக கண்டுபிடிப்பான் என்றார்.\"
\"தொழில் முனைவோர் அகராதியில் இலட்சியம் இருக்கக்கூடாது என நான் கூறவில்லை. நமது இலட்சியங்கள் யதார்த்தமானவையாக இருத்தல் வேண்டும். எல்லாமும் நம்மால் இயலாது என்பதை நாம் உணருதல் வேண்டும்.\"
தீர்வு கொடுப்பது முக்கியம் அல்ல, சரியான சிக்கலுக்கு தீர்வு தருகிறோமா என்பதே முக்கியம். எனவே சிக்கலை கண்டுபிடித்த பின்பு அதற்கு தீர்வு கொடு\".
\"ரிலையன்ஸ் நிறுவன கனவு எங்கள் தந்தையுடையது. நிறுவனத்தை துவக்கியபோது அவர் எங்களுக்குள் விதைத்த ஒரு எண்ணம் என்னவென்றால், ஒரு தொழிலில் நீங்கள் தீர்வுகள் தர வேண்டும். அதற்கு ஏற்றவாறு உங்களுக்கு பொருளாதார மதிப்பு உயந்து கொண்டிருக்கும்”.
ரிலையன்ஸ் ஜியோ இந்திய தொலைத்தொடர்பு சந்தையை அடியோடு மாற்றியது அதன் குறைந்த கட்டண சலுகை திட்டங்களோடு. வாழ்நாள் முழுவதும் இலவச குரல் சேவை மற்றும் 6 மாதத்திற்கு, எதற்கும் கட்டணம் இல்லை என்ற திட்டம் மூலம், சந்தியில் நுழைந்த உடன், அதிரடியாக 10% வாடிக்கையாளர்களை கையகப்படுத்தினார்கள். கட்டணங்கள் விதித்த பின்பும், வாடிக்கையாளர் எண்ணிக்கை குறையவில்லை.
முகேஷ் அம்பானியின் கனவுத்திட்டமான ஜியோ சந்தையை புரட்டி போட்டது மட்டுமன்றி, போட்டியாளர்களை புதிய யுத்திகளை தேட வைத்தது. இலவசங்களை கொடுக்க வைத்தது.
\"டேட்டா என்பது புதிதாக உருவாகியுள்ள டிஜிட்டல் பொருளாதாரத்தின் பிராணவாயு ஆகும். அதனை இந்தியர்களுக்கு எவராலும் மறுத்தல் இயலாது\".
முதல் மூன்று தொழில்துறை புரட்சிகளை இந்தியா தவறவிட்டது. ஆனால் இணைப்பு, டேட்டா, மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தற்போது நான்காவதை வழிநடத்துவதால், அதனை முன்னெடுத்து செல்லும் வாய்ப்பு இந்தியாவிற்கு உள்ளது\".
\"இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தை தற்போது டேட்டாவினால் நிரம்பி வழிகின்றது. 1.3 பில்லியன் இந்தியர்களுக்கு இந்த டிஜிட்டல் சந்தையில் செழித்து வளர தேவையான கருவிகளை நாம் தரவேண்டும்\".
\"அன்று மகாத்மா கண்ட கனவான 'தன்னை அறிதலை' இன்று இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை உபயோகித்து நனவாக்க முடியும்\".
\"பிராட்பேண்ட் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆடம்பரமாக , பற்றாக்குறை உள்ள பொருளாக சிலருக்கு மட்டுமே உரித்தானதாக இனி இருக்காது\".
கிடைக்கும் அளவிற்கு திரும்பக் கொடு
தாராள மனம் படைத்தவராக அறியப்படும் முகேஷ் அம்பானி எப்போதும் கலந்து கொள்ளும் கூட்டங்களில் சீ.எஸ்.ஆர் எவ்வாறு ஒரு நிறுவனத்தின் அங்கமாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பேசுவார். சமுதாயத்திற்கும் நிறுவனத்திற்கும் சேர்த்து வருமானம் கொண்டுவரும் கருவியாக சீ.எஸ்.ஆர் பார்க்கப்படுவது அவசியம் என்பார்\". ஒவ்வொரு தொழிலின் அங்கமாக அது இருத்தல் வேண்டும் என்பார்.
\"ஒவ்வொரு தொழிலும், அதன் பங்குதாரர் மற்றும் முதலாளிகளுக்கு ஏற்றவாறு நடப்பது மட்டுமன்றி, அவர்களை சார்ந்த சமுதாயத்திற்கும் ஏற்றவாறு செயல்பட வேண்டும். பொருளாதாரம் மட்டுமே ஒரு தொழிலின் அளவீடாக இல்லாமல், அதன் மூலம் சமுதாயத்திற்கு கிடைக்கும் நலனும் கருத்தில் கொள்ள வேண்டும்\".
சீ.எஸ். ஆர் அதாவது கார்பரெட்களின் சமூக பொறுப்பு தற்போது உள்ள வடிவத்தில் இருந்து, சமுதாய கடமையாக மாற வேண்டிய கட்டத்திற்கு வரவேண்டும். அதனை தொழில்முனைவு மூலம் நிகழ்த்த முடியும். சமுதாய தேவைகள் அவற்றில் இருக்கும் இடைவெளிகள் வெறும் தொழில் வாய்ப்புகளாக மட்டுமன்றி சமுதாய கடமையாக பார்க்கப்படுவது அவசியம்.”
\"பல கோடி இந்தியர்கள் நமது எண்ணங்களின் மையப்புள்ளியாக இருக்கும் வரை, அவர்களது நலன் பற்றி நாம் சிந்திக்கும் வரை, அவர்கள் தங்களை உணர்தளுக்கான வாய்ப்புகளை உருவாகும் கொண்டிருக்கும் வரை நாம் சரியான பாதையில் இருப்போம்\".
முகேஷ் அம்பானியின் வெற்றி தொழில் உலகில் இந்தியாவின் வெற்றியை இந்தியாவின் எழுச்சியை எடுத்துக்காட்டுகிறது. அடுத்து வரும் பல தலைமுறை தொழில் முனைவோருக்கான எடுத்துக்காட்டாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் கதை இருக்கும்.
எவ்வித மூலதனமும் இன்றி, எவ்வித தொடர்புகளும் இன்றி, எவ்வித பட்டங்களும் இன்றி, கடின உழைப்பு, நம்பிக்கையால் என்ன சாதிக்க இயலும் என உலகிற்கு கூறிய அவரது தந்தையையின் வழியில் பிறழாது பயணிக்கிறார் முகேஷ் அம்பானி.
ஆங்கில கட்டுரையாளர்: மாத்யூ ஜே மணியம்கோட்
"