ட்ரோன் மூலம் 4 மீனவர்கள் உயிர்களைக் காப்பாற்றிய 19வயது இளைஞன்!

By YS TEAM TAMIL|11th Jan 2021
பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நான்கு உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளார்!
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

கேரளாவின் திருச்சூரிலிருந்து கடலில் சிக்கித் தவித்த நான்கு மீனவர்களைக் கண்டுபிடித்து மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார் 19 வயதான கல்லூரி மாணவரும், ட்ரோன் பைலட்டுமான தேவாங் சுபில்.


மீனவர்களுடன் கடல்களில் மீட்புப் பணிகளில் சேர்ந்து, பாதகமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் நான்கு உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


நான்கு மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5, 2021) அன்று கடலில் மூழ்கியதாக தகவல் வெளியானது. கடலுக்குச் சென்ற மீனவர்கள் கரை திரும்பாத நிலையில், 80க்கும் மேற்பட்ட உள்ளூர் மீனவர்கள் கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்பு முயற்சியை அதிகாலை 4 மணி அளவில் தொடங்கினர். இருப்பினும் அது பலன் தரவில்லை என்று கூறப்படுகிறது.

fisherman drone

மீனவர்களை மீட்க சக மீனவர்கள் போராடி வரும் செய்தி அருகிலுள்ள தாலிகுளம் கிராமத்தில் பரவ, தேவாங் சுபிலிடம் அவரது தந்தை இது குறித்து தெரிவித்தார். உடனே அப்பகுதிக்குச் சென்ற 19 வயதான பி.டெக் மாணவன் சுபில், நம்பிக்கையற்று கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்களிடம் பேசினார்.


கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகளில் பயணித்து ட்ரோன் உதவியுடன் மீனவர்களைக் கண்டுபிடித்துவிடலாம் என யோசனை கூறினார். அதனையடுத்து, கடலுக்குள் தேடுதல் மட்டும் மீட்புப் பணிக்காக ட்ரோனை பயன்டுத்தலாம் என அங்கிருக்கும் உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, கடலுக்குள் சென்றார் சுபில்.


ட்ரோனை பறக்கவிட்டு, அதனை ஸ்மார்ட்போன் வழியாகக் கண்காணித்துக் கொண்டிருந்த சுபிலின் டிஸ்பிளேவில் மீனவர்கள் தெரிய ஆரம்பித்தனர். கடலிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் தவித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை கண்டதும், அவருக்கு அருகே சென்றபோது மீட்டனர்.


அப்போது அந்த மீனவர் சொன்னத் தகவலைக்கொண்ட மற்ற மீனவர்களையும் மீட்டு கரைக்கு திரும்பினர். மீட்கப்பட்டதில் ஒருவர் படகிலிருந்து நீண்ட தூரம் இழுத்துச்செல்லப்பட்டதால் மயங்க நிலையில் கிடந்தார்.

"நான் சரியான நேரத்தில் அங்கே இருந்தேன், நான் எப்போதும் ட்ரோன்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்த காரணத்தால், எனக்கு சட்டென்று அந்த யோசனை தோன்றியது. வாடகைக்கு வாங்கி ட்ரோனை பயன்படுத்தினேன். எதிர்காலத்தில் இதுபோன்ற மீட்புக்கு உதவும் வகையில், சொந்த ட்ரோனை வாங்குவேன்,”என்று சுபில், ஜீ மீடியாவிடம் கூறினார்.
இளைஞன்

உயரத்தில் ட்ரோனை பறக்கவிட்டால் அதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே ஜூம் செய்து காட்சிகளை பார்க்க முடியும். அப்பகுதியைச் சுற்றிலும் தெளிவான காட்சிகளை பெறுவதற்கு கடல் நீருக்கு மிக அருகாமையிலும், தாழ்வான பகுதிகளில் ட்ரோனை பறக்கவிட்டது சவாலாக இருந்தது, என்று கூறினார் சுபில். மீனவர்களை மீட்டு கரை திரும்பிய பிறகு, அங்கிருந்தவர்களின் உணர்ச்சிவசத்துடன் கண்ணீர் மல்க நன்றிகளை தெரிவித்தனர்.


இதனால் நெகிழ்ச்சியில் ஆழந்த சுபில் என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்து நின்றிருந்தார். அவரை உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டியது மட்டுமல்லாமல், அவரது முயற்சியை மாநில வேளாண் அமைச்சரும் பாராட்டினார்.


சமயோஜிதமாக யோசிப்பது பல உயிர்களைக் காப்பாற்ற உதவும் என்பது இந்த விஷயத்தில் உண்மையாகியுள்ளது.


தகவல் உதவி- zee news | தொகுப்பு: மலையரசு

Latest

Updates from around the world