2021 இந்தியாவின் ‘டாப் 10 யூட்யூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள்’ யார் என தெரிந்து கொள்ளுங்கள்!
பொழுதுபோக்கு, ஊக்கமளிக்கும் வீடியோக்கள், விளையாட்டு என சிறு வீடியோக்களை உருவாக்கி முன்னணியில் இருக்கும் யூட்யூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் பற்றிய தொகுப்பு இது.
யூட்யூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள் யூட்யூப் சேனலில் சிறு வீடியோக்கள் உருவாக்கி அதன் மூலம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ஊக்கமளிக்கும் வார்த்தைகள், வேடிக்கையான வார்த்தைகள் அல்லது செயல்கள், விளையாட்டு பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் என வெவ்வேறு பிரிவுகளில் உள்ளடக்கத்தை உருவாக்கிக் கலக்குகிறார்கள்.
அந்த வரிசையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ள ‘டாப் 10 யூட்யூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்கள்’ பற்றி இங்கு பார்க்கலாம்:
1. A2 Motivation
அர்விந்த் அரோரா தனது ஊக்கமளிக்கும் வீடியோக்களுடன் இந்தியாவின் முன்னணி யூட்யூப் ஷார்ட்ஸ் கிரியேட்டராக இருக்கிறார். இவருக்கு 7 சில்வர் மற்றும் 2 கோல்டன் யூட்யூப் ப்ளே பட்டன்கள் கிடைத்துள்ளன. வெறும் 11 மாதங்களில் இவரது சானல் 10 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை எட்டியுள்ளது.
2. Dushyant Kukreja
யூட்யூபர், இன்ஸ்டாகிராம் மாடல், சமூக வலைதளங்களில் பிரபலமானவர் என பன்முகத்தன்மை கொண்ட துஷ்யந்த் தனது வேடிக்கையான உள்ளடக்கத்தால் மில்லியன் கணக்கான ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
3. Sanjoy Das Official
சஞ்சய் தாஸின் இந்த யூட்யூப் சானல் ஃப்ரீ ஃபயர் ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலம். இதில் சஞ்சய் ஃப்ரீ ஃப்யர் விளையாட்டு தொடர்பான குறிப்புகளையும் நுணுக்கங்களையும் சிறு வீடியோக்களாகப் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
4. Ajay Sharma
அஜய் ஷர்மா பல்வேறு தகவல்களை சுவாரஸ்யமான முறையில் புதுமையாகப் பகிர்ந்துகொண்டிருப்பதே ரசிகர் பட்டாளம் உருவாக முக்கியக் காரணம். நடிப்பு, நடனம், பயணம், வலைப்பதிவு, மாடலிங் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
5. Baseer Gaming
பசீர் பாய் உருவாக்கியுள்ள இந்த சானல் ஃப்ரீ ஃபயர் கேம் தொடர்புடையது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சானல் சுவாரஸ்யமான உள்ளடக்கங்களை உருவாக்கி ஓராண்டு காலத்தில் 3.91 சப்ஸ்கிரைபர்களை வென்றுள்ளது.
6. English Connection
கன்சன் கேசரி நிறுவியுள்ள இந்த யூட்யூப் சானல் படிப்படியாக ஆங்கிலம் கற்றுக்கொள்ள உதவுகிறது. நேரடியாக ஆன்லைனிலோ அல்லது பதிவிறக்கம் செய்துகொண்டோ படிக்கும் வகையில் இதில் உள்ளடக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
7. LittleGlove
இந்த சானலை ஷிவானி கபிலா தியாகி உருவாக்கியுள்ளார். மக்களின் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும் கலையில் தேர்ந்தவர் என்பதால் மில்லியன் கணக்கானோரைக் கவர்ந்துள்ளார். டிக்டாக் மூலம் பிரபலமான இவர் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு சிறு வீடியோக்கள் மூலம் பிரபலமாகியிருக்கிறார்.
8. My Gyani Facts
அன்கித் ஸ்ரீவஸ்தவா பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சானலில் கல்வி, தொழில்நுட்பம், நாடுகள், அறிவியல், வரலாறு, சமூகம், மதம் என ஏராளமான தலைப்புகளில் உண்மைத் தகவல்கள் சிறு வீடியோக்களாகப் பதிவு செய்யப்படுகின்றன.
9. Shivam Malik
ஊக்கமளிக்ககூடிய பேச்சுகளால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவம் மாலிக். உந்துதலளிக்கக்கூடிய சிறு வீடியோக்களை உருவாக்கி தன் யூட்யூப் சானலில் பதிவிடுகிறார். குறைந்த காலத்திலேயே அதிகளவிலான ஃபாலோயர்களைப் பெற்ற சிலரில் இவரும் ஒருவர்.
10. Tsuriki Show
குழந்தைகளுக்கான சிறு வீடியோக்களை முதலில் உருவாக்கி பிரபலமானவர்கள் படிப்படியாக வேடிக்கையான உள்ளடக்கங்களுடன் குடும்பமாக நடித்து அசத்துகின்றனர். அனைவரும் ரசித்து சிரிக்கும்படியாக இருப்பதால் மக்கள் மனதை வென்றுள்ளனர்.