'தில்சேபோல்'- தனிப்பட்ட பொருட்களுக்கான இணைய வழி நிறுவனம்
ஒவ்வொரு பொருட்களுக்கும் அதற்கான பிரத்யேக சந்தையும் வலைத்தளங்களும் உள்ளது. இந்த ஆன்லைன் சந்தை உலகத்தில் "தில்சேபோல்" (DilSeBol) கலைநயம் பொருந்திய தனிப்பயனாக்கத்தை மைய்யமாக கொண்டு இணைய வழி சேவையை வழங்கிவருகிறது.
ஒருவரின் விருப்பதிற்கு ஏற்றார் போல் ஆடை வடிவமைத்தல், வண்ண வண்ண காபி கோப்பைகள், விதவிதமான பைகள், பேனாக்கள் மற்றும் தோல் சாதனங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, தனித்துவம் மிக்க பரிசுப் பொருட்களாக மாற்றி, இணைய வழியில் சில்லறை வணிகம் செய்யும் நிறுவனம் 'தில்சேபோல்'.
தில்சேபோல், தொழில்முனை லட்சியமுள்ள மூன்று இளைஞர்களான கபிலானந்தன் விஸ்வநாதன், ரவி குமார் மற்றும் சுரேஷ் சுப்பையன் ஆகியோரின் முயற்சியில் உருவானது. தில்சேபோல், தமது நம்பகதன்மைக்காகவும், குறுகிய காலகட்டத்தினுள் தரும் நிறைவான சேவைகளுக்காகவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
தில்சேபோலின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை இயக்க அலுவலரான ரவிகுமார், தமிழ் யுவர் ஸ்டோரி யுடன் நடத்திய உரையாடல் இதோ...
தில்சேபோல் தொடக்கம்
2007 ஆம் ஆண்டு முதல் இயங்கும் இந்த இணைய வழி நிறுவனமானது, சென்னையின் பல நிறுவனங்களுக்கு நம்பகமான பங்குதாரராகவும், இந்தியா முழுவதும் மக்களின் தேவைக்கேற்றாற்போல், விலைகுறைந்த தரமான பரிசுப்பொருட்கள் விற்பனை சேவைகளை வழங்கிவருகிறது. கடந்த 7 வருடங்களாக நாடு முழுவதுமுள்ள பல பெருநிருவனங்களுக்கு தில்சேபோல், ஆர்டரின் அடிப்படையில் தமது சேவைகளை வழங்கியுள்ளது. பெருவணிக வாடிக்கையாளர்களைத் தாண்டி தனிப்பட்ட சேவைகளையும் தமது இணையவழி www.dilsebol.com மூலமாக மக்களுக்கு பொருட்களை கொண்டு செல்கின்றது.
ரவிகுமார், ஐஐஎம் அகமதாபாத்தில் மேலாண்மை படித்துவிட்டு பெருவணிகத்தில் 7 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவம் கொண்டவர். முதல் தலைமுறை தொழில்முனைவரான ரவி, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக எந்த ஒரு வியாபாரம் அமைத்தாலும், அதற்கு இந்தியாவில் நல்ல வரவேற்பிருக்கும் என்று நம்புகிறார்.
சில்லறை வணிகத்தில் அதிக ஈடுபாடு காட்டி வந்த ரவி இதையே தமது தொழிலாக்க வேண்டும் என்று கருதினார்.
"இணைய வழியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எனது வணிகத் திட்டத்தை 2002 இலிருந்தே செயலாற்ற நினைத்தேன். 2007 இல் என்னுடன் இப்போது பணிபுரியும் சுரேஷ் என்பவரைச் சந்தித்து அவருக்கும் எனக்கும் உள்ள ஒருமித்த கருத்து உடன்பாட்டினைப் புரிந்துக் கொண்டு இந்த நிறுவனமான தில்சேபோலை துவக்கினோம். எங்கள் இருவரையும் இணைத்த பெருமை எங்கள் சக நண்பரும், இணை நிறுவனருமான கபிலையே சாரும்" என்றும் ரவி நினைவுகூறுகிறார்.
அவரது நண்பர் சுரேஷிற்கு புதிய உருவாக்கங்களில் முன் அனுபவம் உள்ளதாலும், மேலும் அவரது குடும்பத்தினர் திருப்பூரில் ஜவுளித் துறையில் பணியாற்றியவர்கள் ஆதலால் அவர் இந்த வணிகத்தின் யுக்திகளை நன்கு அறிந்திருந்தார். கபில் சென்னையை சார்ந்த பிபீஒ நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
சவால்கள்
“மாத வருவாயிலிருந்து இப்படி ஒரு எதிர்பாராத மாற்றத்தால், பண வருகையை சமாளிப்பதே எங்களது அன்றாட சவாலாக இருந்தது. முதலில் சிறிதாக இருந்த செலவுகளை எங்கள் வருவாயிலிருந்தே நிர்வகிக்க முடிந்தது. பின்னாளில் எங்களது விற்பனையின் வளர்ச்சி நாங்கள் எதிர்பார்த்ததை விட சற்று குறைவாக இருந்த காலகட்டங்களும் உண்டு" என்கிறார் ரவி.
தில்சேபோல், தொடக்கத்தின் போது வணிகம் முதல் வாடிக்கையாளர்கள் வரையிலான பி2சி (B to C) என்று சொல்லப்படும் வர்த்தகமுறை மூலம் இணைய வழியின் வழியே மக்களோடு இணைந்து அவர்களுக்கு பிடித்தமான பொருட்களான காபி கோப்பைகள், சாவிக்கொதுக்கள், போன்றவற்றை வழங்கிவந்தத்து. இன்று பெருவியாபார நிறுவனமாக வளர்ந்து, வணிகம் முதல் வணிகம் வரை, அதாவது பி2பி (b2B) முறையை விளம்பரப்படுத்தும் யுக்தியை கையாளுகிறார்கள். நமக்கு வேண்டிய பொருளை நமது விருப்பதிற்கு ஏற்றாற்போல் வடிவமைக்க உதவுகிறடது தில்சேபோல். இதுவே இவர்களது சிறப்பம்சம். இவர்களது இணையவழி மூலம் வாடிக்கையாளர்கள் அவர்களது படைப்பாற்றல் திறமையின் வெளிப்பாட்டை அறியமுடிகிறது.
சந்தை சூழ்நிலை
கடந்த 8 வருடங்களாக இணையவழியில் இமாலய வளர்ச்சி இருப்பதைக் காணமுடிந்தாலும் பல வணிகவியலாளர்கள் பெருவியாபாரத்தில் பெருவீழ்ச்சியையும் கண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் இந்த வளர்ச்சி, நாடு முழுவதும் ஒரு முக்கிய இடத்தைத் தொட்டிருந்தாலும் இணைய வழியில் தனிப்பட்ட பொருட்களை வடிவமத்தைலுக்கான சந்தை, சிறிது குறுகியதே எனக் கூறலாம். அந்த காலகட்டத்தில், இந்த வணிகத்தை மட்டும் நம்பி முதலீடு செய்யும் எல்லா வணிகர்களும் லாபம் ஈட்டுவார்கள் என்று கூறிவிடமுடியாது.
"இது நாள் வரை இந்த பி2பி முறை ஒரு தனிமனிதரை சார்ந்து இருந்து வந்தது. இனிவரும் காலகட்டங்களில் சிறிய நிறுவனங்களில் தனிப்பட்ட பொருட்களை வாங்குவதைக் காட்டிலும் எங்களை போன்ற பெருவியாபார நிறுவனங்களில் இவற்றை இணையவழியில் வாங்கும்போது தரத்திலும் நேரம் தவறாமையிலும் எந்த சிக்கலும் ஏற்படாமலிருப்பதைத் தவிர்க்க முடிகிறது. இப்போது இருக்கும் மற்ற பெருவணிக நிறுவனங்களிடையே அதுவும் 50 முதல் 100 பிரிவுகள் இருக்கும் பட்சத்தில் அவர்களால் சரியான நேரத்திற்கு, தரமான மேலும் விலைகுறைந்த சேவைகளை வழங்க முடிவதில்லை. இதனை ஈடுகட்டவே நங்கள் முனைகிறோம் " என்கிறார் ரவி .
வணிகம் முதல் வணிகம் வரை அதாவது பி2பி (B2B) வர்தகமுறையின் பரிணாம வளர்ச்சி நம் அனைவரையையும் வியக்க வைக்கக்கூடும்...
விரிவாக்க திட்டங்கள்
இருவருடன் ஆரம்பித்த இந்த நிறுவனத்தின் பயணம் இன்று 8 பேராக வளர்ந்துள்ளது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எங்கள் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் எனக் கூறலாம். இந்த தில்சேபோல் துவங்கி 8 வருடங்கள் உருண்டோடிய காலகட்டத்திலும் இன்றும் புதிதாக நான் ஏதோ ஒன்றை அன்றாடம் கற்கிறேன் “ என்று பெருமிதம் கொள்கிறார் ரவி.
“தில்சேபோல் நிறுவனம் மூலம் கடந்த 3 அல்லது 4 வருடங்களுக்கு முன்பு தெரிந்த வட்டங்களின் மூலம் சிறிய முதலீட்டை ஈட்டினோம், இப்போது நாடுமுழுவதும் பி2பி வர்தகமுறையின் பரிணாம வளர்சிக்கேற்றாற் போல் நாங்களும் எங்கள் இணையதளத்தை சீரமைக்கவுள்ளோம்" என்று உறுதியளிக்கிறார் ரவி.
வியாபாரதினூடே ஈட்டிய காசை வெகு சீக்கிரம் சந்தைப்படுத்தலில் கரியாக்க நிறையவே வழிகள் இருந்தபோதிலும் நாங்கள் அவற்றை கடைபிடிக்க மறுத்து , எங்கள் நிலையான பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்போம் என்பது உறுதி. எந்த ஒரு புதிய உருவாக்கமும் அதன் சீரான பாதை வகுத்தல், உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் மூலமே வெற்றிப்படிகளை அடையமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் ரவிகுமார்.
இணையதள முகவரி: DilSeBol