குழந்தைகளின் வறுமை சுழற்சியினை தகர்த்து வரும் "மேஜிக் பஸ்"
நமது மனித இனத்தின் உண்மையான ஆற்றலை சரியான முறையில் செயல்படுத்தினால் பல விந்தைகளை நிகழ்த்தும் மகத்தானதொரு சக்தியாக அது திகழும் என்பதில் ஐயமில்லை. அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டது போல, " உன் சக்திக்கு மேல் பொதிவண்டியை இழுக்கும் போது தான் உன் ஆற்றலை நீ அறியமுடியும்". இதன் அடிப்படையில் தான் "மேஜிக் பஸ்" (Magic Bus) அமையப்பெற்றிருக்கிறது. சமுதாயத்தில் உள்ள வறுமை சுழற்சியினை தகர்த்தெறிந்து, ஒரு சமயம் ஒரு குழந்தை என, உலகத்தில் உள்ள எல்லா குழந்தைகளிடையே மாற்றம் கொண்டு வருவதே இதன் நோக்கமாகும். "மேஜிக் பஸ்" எனும் பெயருக்கு ஏற்றாற் போல் நாட்டில் சமூகத்திற்கும், குழந்தைகளிடையேயும் மாற்றத்திற்கான உந்துதலை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
இவையெல்லாம் எப்படி தொடங்கியது ?
இந்திய ரக்பி விளையாட்டு அணியின் இளம் வீரரான, மேத்யூ ஸ்பேஸி, தினந்தோறும் சிறுவர்கள் அதிகமாக காணப்படும் மும்பை ஃபேஷன் தெருவின் எதிரே பயிற்சி மேற்கொள்வார். இளகிய மனம் கொண்ட இவர், ஃபேஷன் தெரு-சிறுவர்களையும் தன்னுடம் இணைத்துக்கொண்டு விளையாடுவதில் சிறிதும் தயக்கம் காட்டடியதில்லை. சில நாட்களிலேயே, இந்த சிறுவர்களிடம் ஒரு நல்ல மாற்றத்தை கவனித்தார். ஒரு சிறந்த வழிகாட்டுதலுடன் அமைந்த ஓர் அணியின் அங்கமாக இச்சிறுவர்கள் திகழ்ததால் இந்த மாற்றம் என கருதினார். தெருவிலேயே வளர்ந்த இந்த சிறுவர்களிடையே, இலக்கு அடையும் திறனும், பிறரிடம் நல்ல அணுகுமுறையை வெளிப்படுத்துவதிலும் வெகுவான முன்னேற்றம் காணப்பட்டது. இந்த முன்னேற்றமானது, இவர்களின் நலிவடைந்த பின்னணி சூழலிலிருந்து எழுச்சி பெருவதுமட்டுமல்லாது நடைமுறையில் எதிர்கொள்ளும் தடைக்கற்களை படிகற்களாக மாற்றும் திறன் உருவாவதை இச்சிறுவர்களிடையே மேத்யூ கவனித்தார். அதன் பிறகு பத்து ஆண்டுகளில் மெல்ல கற்பிக்கும் முறையாக இது மாறியது. இவ்வாறாக உருவானதுதான் "மேஜிக் பஸ் ஸ்போர்ட் ஃபார் டெவலப்மெட்ன்ட் கரிகுலம்" அதாவது "மேஜிக் பஸ் மேம்பாட்டிற்கான விளையாட்டு பாடத்திட்டம்". இந்த திட்டமானது பலரது வாழ்க்கை விதியையே மாற்றியது.
எவ்வாறு நடைபெறுகிறது ?
1999 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட "மேஜிக் பஸ்", இன்று சுமார் 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பிள்ளைகள் மற்றும் 8 ஆயிரம் இளைஞர்களுடன் துணைக்கண்டத்தின் 19 வெவ்வேறு மாநிலங்களில் விரிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் மேத்யூ பணிபுரிந்த நிறுவனமான "காக்ஸ் அண்ட் கிங்க்ஸ்" யிடமிருந்து ஆதரவு கிடைத்தது. பிறகு "கிளியர் ட்ரிப்" நிறுவனத்திடமிருந்தும் ஆதரவு கிடைத்தது. பிறகு மேத்யூ, "மேம்பாட்டிற்கான விளையாட்டு" என்கின்ற அணுகுமுறையில் திட்டங்களை செயல்படுத்தினார். குழுவில் உள்ள ஒவ்வொருவரின் வயது மற்றும் தேவைக்கேற்ற அணுகுமுறையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உள்ளூர் இளைஞர்களுக்கு பயிற்சியளித்து, அவர்களின் உதவியுடன் கல்வி, சுகாதாரம் மற்றும் ஆண் -பெண் பாகுபாடு போன்றவற்றை மையமாக கொண்ட நீண்ட கால திட்டங்களை இந்த சிறுவர்களுக்கு "மேஜிக் பஸ்" கொண்டு செல்கிறது. இதன் மூலம் இச்சிறுவர்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வழிவகுத்து கொள்வதற்கான சூழல் ஏற்படுவதுடன் இவர்கள் வறுமையிலிருந்து விடுபடுவதற்கான ஆற்றலும் பெறுகிறார்கள். சிறுவர்களுக்கேற்றதொரு வழிகாட்டு அணுகுமுறை மூலமாக விளையாட்டுகள் இணைந்த விரிவான பாடத்திட்டம் மற்றும் நீண்ட ஈடுபாட்டுடன் கூடிய பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறுவர்களின் ஒழுக்கம், நடத்தையில் உறுதியான மாற்றத்தை காண, தகுந்த இடைவெளிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பயிற்சியாளர்கள் இவர்களை மதிப்பீடு செய்கின்றனர். சிறுவர்கள் வளர்ந்தவுடன் மேற்படிப்பை தொடர விரும்புவோர், "கனெக்ட்" (Connect) எனும் கூடுதல் திட்டத்தில் சேர்ந்துகொள்ளலாம். இந்த திட்டமானது, இளைஞர்களை மேற்கல்விக்கோ அல்லது வேலைக்கோ கொண்டு செல்லும் பாலமாக திகழ்கிறது. இந்த மகத்தான திட்டத்தின் மூலம் 2,50,000 மேற்பட்ட இளைஞர்கள், தங்கள் வாழ்க்கைக்கான வருங்காலத்தை, தொழிலை தேர்ந்தெடுப்பதுடன் சிறந்ததொரு மேற்படிப்பு மற்றும் மேம்பட்ட உடல் நலமும் பெறுகின்றனர்.
இது ஒரு வித்தயாசமான அரசு சாரா அமைப்பு. வெறும் ஒரு இலக்கு நோக்கி மட்டும் செயல்படும் அமைப்பு அல்ல. இந்த அமைப்பை உருவகப்படுத்தினால், இதற்கு ஒரு பலமான வேர் உண்டு, பல கிளைகள் உண்டு. இது செல்லும் பாதை என்பது விளையாட்டு திறன் கொண்டு பலர் முன்னேற்றம் அடைவதே ஆகும். மேஜிக் பஸ், இந்த கோட்பாடு கொண்டு சிறுவர்களை வறுமையிலிருந்து விடுவிக்கும் பணியை செய்வது மட்டுமலாது, அவர்களின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் மனநிலையினை மாற்றவும் செய்கிறது. இதன் காரணமாகத்தான், இந்த அமைப்பு உருவாகிக்கொண்டிருக்கும் போதே "உலக வங்கியின் வளர்ச்சி சந்தை விருதினை" (World bank development Marketplace award) பெற்றது.
தடைகளை கையாண்டது எப்படி ?
வெற்றி என்பது, சற்றும் துவளாமல் தோல்விகளை தாண்டிச்செல்வதாகும். ஒரு சமூகத்தில் புதிதாக நுழையும் நபருக்கு எதுவுமே விளங்காமல் இருக்கும். ஒருவர், ஒரு பந்தை உயர வீசினால், அது எல்லோரையும் ஈர்க்கும், அது தான் விளையாட்டின் ஆற்றலும், ஈர்ப்பும் ஆகும். இருப்பினும், இன்றைய காலகட்டத்தில் கூட, எல்லா இடங்களிலும் பெண்களுக்கு விளையாட்டு என்பது தடையாக இருப்பது மக்களின் மனப்பான்மையை காட்டுகிறது. அவர்களை வீட்டு வேலை என்னும் உலகிலிருந்து, வெளியில் கொண்டுவருவது மிகப்பெரிய தாக்கத்தை எற்படுத்தும். மேஜிக் பஸ், பெற்றோர்கள் குழு கூட்டங்கள், வீடு வீடாக பிரச்சாரம் மற்றும் சமூக அளவிலான போட்டிகள் போன்ற பிரசார உக்தி முறைகள் மூலம் சிறுவர்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களுக்கு உதவும் வகையில் அமையும் சமூகத்தை உருவாக்கிவருகிறது.
இதுதான் மாற்றத்தை உருவாக்குகிறது. இந்த மேஜிக்கல் அமைப்பின் தலைவர் ஒரு முன்மாதிரியாக இருப்பதால், கண்டிப்பாக அதே திறமை உடைய பல தலைவர்கள் அடுத்து தயாராகுவார்கள். இது ஒரு சங்கிலித் தொடர் விளைவு: மாத்யூ ஸ்பாசி ஒரு சமூக நிறுவன தொழில்முனைவர் ஆவதற்காக அவருடைய நல்ல வேலை மற்றும் விளையாட்டுத் தொழிலை விட்டு விலகினார். தன்னார்வ முனைவர்கள் பிறரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தங்களது வழக்கமான வாழ்க்கை முறையை விட்டு விலகுகின்றனர். உள்ளம் பலவாயினும் எண்ணத்தில் ஒன்று பட்ட மக்கள் உள்ள நமது தேசத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் மேஜிக் பஸ்சின் பணி ஆயிரத்தில் ஒன்று.