உங்கள் திரை நேரத்தை குறைத்து செயல்திறனை அதிகரிக்க உதவும் 5 செயலிகள்!
மொபைல் போன் திரை நேரத்தை குறைத்து உங்கள் நேரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவும் ஐந்து செயல்திறன் அதிகரிக்கும் செயலிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியர்கள் தினமும் சராசரியாக 7.3 மணி நேரம் தங்கள் போனில் செலவிடுகின்றனர், இது அமெரிக்கர்கள், சீனர்கள் செலவிடும் நேரத்தைவிட அதிகம் என்று ரெட்சீர் ஸ்டேரடஜி 2022ல் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
நம்முடைய போன் பயன்பாடு தொடர்பான பிரச்சனையை இது உணர்த்தினாலும், போனில் பயன்படும் நேரத்தை குறைப்பது என்பது சவாலாக இருக்கிறது.
மேலும், இன்றைய உலகில் சமூக ஊடகங்களில் அல்லது செய்தி இணையதளங்களில் முடிவில்லாமல் ஸ்கிரோல் செய்து கொண்டிருக்கும் பழக்கம் எளிதாக கைவிடக்கூடியது அல்ல. ஆனால், இப்படி முடிவில்லாமல் ஸ்கிரோல் செய்யும் பழக்கம் கொண்டிருப்பது நமது வேலைகளை தள்ளிப்போட வைப்பதோடு, நேரத்தையும் பாதிக்கிறது.
இந்த சுழற்சியை தடுத்து நிறுத்துவதற்கு என்று திரை நேரத்தை கட்டுப்படுத்தும் செயலிகளை பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில், உங்கள் நேரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள உதவும் 5 செயல்திறன் அதிகரிக்கும் செயலிகளை பார்க்கலாம்.
திரை நேரத்தை குறைக்க உதவும் 5 ஆப்’கள்
1. ரெஸ்கியூ டைம் (RescueTime)
போன் போன்ற சாதனங்களை கையில் எடுத்ததும் நேரம் சில நிமிடங்கள் என்பது மணிக்கணக்கில் ஆகிவிடுகிறது. பலரும் இது தான் பிரச்னையாக உள்ளது. இதற்குத் தீர்வாக அமையும் வகையில் ’ரெஸ்கியூ டைம்’ செயலி, போன் அல்லது லேப்டாப்பில் உங்கள் செயல்பாடுகளை கண்காணிக்கிறது.
நீங்கள் எந்த எந்த சாதனங்கள் அல்லது இணையதளங்களில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள் என இது வகைப்படுத்தி உங்கள் நேர பயன்பாடு தொடர்பான புரிதலை அளிக்கிறது. உங்கள் செயல்பாடுகளை பாதிக்கும் இணையதளங்களை கண்டறிந்த பிறகு, அந்த தளங்களை பயன்படுத்தாமல் முடக்க வழி செய்கிறது.
கவனம் செலுத்துவதற்கான இந்த நேரத்தில், நோட்டிபிகேஷன் இடையூறு இல்லாமல் பணிகளை செய்யலாம். எனினும், இந்த செயலி சில தளங்களை கவனச்சிதறல் என சுட்டிக்காட்டினால் அவற்றை வகைப்படுத்த வேண்டும்.
RescueTime: இரண்டு விதமான திட்டங்களை கொண்டுள்ளது: ரெஸ்கியூடைம் லைட் இலவசம். ரெஸ்கியூடைம் பிரிமியம் மாதம் 12 டாலர்.
இலவச சேவையில் வாராந்திர அறிக்கைகளை பெறலாம் என்றாலும் இரண்டு வாரங்களில் இவை டெலிட் செய்யப்படும்.
2. ஃபாரெஸ்ட் (Forest)
ஃபாரெஸ்ட் செயலி, ஒரு விதையை நட்டு அது வளர்வதை பார்க்கும் எளிய எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், நீங்கள் ஆழமான கவனம் வடிவில் இருந்து விலகினீர்கள் என்றால், எல்லாவற்றையும் மீண்டும் துவங்க வேண்டும்.
தினமும் உங்கள் செயல்களை செய்து முடிக்க இப்பை மரம் வளரும் முறையை பயன்படுத்துவது உளவியல் நோக்கில் நல்ல உத்தியாகும். இந்த செயலி ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு இலவசமானது. ஆப்பிள் போன்களுக்கு 1.99 டாலர் மாத கட்டணம். எனினும், இலவச குரோம் நீட்டிப்பு சேவை இருக்கிறது.
3. ஸ்பேஸ் (Space)
பெயர் உணர்த்துவது போல, இந்த செயலி திரை நேரத்தை கண்காணித்து அதை குடும்பத்தினர், நண்பர்களுடன் செலவிடும் நேரத்துடன் ஒப்பிட்டு பார்க்க வைக்கிறது. இதன் மூலம் திரை நேரத்தை குறைத்து தினசரி செயல்களில் கவனம் செலுத்தலாம்.
இந்த செயலியை தரவிறக்கம் செய்த பிறகு, உங்கள் போன் பயன்பாடு தொடர்பான சில கேள்விகள் கேட்கப்பட்டு, திரை நேரம் குறைப்பதற்கான இலக்கு அளிக்கப்படுகிறது. இலவச சேவையாகவும் கிடைக்கிறது. 3.99 டாலர் எனும் ஒரு முறை கட்டணம் செலுத்தி, பயனுள்ள குறிப்புகள் மற்றும் வாழ்க்கை/ போன் சமநிலை பயிற்சி வகுப்பையும் அணுகலாம்.
4. ஃபிரிடம் (Freedom)
கவனச்சிதறலாக அமையும் இணையதளங்களோ அல்லது செயலிகளோ இந்த ஆப் அவற்றை எல்லாம் முடக்குகிறது. நேரத்தை வீணடிக்கும் இணையதளங்கள் அல்லது சமூக ஊடக சேனல்களை தவிர்க்க இந்த செயலி உதவுகிறது. 3 மில்லியன் பேருக்கு மேல் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர்.
மேக், விண்டோஸ், ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு என எல்லா சாதனங்களிலும் செயல்படும். இலவச சேவை மற்றும் ஆண்டுக்கு 3.99 டாலர் வடிவில் அணுகலாம்.
5. கோல்ட் டர்கி (Cold Turkey)
கவனச்சிதற்களை முடக்கும் மிகவும் தீவிரமான செயலியை விரும்பினால், ’கோல்ட் டர்கி’ நல்ல தேர்வு. இந்த செயலி சமூக ஊடக மேடைகள் இணையதளங்களில் இருந்து உங்களை விலக்கி வைப்பதோடு, புரோசன் டர்கி எனும் அம்சம் மூலம் மொத்த இணையதளத்தில் இருந்தும் விலக்கி வைக்கிறது.
நேர அம்சத்தை நீக்க வழி செய்யும் டைம் மேனஜர் செயலியின் அம்சத்தையும் இது முடக்குகிறது. வேலை செய்வது அல்லது இணைய பயன்பாடு எனும் இரண்டு வாய்ப்பை மட்டுமே அளிக்கிறது. நேரத்தை வீணடிக்காமல் வேலையில் கவனம் செலுத்த உதவும்.
இந்த செயலி, இலவச வடிவம் தவிர மூன்று விதமான கட்டணங்களை கொண்டுள்ளது: ரைட்டர் - $9 மைக்ரோமேனேஜர் - $19 பிளாக்கர் - $39
இந்த செயலிகள் மூலம் கவனச்சிதறலை குறைத்து உங்கள் நேரத்தை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் நேரம் என்பது மிகவும் விலை மதிப்பில்லாதது.
ஆங்கிலத்தில்: ஆஸ்மா கான் | தமிழில்: சைபர் சிம்மன்
இரண்டு நிமிட விதி டு சபல சமாளிப்பு - உங்களின் அட்டகாச ரொட்டீன் வாழ்க்கைக்கு 11 டிப்ஸ்!
Edited by Induja Raghunathan