Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

டைம் ‘உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 இந்தியர்கள்!

உலகின் சக்திவாய்ந்த 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா உள்ளிட்ட 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டைம் ‘உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள்’ பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 இந்தியர்கள்!

Thursday September 24, 2020 , 1 min Read


டைம் நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் 'உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள்’ பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலை இந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில் 5 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


அவர்களைப் பற்றிய விவரங்கள் இதோ:

1. பிரதமர் நரேந்திர மோடி

1

பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பதவியேற்றது முதல் நான்கு முறை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். தொடர்ந்து இவர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய அரசியல்வாதி நரேந்திர மோடி மட்டுமே.

2. ஆயுஷ்மான் குரானா

2

பிரபல பாலிவுட் நடிகரானா ஆயுஷ்மான் குரானா இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வெவ்வேறு கதைக்களங்களில் பல கற்பிதங்களை மாற்றியமைத்து தன் யதார்த்த நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஆயுஷ்மான் குரானா.   

3. பில்கிஸ்

3

பில்கிஸ் 82 வயது மூதாட்டி. டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கவனம் ஈர்த்தவர் பில்கிஸ்.

4. ரவீந்திர குப்தா

4

எய்ட்ஸ் நோய்க்கு மருந்தே இல்லாத நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் இந்தக் கொடிய நோயில் இருந்து மீண்டுள்ளார். பேராசரியர் ரவீந்திர குப்தா தலைமையிலான குழு மேற்கொண்ட ஆய்வே இந்த சிகிச்சைக்கு முக்கியக் காரணம். நம்பிக்கையளிக்கும் இந்த ஆய்வு மக்களிடையே அவரைப் பிரபலமாக்கியது.

5. சுந்தர் பிச்சை

5

சுந்தர் பிச்சை ஆல்ஃபபெட், கூகுள் ஆகிய நிறுவனங்களின் சிஇஓ, கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் புதிய முன்னெடுப்புகளிலும் சுந்தர் பிச்சை மிகப்பெரிய அளவில் பங்களித்துள்ளார்.


'உலகின் செல்வாக்குமிக்க 100 நபர்கள்’ பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், டெமாக்ரடிக் கட்சியின் துணை அதிபர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. ஜோ பைடன், ஜெர்மன் அதிபர் ஆன்ஜெல்லா மெர்கெல் உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.


தகவல் உதவி: டைம்ஸ்