75வது இந்திய சுதந்திர தினம்: சுவாரஸ்ய தகவல்கள், வரலாற்றுச் சிறப்புகள் இதோ!
ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் சில சுவாரஸ்யமான தகவல்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
75வது சுதந்திர தினம் 2022: வரலாறு:
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டம் இயக்கம் முதலாம் உலகப்போரின் போது தொடங்கப்பட்டது. உண்ணாவிரம், உப்பு சத்தியாகிரகம், தடியடி, துப்பாக்கிச்சூடு என பல விஷயங்களையும் கடந்து ஆகஸ்ட் 15, 1947 அன்று, பிரிட்டிஷ்-ன் 200 ஆண்டுகால ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது.
இந்திய சுதந்திர மசோதா 4 ஜூலை 1947 இல் பிரிட்டிஷ் ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டது, அது பதினைந்து நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்டது. இது 15 ஆகஸ்ட் 1947ல் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவை அறிவித்தது. அதன்பின்னர், சுதந்திர கிடைத்ததோடு, இந்தியா - பாகிஸ்தான் என இரு நாடாகவும் பிரிந்தது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற முக்கியப் பெயர்களில் சிலர் சுதந்திரப் போராட்டத்திற்காக முக்கியப் பங்காற்றியுள்ளனர். தமிழகத்தில் கூட கட்டபொம்மன் முதற்கொண்டு வ.உ.சிதம்பரனார் வரை பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சுதந்திரத்திற்காக தங்களது இன்னுயிரை ஈந்துள்ளனர்.
சுதந்திர தினத்தின் முக்கியத்துவம்:
இந்திய சுதந்திர தினத்தின் போது முழு நாட்டிற்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு, பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கு நடத்தப்படுகிறது.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1947 ஆகஸ்ட் 15 அன்று டெல்லியில் உள்ள செங்கோட்டையின் லாஹோரி வாயிலுக்கு மேலே இந்திய தேசியக் கொடியை ஏற்றினார், அதன் பின்னர், ஆண்டுதோறும் பிரதமர் தேசியக்கொடியை ஏற்றிவைத்து நாட்டுமக்களுக்காக உரையாற்றுவது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
75வது சுதந்திர தினத்திற்கான ஏற்பாடுகள்:
இந்தியாவில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 75ம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ‘சுதந்திர தின அமிர்த பெருவிழா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக ‘இல்லம் தோறும் தேசிய கொடி’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.
இதன் படி, 13ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை அனைவரது வீடுகளிலும் சுதந்திர கொடியை பட்டொளி வீசி பறக்க வைக்க வேண்டுமென வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து இந்திய மக்களும் தங்களது சோசியல் மீடியா முகப்பு படத்தில் மூவர்ண கொடியை வைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறைக்கூவல் விடுத்திருந்தார்.
மேலும், இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 75 நகரங்களில் 75 வாரத்திற்கு சுதந்திர தினத்தை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தும் பொருட்டு, 10 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். செங்கோட்டை பகுதியைச் சுற்றி 1,000- க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை, கொல்கத்தா, மும்பை, கொச்சி, டெல்லி, பெங்களூரு, அமிர்தசரஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிலையங்களில் ஐந்தடுக்கு பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை முதல் மாநில அரசுகளின் கோட்டை கொந்தளங்கள் வரை வர்ணம் பூசப்பட்டது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகியுள்ளது.
டாப் 5 சுவாரஸ்யங்கள்:
1. 1911 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட ‘பரோதோ பாக்யோ பிதாதா’ பாடல் ‘ஜன கன மன’ என்று பெயர் மாற்றப்பட்டது. இது 24 ஜனவரி 1950 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையால் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2. இந்திய தேசியக் கொடி 1906 ஆகஸ்ட் 7 அன்று கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. இந்தியாவின் தேசியக் கொடியின் முதல் வடிவம் 1921 இல் சுதந்திரப் போராட்ட வீரர் பிங்கலி வெங்கையாவால் வடிவமைக்கப்பட்டது. தற்போதைய கொடி காங்கிரஸ் கொடிக்குழு மூலமாக மறு வடிவமைப்பு செய்யப்பட்டு, அதிகாரப்பூர்வமாக 22 ஜூலை 1947 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
3. இந்தியாவுடன் இணைந்து ஆகஸ்ட் 15 அன்று பஹ்ரைன், வட கொரியா, தென் கொரியா மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகள் தங்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன.
4. இந்தியக் கொடி தேசத்தில் ஒரே ஒரு இடத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. கர்நாடகாவின் தார்வாட்டில் அமைந்துள்ள கர்நாடக காதி கிராமோத்யோக சம்யுக்த சங்கம் (KKGSS), இந்திய தேசியக் கொடிகளை தயாரித்து வழங்குவதற்கான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. கொடியானது ஹேண்ட்ஸ்பன் மற்றும் கையால் நெய்யப்பட்ட பருத்தி காதி அலைகளால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
5. இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, கோவா இன்னும் ஒரு போர்த்துகீசிய காலனியாக இருந்தது, இது 1961ல் மட்டுமே இந்திய இராணுவத்தால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம், கோவா இந்தியப் பிரதேசத்தில் இணைந்த கடைசி மாநிலமாக அங்கீகரிக்கப்பட்டது.