'ஒரே நாளில் கோடீஸ்வரர்’ - ஆதிவாசி தொழிலாளிக்கு அடித்த ரூ.12 கோடி பரிசு!

ஏழை ஆதிவாசி தொழிலாளியான ராஜனை ஒரே நாளில் கோடீஸ்வரராக மாற்றிய லாட்டரிச் சீட்டு.

13th Feb 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

‘லாட்டரி அடிச்சா தான் உண்டு...’ அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்புவர்கள் அடிக்கடி இப்படிச் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். ஏனெனில் ஒரே நாளில் ஓட்டாண்டியைக்கூட கோடீஸ்வரன் ஆக்குபவை லாட்டரி சீட்டுகள் மட்டுமே. ஆனால் உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி, கிடைக்கும் வருமானத்தையும் லாட்டரியிலேயே கொண்டு போய் கொட்டுபவர்கள் ஏராளம். இதனாலேயே தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளாவில் இன்னமும் லாட்டரி சீட்டு விற்பனை ஜோராக நடந்து வருகிறது. கேரள அரசு சார்பிலேயே லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் பம்பர் குலுக்கல் நடைபெறுவதும் வழக்கம்.

கேரள லாட்டரி

பட உதவி: Malayala Manorama

அந்தவகையில் சமீபத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் குலுக்கலில் அம்மாநில ஆதிவாசி தொழிலாளியான ராஜன் என்பவருக்கு லாட்டரியில் 12 கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.

ராஜன், கண்ணூர் மாவட்டம் கூத்தம்பரம்பு பகுதி ஆதிவாசி காலனியைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். குடிசை வீட்டில் வசித்து வரும் ஏழைக் கூலித் தொழிலாளியான ராஜன், பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டை, வயநாட்டில் உள்ள ஒரு லாட்டரி வியாபாரியிடம் வாங்கியிருந்தார்.

தான் வாங்கிய லாட்டரிச் சீட்டுக்கு பரிசு விழுந்திருப்பதை அறிந்த ராஜன் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அந்த பரிசுத் தொகையை அருகில் உள்ள வங்கியில் அவர் டெபாசிட் செய்து விட்டார்.

“நான் அடிக்கடி லாட்டரிச் சீட்டு வாங்குவதில்லை. எப்பொழுதாவது ஒருமுறை தான் வாங்குவேன். அப்படி வாங்கிய சீட்டுக்குத் தான் தற்போது பரிசு விழுந்துள்ளது. ஆனால் அதற்கு முதல் பரிசு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த பரிசு பணத்தை என்னுடைய மூன்று பிள்ளைகளின் எதிர்காலச் செலவுகளுக்கு பயன் படுத்த முடிவு செய்துள்ளேன்,” என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் ராஜன்.

பரிசுத் தொகையான ரூ.12 கோடியில், வருமான வரியாக 30 சதவிகிதம், 10 சதவிகித ஏஜன்ட் கமிஷனும் பிடித்தம் போக மீதித் தொகை ராஜனுக்கு வழங்கப்படும். ராஜனை ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆக்கிய அந்த அதிர்ஷ்டமான லாட்டரியின் எண் இது தான் ST 269609.

Rajan

ராஜன் மட்டுமல்ல, சமீபகாலமாக கேரளாவில் லாட்டரிச் சீட்டு மூலம் ஏழைகள் பலர் பணக்காரர்களான சம்பவம் அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு, ஆலப்புழாவைச் சேர்ந்த மீனவ இளைஞரான அந்து, ராணுவத்தில் சேர முயன்று தோல்வியடைந்த வேதனையில் இருந்தபோது, அவருக்கு கேரள அரசின் ஸ்ரீசக்தி லாட்டரிச் சீட்டு மூலம் ரூ.70 லட்சம் பரிசாகக் கிடைத்தது. அதுதான் அவரது வாழ்நாளில் வாங்கிய முதல் லாட்டரி சீட்டு ஆகும்.


இதேபோல், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளக்காரா கிராமத்தில் சிவன் என்பவருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வந்து கதவைத் தட்டியது. இதய நோயாளி என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு லாட்டரி விற்பனை செய்தவர் ஒருவரிடம், மனைவியின் தூண்டுதலால் சிவன் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கினார். அதில் அவருக்கு ரூ.70 லட்சம் பரிசாக விழுந்தது.


கடந்தாண்டு கடலை வியாபாரி ஒருவருக்கு ரூ.60 லட்சமும், முன்னாள் பஞ்சாயத்து கவுன்சிலரான 60 வயது முதியவருக்கு 6 கோடி ரூபாயும் லாட்டரியில் பரிசாகக் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

Our Partner Events

Hustle across India