AI தொழில்நுட்ப வளர்ச்சியால் சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வேலைக்கு ஆபத்தா? - சுந்தர் பிச்சை சொன்ன பதில் என்ன?
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து பேசியுள்ளார்.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சமீபத்தில் நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து பேசியுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சாட்ஜிபிடி (CharGPT) மற்றும் கூகுளின் பார்ட் (Bard) போன்ற செயற்கை நுண்ணறிவு டூல்களின் அடுத்தடுத்த அசுர வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத் துறையில் பல்வேறு பிரிவினரையின் வேலைக்கும் ஆபத்தானதாக அமையும் என்ற கருத்துக்கள் உலவி வரும் நிலையில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை கொடுத்துள்ள பதில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நியூயார்க் டைம்ஸின் போட்காஸ்ட் நேர்காணலில் பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையிடம், ChatGPT போன்ற AI கருவிகளால் மென்பொருள் பொறியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
"மென்பொருள் பொறியாளர்களுக்கு இரண்டு விஷயங்கள் உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒன்று, Ai நீங்கள் உருவாக்கும் புரோகிராமிங்கை சற்றே மேம்படுத்த உதவும். கூகுள் டாக்ஸ் எவ்வாறு எழுதுவதை எளிதாக்கியதோ, அதுபோல காலப்போக்கில் புரோகிராமிங் செய்வது மிகவும் சுவாரஸ்யமானதாக மாறும். ஒருவேளை நீங்கள் புரோகிராமராக இருந்தால், AI உடனான தொடர்பு புரோகிராமிங் செய்வதை எளிதாக்கும் என நினைக்கிறேன்,” எனக்கூறியுள்ளார்.
இந்த நேர்காணலில் சுந்தர்பிச்சை, AI சாட்பாட்களின் நேர்மறையான அம்சங்கள் குறித்து பேசியுள்ளார். பார்ட் மற்றும் சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறிவு டூல்கள், புரோகிராமிங்கை எளிதாக்கக்கூடும். இந்த கருவிகள் புதிய பொருட்களை உருவாக்க பயனர்களுக்கு உதவும், இது புதிய பாத்திரங்களை உருவாக்க வழிவகுக்கும், எனக்கூறியுள்ளார்.
பார்ட் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சுந்தர்பிச்சை,
“எங்களிடம் அதிகத் திறன் கொண்ட மாதிரிகள் உள்ளன. விரைவில், பார்டை எங்களின் சில திறமையான பாத்வேஸ் லாங்குவேஜ் மாடல் (உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி) (PaLM) மாடல்களுக்கு மேம்படுத்துவோம், இது அதிகத் திறன்களைக் கொண்டுவரும்; பகுத்தறிவு, குறியீட்டு முறை என எதுவாக இருந்தாலும், கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கும்,” எனக்கூறியுள்ளார்.
சாட்ஜிபிடி-யை விட கூகுள் பார்ட் பின்தங்கிய நிலையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், சுந்தர் பிச்சையின் விளக்கம் அதனை மேம்படுத்த கூகுள் நிறுவனம் எடுத்து வரும் மேம்பாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது.
'கார், ராக்கெட்டை விட ChatGpt ஆபத்தானவை’ - TruthGpt தொடங்கப்போவதாக எலான் மஸ்க் அறிவிப்பு!