பிறரின் உயிரைக் காப்பாற்றிய நல்லுள்ளங்களுக்கு ‘Alert Being Awards’– விருதுக்கு தேர்வாக விண்ணப்பியுங்கள்!
மக்களின் உயிரைக் காப்பாற்றி சமூக நலனில் பங்களித்த நல்லுள்ளங்களை Alert Being விருதுகளுக்காக பரிந்துரை செய்யலாம். தேர்வு செய்யப்படுபவர்கள் சென்னையில் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெற உள்ள ALERT BEING AWARDS விழாவில் கௌரவிக்கப்படுவார்கள்.
”நான் என்னுடைய அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிவருகிறேன். இருப்பினும் நீங்கள் என்னிடம் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும்கூட இன்று நான் செய்துவரும் சேவையின் மூலம் கிடைக்கும் மன திருப்தி எனக்குக் கிடைக்காது,” என்கிறார் 2018-ம் ஆண்டு Alert Being விருது பெற்ற ஆம்புலன்ஸ் மணி.
அக்கறையின்மையும் அச்சமும் நிறைந்த இந்த உலகில் மணி போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களின் வாழ்க்கைப் பயணம் நமது சமூகத்தில் இரக்கக் குணத்தை ஊக்குவித்து உந்துதலளிக்கிறது. Alert Being Awards 3.0 மக்களின் உயிரைக் காப்பாற்றி தனிநபர் வாழ்க்கையிலும் சமூகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தும் மணி போன்ற நல்லுள்ளங்களை அங்கீகரித்து கௌரவிக்கும் தனித்துவமான விருது ஆகும்.
மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் நல் உள்ளங்களுக்கு உந்துதலளிக்கும் நோக்கத்துடன் ALERT என்கிற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் இந்த விருதுகளை வழங்குகிறது.
Alert Being 2019 விருதுகளின் மூன்றாம் பதிப்பிற்கான பரிந்துரைகள் ஏற்கப்படுவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த ஆண்டு ALERT Being Awards மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ள 13 நல்லுள்ளங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஷகீல் அக்தர் ஐபிஎஸ் - ஏடிஜிபி, டாக்டர் ஜெ.எஸ்.ராஜ்குமார்– தலைவர், LIMA, Nawabzada மொஹமத் ஆசிஃப் அலி- ஆற்காடு இளவரசரின் திவான், வீணா குமரவேல்– நிறுவனர், நேச்சுரல்ஸ் க்ரூப் ஆஃப் சலூன், சுஜித் குமார்– நிறுவனர், மாற்றம் அறக்கட்டளை ஆகிய ஜூரி உறுப்பினர்கள் பரிந்துரைகளில் இருந்து விருது பெறத் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ALERT BEING AWARDS 2019 விழாவில் கௌரவிக்கப்படுவார்கள்.
ALERT BEING AWARDS 2019 குறித்து ALERT நிறுவனர் கலா பாலசுந்தரம் கூறும்போது,
“எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி அடுத்தவர் உயிரைக் காக்கும் நல்லுள்ளங்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. ALERT போன்ற நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிர் காக்கும் நுட்பங்கள் குறித்து பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கிறது. Alert Being Awards போன்ற அங்கீகாரங்கள் பல்வேறு வகைகளில் உயிரைக் காப்பாற்றி முன்னுதாரணமாகத் திகழ்பவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி கௌரவித்து நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் உன்னத குணத்தை வெளிக்கொணர்கிறது,” என்றார்.
கடந்த ஆண்டு அலெர்ட் அவார்டுகள் 33 தகுதியான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரின் சமூக ஆர்வமும், அவர்கள் செய்துள்ள தன்னலமற்ற செயலும் எல்லார் மனதையும் நெகிழவைத்தது. யுவர்ஸ்டோரி தமிழ் இந்த ஆண்டும் ‘Alert Being Awards 2019'ன் ஆன்லைன் மீடியா பார்ட்னராக உள்ளது.
விண்ணப்பம் தகவல்கள்:
விருதுகளுக்கு விண்ணப்பிக்கும் லின்க்: ‘Alert Being Awards 2019'
விண்ணப்பங்கள் பெறும் கடைசி நாள்: 21ம் தேதி ஜூலை’2019
விருதுகள் வழங்கும் விழா நாள்: 8ம் தேதி செப்டம்பர்’2019
இ-மெயில் தொடர்பு: [email protected]