சரிவை சந்திக்கும் Paytm: நிறுவனத்தை விட்டு வெளியேறிய முதலீட்டாளர் அலிபாபா ஜாக் மா!
பேடிஎம் மால் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இரண்டு முக்கிய முதலீட்டாளர்கள்.
'
' இந்தியாவின் இ-காமர்ஸ் சந்தையில் ஐந்து ஆண்டுகளாக மிகப்பெரிய பந்தயத்தை உருவாக்கிய நிலையில் தற்போது ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் ஆன்ட் ஃபைனான்சியல்ஸ் பேடிஎம் இ-காமர்ஸ் பிரைவேட் லிமிட்டெடில் இருந்து வெளியேறியுள்ளன. பேடிஎம் இ-காமர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் ஆனது பேடிஎம் மாலின் தாய் நிறுவனமாகும்.2020 ஆம் ஆண்டில் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான இணையவழி துணை நிறுவனமான பேடிஎம் மாலின் மதிப்பு $3 பில்லியன் ஆகும்.
சீன கோடீஸ்வரர் ஜாக் மா தலைமையிலான அலிபாபா மற்றும் ஆன்ட் ஃபைனான்சியல்ஸ் நிறுவனங்கள் பேடிஎம் மாலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. பேடிஎம் மால் நிறுவனமும் இதை உறுதி செய்துள்ளது. இரண்டு முக்கிய முதலீட்டாளர்களும் 43.32 சதவீத பங்ககுளை விற்றிருக்கின்றனர்.
அலிபாபா நிறுவனத்திடம் இருந்த 28.3 சதவீத பங்குகள் மற்றும் ஆன்ட் ஃபைனான்சியலின் 15 சதவீத பங்குகள் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 2020 ஆம் ஆண்டில் விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான இணையவழி துணை நிறுவனமான பேடிஎம் மாலின் மதிப்பு $3 பில்லியன் ஆகும். 2022 ஆம் ஆண்டில் வெளியான ஹாரூன் யூனிகார்ன் பட்டியலில் பேடிஎம் நிறுவன மதிப்பு $1 பில்லியனுக்கு குறைவாக சரிந்தது கவனிக்கத்தக்க ஒன்று.
ஆசிய பில்லியனரான ஜாக் மா, விஜய் சேகர் ஷர்மா தலைமையிலான பேடிஎம் நிறுவனத்தில் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர் ஆவார். அலிபாபா, ஆன்ட் ஃபைனான்சியல்ஸ் போன்ற முதலீட்டாளர்களிடம் இருந்து பேடிஎம் $800 மில்லியன் வரை நிதி திரட்டியிருந்தது. முதலீட்டு நிறுவனங்களில் நிதி, சாஃப்ட் பேங்க், எலெவேஷன் கேபிடல், இ-பே போன்றவைகள் உள்ளடக்கம்.
சீனாவில் உள்ள அலிபாபாவின் ’டி-மால்’ மாதிரியாக இந்தியாவில் ’பேடிஎம் மால்’ வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியாவில் முன்னதாகவே கொடிகட்டி பறக்கம் ஃபிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்களிடம் இருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டது.
பேடிஎம் நிறுவனத்தில் இருந்து முக்கிய இரண்டு முதலீட்டாளர்கள் வெளியேறிய நிலையில் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சரிவை சந்தித்தது.
பேடிஎம் மால் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது,
"இந்தத் துறை அதிக போட்டித் தன்மையுடன் தொடர்ந்தது மற்றும் பல பெரிய போட்டியாளர்களின் முன்னிலையில் சந்தைப்படுத்தப்பட்டது," என நிறுவனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக இடத்தின் பரிணாமம், சந்தை பொருளாதாரம் வீழ்ச்சி மற்றும் தொற்று நோய் போன்ற காரணங்களால் குறிப்பிட்ட முதலீட்டாளர்கள் முதலீடுகளை விட்டு வெளியேற தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், புத்துயிர் மற்றும் வளர்ச்சிக்கான பாதையை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது, "ஒரு புதிய பாதையில்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம் மே 23 அன்று ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது கவனிக்கத் தக்க ஒன்று.
இது குறித்து பேடிஎம் மால் செய்தி தொடர்பாளர் Yourstory தளத்துக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில்,
“முதலீட்டாளர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய காரணத்தால் நிறுவனத்தின் மதிப்பு குறைந்துள்ளது என்பதை மறுத்துள்ளார். நிறுவனம் மேற்கோள் காட்டப்பட்ட மதிப்பீட்டை விட அதிகமான ரொக்க கையிருப்பைக் கொண்டிருப்பதால், நிறுவனத்தின் மதிப்பீட்டை $13 மில்லியனுக்கு கீழ் மதிப்பிட முடியாது,” என செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனத்தில் இருந்து முதலீட்டாளர்கள் வெளியேறுவது என்பது நிறுவனத்தின் மதிப்பீட்டை பிரதிபலிக்காது. இதற்கும் எந்த எஃப்டிஐ சட்டங்களுக்கும் தொடர்பு இல்லை. முதலீட்டாளர்கள் வெளியேறுவது என்பது பண இருப்பை மட்டுமே குறிக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
தற்போது ஊடக அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்ட எண்ணிக்கையை விட நிறுவனத்தின் மதிப்பு கணிசமாக அதிகமாகவே உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில்: துர்கா