சொந்த வீட்டை விற்று ஒரே துணியில் மூவர்ணக் கொடி நெய்து சாதனை!
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட உள்ளது. 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (Azadi ka Amrit Mahotsav) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட்டப்பட உள்ளது. 75வது சதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (Azadi ka Amrit Mahotsav) என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ‘இல்லம் தோறும் மூவர்ணகொடி’ (Har Ghar Tiranga) ’ஹர் கர் திரங்கா' என்ற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மக்கள் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை பறக்கவிட தயாராகி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஐடியாவான 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தை முன்னெடுக்கும் விதமாக கடலோர ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நெசவாளர் செய்துள்ள செயல் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
சொந்த வீட்டை விற்று தேசியக்கொடி உருவாக்கிய நெசவாளர்:
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள வேமாவரம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியநாராயணா என்ற நெசவாளர் தனது தேசியக் கொடி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்ற தீராத ஆசை மற்றும் தேசபக்தியுடன் 4 ஆண்டுகளாக ஒற்றை துணியால் ஆன நீளமான தேசியக்கொடியை நெய்து வருகிறார்.
உலகிலேயே முதன் முறையாக ஒரே துணியைக் கொண்டு இந்திய தேசியக் கொடியை நெய்துள்ளார். இதற்காக தான் வசித்து வந்த வீட்டையே விற்று 6.5 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளார்.
இப்படியொரு சிந்தனை ஏன் வந்தது என்பது தொடர்பாக சத்தியநாராயணா கூறுகையில்,
கொடி நெசவுப் பணிக்காக 6.5 லட்சம் ரூபாய் செலவு செய்தேன். நான் பல முறை தோல்வியடைந்தேன், ஏனென்றால் ஒரு துணியில் கொடியை உருவாக்குவது மிகவும் தந்திரமானது, குறிப்பாக அசோக் சக்ரா பகுதிக்கு வரும்போது, சக்ரா பகுதியை சரியாக நெசவு செய்ய முடியாததால் நான் பல முறை தோல்வியடைந்தேன், பின்னர் நான் மீண்டும் தொடங்க வேண்டியிருந்தது. இதனாலேயே எனக்கு நான்கு வருடங்கள் பிடித்தன,” என்கிறார்.
தற்போது, ‘திரங்கா’ என்ற உலகிலேயே மிகவும் நீளமான ஒரே துணியால் ஆன தேசியக்கொடியை நெய்யும் பணியை மேற்கொண்டு வருகிறார்.
“நெசவு செய்வது என்னுடைய தொழில் என்பதால், எனக்கு பெரிய அளவில் பணம் தேவைப்படாது என்று நினைத்தேன். அதன் பின்னர், செங்கோட்டையில் ஏற்றப்பட்ட கொடியின் உண்மையான பரிமாணத்தை பற்றி அறிந்த போது, அது எளிதான பயணம் அல்ல என்பதை உணர்ந்தேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு முதல் முறையாக செங்கோட்டையில் பறந்த கொடியின் போட்டோவை பார்த்ததில் இருந்தே அவருக்குள் தனது கொடியும் அவ்வாறு பறக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.
இதற்காக அவர் தீவிர வேலையில் இறங்கியிருந்த போது, எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு விபத்து அவருடைய கனவையையும், வாழ்க்கையும் ஒரே நாளில் புரட்டிப்போட்டது. உண்மையில் கொடியை உருவாக்குவதற்கு முன்பு, அவர் சேலைக்கான டிசைன் கட்டைகளை வடிமைத்து கொடுப்பவராக பணியாற்றி வந்தார். ஒருநாள் 80 புடவைகளுடன் அவர் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, விபத்தில் சிக்கி நிலைதடுமாறி விழுந்தார். ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள ஒவ்வொரு புடவைகளும் திறந்த வாய்க்காலில் விழுந்து நாசமானது.
இந்த சம்பவத்திற்கு பிறகு சத்யநாராயணன் 20 லட்சம் ரூபாய் கடனில் சிக்கினார். இதனால், அந்த கடன் தொகையை திரும்பிச் செலுத்துவதா? அல்லது தனது கனவு கொடியை உருவாக்குவதா? என்பதை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இறுதியில், அவர் தனது கனவைத் தொடர முடிவு செய்ததால், அவர் தனது வீட்டை விற்று, அவரது நண்பர்கள் சிலரிடம் கடன் பெற்றும் தனது கனவு கொடியை நெய்யும் பணியை தொடர்ந்தார்.
கொடியை வெற்றிகரமாக வடிவமைத்த பிறகு, அவர் உருவாக்கிய அதிசயத்தை உண்மையில் வெளிக்கொண்டு வர கடும் முயற்சிகளை எடுத்துக் கொண்டார். 2019ம் ஆண்டு உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் உதவியுடன் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தான் நீண்டதொரு கொடியை உருவாக்கும் பணி பற்றி தெரிவித்த அவர், அதை பிரதமர் மோடி தனது கையால் சுதந்திர தினத்தன்று அந்த கொடியை ஏற்ற வேண்டும் என நினைத்தார்.
செங்கோட்டையில் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவதைப் பார்க்க வேண்டும் என்ற சத்தியநாராயணனின் கனவு இன்னும் நிறைவேறவில்லை, ஆனால், அவர் அதற்கான தீவிர முயற்சியை எடுத்து வருகிறார்.
தகவல் உதவி - ஃபஸ்ட் போஸ்ட் | தமிழில் - கனிமொழி