Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சென்னை நிறுவனம் 'Bluebinaries'-இல் ரூ.60 கோடி முதலீடு செய்தது அனிகட் கேபிட்டல்!

பல துறை முதலீட்டும் நிறுவனம் அனிகட் கேபிடல், போக்குவரத்து சார்ந்த துறைக்கான முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனம் ப்ளுமைனரிஸ் இஞ்சினியரிங் அண்ட் சொல்யூஷன்சில் ரூ.60 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னை நிறுவனம் 'Bluebinaries'-இல் ரூ.60 கோடி முதலீடு செய்தது அனிகட் கேபிட்டல்!

Wednesday August 07, 2024 , 2 min Read

பல துறை முதலீட்டும் நிறுவனம் அனிகட் கேபிட்டல், போக்குவரத்து சார்ந்த துறைக்கான முன்னணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனம் 'ப்ளுமைனரிஸ் இஞ்சினியரிங் அண்ட் சொல்யூஷன்சில்' (Bluebinaries Engineering & Solutions) ரூ.60 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த முதலீடு, உலகளவிலான விரிவாக்கத்தில் ஈடுபடும் நிலையில், போக்குவரத்து சார்ந்த துறைக்கு அதிநவீன தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ப்ளுபைனரிஸ் நிறுவன ஈடுபாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைகிறது. மேலும், வளர்ச்சி நிலை ஸ்டார்ட் அப்களை ஆதரிக்கும் அனிகட் கேபிட்டலின் பார்வையையும் உறுதியாக்குகிறது.

2017ல் சென்னையில் நிறுவப்பட்ட ப்ளுபைனரிஸ் போக்குவரத்து சார்ந்த துறையில் முக்கிய ER&D சேவைகள் நிறுவனமாக உருவாகி வருகிறது. பிராடக்ட் மற்றும் டிஜிட்டல் பொறியியல் பிரிவில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட நிறுவனம் ஐரோப்பா, யுகே, அமெரிக்கா மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

Anicut Capital

கட்டுமான வடிவமைப்பு – வளர்ச்சி சேவைகள் மற்றும் கிளவுட், சைபர்பாதுகாப்பு உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளுடன் மென்பொருள் வரையறை வாகனங்கள் (SDVs), உருவாக்கத்தில் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவன செயல்திறனில் அனிகட் நம்பிக்கை கொண்டுள்ளது.

"2030ல் தானியங்கி மின்னணு மற்றும் மென்பொருள் ஆட்டோமொபைல் சந்தை 80 பில்லியன் டாலர் அளவு வளர உள்ளது. பாதுகாப்பான, அதிக இணைப்பு வசதி கொண்ட வாகனங்களுக்கான தேவை அதிகரிக்க உள்ளது. துறை மற்றும் பொறியியல் அனுபவம் கொண்ட ப்ளுபைனரிஸ் இந்த துறையில் சிறந்து விளங்கும் நிலையில் உள்ளது,” என அனிகட் கேபிடல் பாட்னர் துருவ் கபூர் கூறியுள்ளார்.

நிதி உயர்த்தியது குறித்து பேசிய ப்ளுபைனரிஸ் இணை நிறுவனர், தலைவர், சி.ஓ.ஓ. கிஷோர் எல்.எம்,

"இந்த முதலீடு முக்கியமானது. ஓஇஎம்-ற்கான வலுவான வாடிக்கையாளர் பரப்பை உருவாக்குவதில் ஈடுபட இது எங்களுக்கு உதவும்," எனக் கூறியுள்ளார்.

போக்குவரத்து சார்ந்த துறையின் சிக்கலான சவால்களுக்கு தீர்வு காண்பதன் அடிப்படையில் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் புதுமையாக்கம் அமைந்துள்ள நிலையில், அனிகட் கேபிட்டல் முதலீடு நிறுவனம் தனது டிஜிட்டல் முதன்மை அணுகுமுறையை தீவிரமாக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Edited by Induja Raghunathan