ரசிகர்களுக்கான NFT கலெக்ஷனை அறிமுகம் செய்கிறார் கிறிஸ்டினா ரொனால்டோ!
ரொனால்டோ ரசிகர்களுக்கான என்.எப்.டி கலெக்ஷன் வரும் 18 ம் தேதி முதல் கிடைக்க உள்ளது. Binance நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக இது அமைகிறது.
சர்வதேச கால்பந்து நட்சத்திரமான கிறிஸ்டினா ரொனால்டோ, தனது அண்மை நேர்காணல் சர்ச்சைக்கு மத்தியில்
என்.எப்.டி (NFT) சந்தையில் தனது முதல் என்.எப்.டி கலெக்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறார்.இது தொடர்பான அறிக்கையில், ரொனால்டோ என்.எப்.டி கலெக்ஷன் நவம்பர் 18ம் தேதி முதல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஜூன் மாதம் கையெழுத்திடப்பட்ட பிளாக்செயின் மற்றும் கிர்ப்டோ நாணய நிறுவனமான Binance உடனான கூட்டின் ஒரு பகுதியாக இது நிகழ்கிறது.
ரொனால்டோ ரசிகர்களுக்கு என்.பி.டி தொடர்பான அறிமுகத்தை அளிக்க, நிறுவனம் மற்றும் ரொனால்டோ சர்வதேச அளவிலான மார்க்கெட்டிங் திட்டத்தை மேற்கொள்ள உள்ளனர்.
“எனது ரசிகர்கள் நினைவில் கொள்வதற்கு என மிகவும் தனித்தன்மை வாய்ந்த ஒன்றை உருவாக்கியிருப்பது முக்கியமானது, ஏனெனில் அவர்கள் என் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்,” என்று ரொனோல்டோ இந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“Binance நிறுவனத்துடன் இணைந்து விளையாட்டின் ஈடுபாட்டை பிரதிபலிக்கும் வகையிலும், இதை ஆதரிக்க வரும் ரசிகர்களுக்கு பரிசளிக்கும் வகையிலும் ஒன்றை உருவாக்க முடிந்துள்ளது,” என்றும் அவர் கூறியுள்ளார்.
"மெட்டாவர்ஸ் மற்றும் பிளாக்செயின் தான் இணையத்தின் எதிர்காலம் என நம்புகிறோம். மக்கள் பிளாக்செயினை புரிந்து கொள்ளும் வகையில் ரொனோல்டோவுடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்கிறோம்,” என Binance இணை நிறுவனர் He Yi கூறியுள்ளார்.
நேர்காணல் சர்ச்சை
இந்த வாரத்தின் துவக்கத்தில் பியர்ஸ் மார்கனுக்கு அளித்த நேர்காணலில் ரொனால்டோ, தனது தற்போதைய கால்பந்து கிளப் மான்செஸ்டர் யுனைடெட்டால் துரோகம் இழைக்கப்பட்டதாகக் கூறியிருந்தார். அதன் பயிற்சியாளர் மற்றும் முன்னாள் தலைவர் மீதும் குற்றம் சாட்டியிருந்தார்.
ரொனால்டோவின் ரசிகர்களில் கணிசாமானவர்கள் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் ஆதரவாளர்கள் என்பதால் இந்த நேர்காணல் அவரது என்.எப்.டி கலெக்ஷனை பாதிக்குமா எனத்தெரியவில்லை. இது தொடர்பாக டிகிரிப்டிங் ஸ்டோரி, இந்த நேர்காணல் என்.எப்.டி அறிமுகத்தை பாதிக்குமா என்பது தொடர்பாக Binance நிறுவனத்தின் பதிலை எதிர்பார்க்கிறது.
ரொனால்டோ தருணங்கள்
இந்த என்.எப்.டி கலெக்ஷன் நான்கு கட்டங்களில் ஏழு அனிமேஷன் வடிவங்களைக் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஒவ்வொரு என்.எப்.டியும், ரொனோல்டோவின் அரிய தருணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். ஒரு சில அரிய என்.எப்.டிகள் ரொனால்டோவின் தனிப்பட்ட செய்திகளை, கையெழுத்தை கொண்டிருக்கும்.
இந்த ஆண்டு துவக்கத்தில் Binance ஒப்பந்தத்தில் கையெழுத்திட போது, ரொனால்டோ ரசிகர்களுடனான உறவு முக்கியம் எனக் கூறியிருந்தார்.
"இந்த என்.எப்.டி மூலம் நிகரில்லாத அனுபவத்தை உருவாக்குவதில் அங்கம் வகிக்க விரும்புகிறேன். என் ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்,” என ரொனோல்டோ கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில்: ரிஷப் மன்சூர் | தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan