சரிவை நோக்கி பிட்காயின் விலை: கிரிப்டோகரன்சியின் நிலவரம் என்ன தெரியுமா?
இன்று காலை முதலே பிட்காயின் உள்ளிட்ட பிற காயின்கள் அனைத்துமே சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று காலை முதலே பிட்காயின் உள்ளிட்ட பிற காயின்கள் அனைத்துமே சரிவை நோக்கி நகர்ந்து வருகிறது.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்து வரும் இதே காலக்கட்டத்தில் மற்றொருபுறம் பிட்காயின், கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சிகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. கடந்த சில மாதங்களாகவே பிட்காயினின் மதிப்பு கடுமையாக சரிந்து வருவது முதலீட்டாளர்களை கவலை அடையச் செய்துள்ளது. பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் காரணமாக பிட்காயினின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயினின் விலை இன்று ஒரே நாளில் 0.61 சதவீதம் சரிந்து 30,317 டாலராக உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிரிப்டோகரன்சியான எதிரியம் (Ethereum) 0.60 சதவீதம் குறைந்து $1,798.75 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.
இன் இணை நிறுவனர் மற்றும் CEO எடுல் படேல் கூறுகையில்,
"பிட்காயின் மதிப்பு 30,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மாறுவதைக் காணலாம் மற்றும் புதன்கிழமை US $31,536க்கு மேல் ஊசலாடிய பிறகு கிட்டத்தட்ட 3 சதவிகிதம் குறைந்துள்ளது. பிட்காயின் தற்போது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 34 சதவிகிதம் மற்றும் அதன் எல்லா நேரத்திலும் உச்சம் தொட்டு வந்த நிலையில், தற்போது 56% குறைந்துள்ளது.”
மேலும், பிட்காயினில் முதலீடு செய்துள்ளவர்கள் அதனை 32 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் வைத்திருந்தால், ஜூன் மாத இறுதிக்குள் அவை 34 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
XRP போன்ற பிற கிரிப்டோகரன்சிகள் 0.54 சதவீதம், கார்டானோ 0.14 சதவீதம், சோலானா 0.82 சதவீதம், அவலாஞ்சி 1.47 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி