Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Byju's சர்ச்சை | ஆடிட்டர் விலகல்; வெளியேறிய 3வது போர்ட் உறுப்பினர் - பைஜுஸ் நிறுவனத்தில் நடப்பது என்ன?

இந்தியாவின் பிரபல எஜூடெக் நிறுவனமான ஸ்டார்ட்அப் பைஜூன் மூன்றாவது போர்டு உறுப்பினர் விலகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Byju's சர்ச்சை | ஆடிட்டர் விலகல்; வெளியேறிய 3வது போர்ட் உறுப்பினர் - பைஜுஸ் நிறுவனத்தில் நடப்பது என்ன?

Friday June 23, 2023 , 2 min Read

இந்தியாவின் பிரபல எஜூடெக் நிறுவனமான ஸ்டார்ட்அப் Byju's-இன் மூன்றாவது போர்டு உறுப்பினர் விலகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அதோடு, BYJU'S மற்றும் Aakash நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ ஆடிட் கணக்கு தாக்கல் விவகாரங்களில் தாமதப்படுத்திய காரணத்தால் அவர்களின் அதிகாரப்பூர்வ ஆடிட்டர் பதவி விலகி இருப்பது அறிக்கை வெளியாகியுள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம், வருவாய் பற்றாக்குறை, கடன் சிக்கல் என பைஜூஸ் நிறுவனம் அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பிக் ஃபோர் கணக்கியல் நிறுவனங்களில் ஒன்றான Deloitte அதிகாரப்பூர்வமாக பைஜூஸ் மற்றும் ஆகாஷின் சட்டப்பூர்வ ஆடிட்டர் பதவியில் இருந்து விலகியுள்ளது, எஜுடெக் நிறுவனமான BYJU'Sக்கு சிக்கலை அதிரிகரித்துள்ளது.

BYJU'S

திங்க் அண்ட் லேர்ன் பிரைவேட் லிமிடெட் Deloitte Haskins & Sells நிறுவனத்தை 2022ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு பைஜூஸ்-ன் சட்டப்பூர்வ தணிக்கையாளராக நியமித்திருந்தது. ஏற்கனவே பைஜுஸ் ரவிச்சந்திரன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், தற்போது ஆடிட்டிங் பிரச்சனை காரணமாக டெலாய்ட் நிறுவனமும் விலகியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Get connected to BYJU'Sys-connect
“மார்ச் 31, 2021ல் முடிவடைந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை திருத்தங்களின் தீர்மானம், நிதிநிலை அறிக்கைகளின் தணிக்கைத் தயார்நிலை மற்றும் மார்ச் 31, 2022ல் முடிவடைந்த ஆண்டிற்கான அடிப்படை புத்தகங்கள் மற்றும் பதிவுகள் குறித்து எங்களுக்கு எந்தத் ஆவணங்களும் கிடைக்கவில்லை. மேலும், இன்றுவரை எங்களால் தணிக்கையைத் தொடங்க முடியவில்லை,” என்று டெலாய்ட் தெரிவித்துள்ளது.

ஆனால், பைஜூஸ் நிறுவனம் இந்த செய்திகளை மறுத்துள்ளது. இருப்பினும், டெலாய்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தணிக்கைத் தரநிலைகளுக்கு ஏற்ப தணிக்கையைத் திட்டமிடுதல், வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் முடிப்பதற்கான எங்களுடைய திறனில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறோம்,” என டெலாய்ட் அறிவித்துள்ளது.

2022ம் ஆண்டு ஏப்ரலில், நிதி சம்பந்தமான பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அஜய் கோயல் தலைமை நிதி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், கொரோனாவால் வளர்ந்த எஜுடெக் நிறுவனமான பைஜூஸ் 2021ம் ஆண்டு முதலே சரிவை சந்தித்து வருகிறது.

Get connected to BYJU'Sys-connect

FY21 இல், ரூ.4,564.38 கோடி இழப்பை அறிவித்தது. ஆனால், இது 2020ம் ஆண்டு பதிவான இழப்பான ரூ.305.5 கோடியை விட பல மடங்கு அதிகமாகும். அதே நேரத்தில், $1.2 பில்லியன் டேர்ம் லோன் B (TLB) தொடர்பாக அதன் கடனாளிகளுடனான சிக்கல்களும் பைஜூஸுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

பைஜுசின் நிர்வாகக் குழுவில் இப்போது தலைமை நிர்வாகி பைஜு ரவீந்திரன், அவரது மனைவி திவ்யா கோகுல்நாத் மற்றும் சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் மட்டுமே உள்ளனர்.

Get connected to BYJU'Sys-connect