யுவர்ஸ்டோரி-இன் Tech30 பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்கள் அழைப்பு!
உங்கள் ஆரம்ப நிலை ஸ்டார்ட் அப்பை அறிமுகம் செய்வதற்கான மேடையை எதிர்பார்த்திருக்கும் தொழில்முனைவோர் என்றால் இதோ உங்களுக்கான அருமையான வாய்ப்பு டெக் 30.
இந்தியாவின் நிகரில்லாத ஸ்டார்ட் அப் நிகழ்வான, யுவர்ஸ்டோரியின் ‘TechSparks 2022' 'டெக்ஸ்பார்க்ஸ் 2022', நவம்பர் 10 முதல் 12 வரை நேரடி நிகழ்வாக நடைபெற உள்ளது. மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்ட ஸ்டார்ட் அப்கள் தங்கள் கதையை உலகிற்கு சொல்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.
யுவர்ஸ்டோரியின் முன்னணி ஆண்டு நிகழ்வான டெக்ஸ்பார்க்ஸ், ஸ்டார்ட்-அப் பரப்பில் உள்ள எண்ணங்கள் மற்றும் திறமையாளர்களை ஒன்றாகக் கொண்டு வருகிறது. இந்த மூன்று நாட்கள் நிகழ்வில், தொழில்முனைவோர், முதலீடு செய்பவர்கள், அரசு அதிகாரிகள், மற்றும் முன்னணி பிரமுகர்கள் பங்கேற்று விவாதங்கள், கலந்துரையாடல்கள் மூலமாக தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள்.
இந்தியாவின் பிரகாசமுள்ள, மாற்றத்தை ஏற்படுத்தவல்ல 30 ஸ்டார்ட் அப்களை தேர்வு செய்து வழங்கும் யுவர்ஸ்டோரியின் டெக் -30 இந்த நிகழ்வின் சிறப்பம்சாக அமைகிறது.
டெக் 30 ஏன்?
கடந்த 10 ஆண்டுகளில், Tech 30 பட்டியலில் இடம்பெற்றுள்ள 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், பெரும் வளர்ச்சிப் பாதையில் சென்றுள்ளன. இவற்றில் 108 நிறுவனங்கள் உலகளவில் விரிவாக்கம் செய்து, 2 பில்லியன் டாலருக்கு மேல் மூலதனம் திரட்டியுள்ளன. 23 நகரங்களில் 31,000 க்கு மேல் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
இந்தப் பட்டியலில் இடம் பெற்ற ஸ்டார்ட் அப்கள் தங்கள் பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி முன்னணி நிறுவனங்களாகவும் உருவாகியுள்ளன. டெக்30-இல் தேர்வாகி பின்னர், அவர்களின் அற்புதமான செயல்பாட்டால் வளர்ச்சி அடைந்த InnovAccer, Freshworks, Chargebee, போன்ற ஸ்டார்ட்-அப் கள் யூனிகார்ன்களாக உயர்ந்துள்ளதும் இதில் அடக்கம். இந்நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட் அப் சூழல் மற்றும் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
Sequoia, Blume, Jio Gennext, Accel, YCombinator உள்ளிட்ட 430 முன்னணி முதலீட்டாளர்கள் டெக் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஆதரிக்கும் நிலையில், இவை மொத்தமாக 7 பில்லியன் டாலருக்கு மேல், முதலீட்டு மதிப்பை கொண்டுள்ளன.
2020 மற்றும் 2021ல், பெரும்பாலான டெக் 30 ஸ்டார்ட் அப்கள் பெருந்தொற்றுக்கு மத்தியில், உருவாகி நெருக்கடியில் புதுமையாக்கம் பிறப்பதை உணர்த்தின.
இந்தப் பட்டியலில் இடம் பெறும் தகுதி உங்கள் ஸ்டார்ட் அப்பிற்கு இருக்கிறது என நினைத்தால் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிக்கவும்.
டெக் 30 – 2022 பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 20, 2022.
Edited by Induja Raghunathan