Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

சோனு சூட்; ரத்தன் டாடா மற்றும் பலர்... கொரோனா காலத்தில் உதவி செய்து வழிகாட்டிய பிரபலங்கள்!

தொழிலதிபர் ரத்தன் டாடா முதல், ஷாருக் கான், சோனு சூட், உள்ளிட்ட பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு மத்தியில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னுதாரணமாக திகழ்கின்றனர்.

சோனு சூட்; ரத்தன் டாடா மற்றும் பலர்... கொரோனா காலத்தில் உதவி செய்து வழிகாட்டிய பிரபலங்கள்!

Thursday March 04, 2021 , 2 min Read

கொரோனா பாதிப்பு நடுவே, பல பிரலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வந்தனர். திடீர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் உள்ளிட்டவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள்.


பெரும்பாலானோர் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்திய நிலையில், ஏழை மக்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்குக் கூட திண்டாடும் நிலை உண்டானது. இந்த இக்கட்டான நிலையில் தான், தொண்டு நிறுவனங்களும், பிரபலங்களும் பலவிதமாக உதவி செய்தனர்.


ஸ்வ்ரா பாஸ்கர், ஷாருக் கான், மற்றும் தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் இதில் முன்னிலையில் இருந்தனர்.

டாடா

சோனு சூட்

திரைப்படங்களில் வில்லனாக வலம் வரும் சோனு சூட்டை நடிகர், மனிதநேயம் மிக்கவர் மற்றும் நாயகன் என வர்ணிப்பதே பொருத்தமாக இருக்கும். கொரொனா தொற்று பரவத் துவங்கியது முதல், இவர் ஏழைகளுக்கு உதவுவதில் தீவிரம் காட்டிய நிஜ வாழ்வில் நாயகனானார்.

சொனு சோட்

பொதுமுடக்க காலத்தில் இவர், பாதிகப்பட்ட மக்களுக்கு உணவு அளித்தார். அதன் பிறகு, பிரவாசி யோஜ்கார் மூலம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை ஏற்பாடு செய்தார்.

அதோடு நிற்கவில்லை. ஏழை சிறார்கள் கல்வியை தொடரும் வகையில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்களை வழங்கினார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்கள் தாயகம் திரும்பவும் உதவினார்.

விகாஸ் கண்னா

நட்சத்திர சமையல் கலைஞரான விகாஸ் கண்ணா, பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாயகனாக விளங்கினார். அவது ஃபீட் இந்தியா இயக்கம் மூலம், நியூயார்க்கில் இருந்தபடி ஏழைகளுக்கு உணவு அளிக்க ஏற்பாடு செய்தார்.

விகாஷ்

2020 ஜூன் மாத வாக்கில் அவரது குழுவினர், இந்தியாவின் 125 நகரங்களில் பத்து மில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்கியிருந்தனர். மேலும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் முகக்கவசங்களையும் வழங்கினர்.

ஸ்வரா பாஸ்கர்

நடிகை ஸ்வரா பாஸ்கர், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல உதவி செய்தார். நடிகர் சோனு சூட் செயலால் ஊக்கம் பெற்ற ஸ்வரா, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான போக்குவரத்தை ஏற்பாடு செய்ததோடு, உணவு போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்தார்.

சுவரா

சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள் தொடர்பான தரவுகளை திரட்டு, அவர்களுக்கு உதவி செய்தார். அவர்களுக்கான பஸ் மற்றும் ரெயில் டிக்கெட் கட்டணத்தை வழங்கினார். தினக்கூலி தொழிலாளர்கள் காலணிகள் பெறவும் வழி செய்தார்.

ஷாருக் கான்

நடிகர் ஷாருக் கான், சத்திஷ்கர் மாநிலத்தில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு 2,000 பாதுகாப்புக் கவசங்களையும், கேரளாவில் உள்ள சுகாரதாரப் பணியாளர்களுக்கு 20,000 N95 முகக்கவசங்களையும் வழங்கினார்.


இறந்த தாயை தட்டி எழுப்ப முயன்ற குழந்தையின் எதிர்காலத்திற்கு வழி செய்தார். அவரது அறக்கட்டளை மூலம் மேலும் பல உதவிகளை செய்து வருகிறார்.

டாடா

ரத்தன் டாடா

டாடா அறக்கட்டளை பலவித நன்கொடை செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் சத்தமே இல்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.


தனது வயதையும் பொருட்படுத்தாமல், புனேவில் நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் ஊழியரை நேரில் பார்த்து நலன் விசாரித்தார். கடந்த ஆண்டு டாடா அறக்கட்டளை கொரோனா கால பணிகளுக்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கியது.


ஆங்கிலத்தில்; அஞ்சு ஆன் மேத்யூ | தமிழில்-சைபர்சிம்மன்