Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

நிவர் புயல் சமயத்தில் 3000+ பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்கிய ஸ்ரீனி சுவாமிநாதன்!

ஸ்ரீனி சுவாமிநாதன் கொரோனா பெருந்தொற்று, நிவர் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியுள்ளார்.

நிவர் புயல் சமயத்தில் 3000+ பேருக்கு உணவுப் பொட்டலம் வழங்கிய ஸ்ரீனி சுவாமிநாதன்!

Thursday December 10, 2020 , 2 min Read

இயற்கை பேரிடர், கொடிய பெருந்தொற்று நோய் தாக்கம் போன்றவை மனிதர்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிபோட்டு பேரழிவை ஒருபுறம் ஏற்படுத்தினாலும் சக மனிதர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து உதவிக்கரம் நீட்டவேண்டும் என்கிற நல்லெண்ணத்தையும் மற்றொருபுறம் வளர்த்தெடுக்கிறது.


ஸ்ரீனி சுவாமிநாதன் மாரத்தான் ரன்னர். இவர் கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு உதவியுள்ளார்.


கடும் வெயிலில் பசி தாகத்துடன் நடந்து சென்றவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளார் ஸ்ரீனி.

1

ஆரம்பத்தில் தன்னிடம் இருந்த பணத்தைக் கொண்டு தேவையானப் பொருட்களை வாங்கிக் கொடுத்தார். ஒருகட்டத்தில் தேவை அதிகம் இருப்பதை உணர்ந்தார்.


ஸ்ரீனி தனது வீட்டிற்கு அருகில் இருந்த சப்பாத்தி கடை ஒன்றை அணுகி சப்பாத்திகளைத் தயாரித்து பாக்கெட் போட்டு தருமாறு கேட்டுள்ளார். இரண்டு நாட்களில் 3,000 பாக்கெட்டுகள் தயாரானது. தனியாக அனைத்தையும் விநியோகிக்க முடியாது என்பதால் சமூக வலைதளங்களின் பகிர்ந்துகொண்டார். தன்னார்வலப் பணிகளில் பலர் இணைந்து கொண்டனர்.

இப்படி தேவையிருப்போர்களையும் உதவ விருப்பமுள்ளவர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக ஸ்ரீனி செயல்படுகிறார்.

இதேபோல் சமீபத்திய நிவர் புயலால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. வேளச்சேரி, சைதாப்பேட்டை, ராம் நகர், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு ஆளானார்கள்.


நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்புவோர் ஸ்ரீனியைத் தொடர்பு கொண்டனர். இவர் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் விற்பனையாளர்களுடன் நன்கொடையாளார்களை நேரடியாக இணைத்துள்ளார்.

“நன்கொடை கொடுக்க விரும்புபவர்கள் என்னைத் தொடர்புகொண்டார்கள். நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் நம்பகமான விற்பனையாளர்கள் குறித்தும் அவர்களிடம் தெரிவிப்பேன். நன்கொடை வழங்குபவர்கள் நேரடியாக விற்பனையாளர்களின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்திவிடுவார்கள்,” என்கிறார் ஸ்ரீனி.

நிவாரண முகாம்களில் இருப்பவர்களின் தேவைகளையும் கள நிலவரத்தையும் முழுமையாகத் தெரிந்துகொண்டு அதன் அடிப்படையில் சரியான தொகை விற்பனையாளர்களைச் சென்று சேர்வதை ஸ்ரீனி உறுதி செய்துள்ளார்.


இதுபோன்ற இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவி கிடைக்க நன்கொடையாளர்களைக் கண்டறிந்து இருதரப்பினரையும் இணைப்பது அவசியமாகிறது. இந்த உன்னத பணியை ஸ்ரீனி மேற்கொண்டு வருகிறார்.


கட்டுரை: THINK CHANGE INDIA | தகவல், படங்கள் உதவி: தி பெட்டர் இந்தியா

Background Image