சென்னை விவசாய நுட்ப நிறுவனம் Aqgromalin 5.25 மில்லியன் டாலர் நிதி உயர்த்தியது!
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு சூழலுக்கான வேளாண் தொழில்நுட்ப மேடையான Aqgromalin ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக 5.25 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.
கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு சூழலுக்கான வேளாண் தொழில்நுட்ப மேடையான அக்ரோமலின் (Aqgromalin) ஏ சுற்றுக்கு முந்தைய நிதியாக 5.25 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. இந்தச் சுற்றில், செக்கோயா கேபிட்டல் இந்தியாவின் சர்ஜ் அன்ட் வென்ச்சர் பன்ட்ஸ், ஆம்னிவோர் பார்ட்னர்ஸ் இந்தியா, ஜெபர் பீக்காக் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன.
விவசாயிகள், கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பில் விரிவாக்கம் செய்து கொள்ள உதவும் முழு ஸ்டாக் அளவிலான வேளாண் தொழில்நுட்ப மேடையை ’அக்ரோமலின்’ (Aqgromalin) உருவாக்கி வருகிறது.
சென்னையை தலைமையகமாகக் கொண்ட இந்த ஸ்டார்ட் அப் தரவுகள் சார்ந்த, பின் தொடரக்கூடிய, விநியோகச் சங்கிலி வசதியை, விவசாயிகள், இறைச்சி விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு, கோழி உணவு, கடல் உணவு மற்றும் கால்நடை துறை தேவைகளுக்காக வழங்குகிறது.
கடந்த ஆறு மாதங்களில் 10 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும், 3,00, 000 லட்சம் விவசாயிகள், சிறு தொழில்முனைவோருக்கு மேல் இந்த மேடையில் இணைந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு விவசாயிகள் தங்கள் தொழிலுக்கு தேவையான தரமான உள்ளீடு பொருட்களை குறித்த நேரத்தில் தருவிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அதே நேரத்தில் இறைச்சை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்களும் தரமான விலங்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதன் காரணமாக மொத்த விநியோக சங்கிலியிலும் பிரச்சனை உண்டாகிறது.
இந்த சிக்கலுக்குத் தீர்வாக அக்ரோமலின் நிறுவனம், உணவு உற்பத்தி, விற்பனடியாளர் சூழல்களை ஒருங்கிணைக்கும் வகையில் தனது தொழில்நுட்ப மேடையான, AQAI – ஐ உருவாக்கியுள்ளது. இந்த மேடை விவசாயிகளுக்கு தரமான பொருட்கள் கிடைக்கச்செய்வதோடு, விற்பனையாளர்கள் தரப்பிலான விநியோக சீராக்கத்திற்கும் வழி செய்கிறது.
பொருட்களை முழுவதும் பின் தொடரும் வசதியையும் அளிக்கிறது. இந்நிறுவனம் 2020 அக்டோபரில், சென்னையில் பரணி சி.எல், பிரசன்னா மனோகரன் ஆகியோரால் துவக்கப்பட்டது.
“கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பு இந்திய விவசாய பரப்பில் மிகவும் பிளவு பட்ட துறைகளாக இருக்கின்றன. தரமான பொருட்களை பெறுவதில் விவசாயிகளுக்கு உள்ள சிக்கலை தீர்க்கும் வகையிலான சேவையை மேலும் விரிவாக்கம் செய்து கொள்ள இந்த நிதி உதவும்,” என இணை நிறுவனர்கள் பரணி சி.எல், பிரசன்னா மனோகரன் தெரிவித்துள்ளனர்.