Flipkart-இன் உதவியால் லாக்டவுனிலும் ரூ.7.8 கோடி ஈட்டிய சென்னை ஆடை நிறுவனம்!
ஆடைகள் பிராண்டான ரேயா, இ=காமர்ஸ் மேடையான பிளிப்கார்ட் வீச்சு மற்றும் ஆதரவால் நன்கறியப்பட்ட ஆன்லைன் பிராண்டாக வளர்ந்திருகிறது.
கடந்த ஆண்டு, கொரோனா சூழலில் உண்டான பொதுமுடக்கம் மற்றும் செயல்பாடுகள் ஏற்ற இறக்கம் போன்ற சவால்களுக்கு மத்தியில், ரேயா பிராண்டின் ஆண்டு வருவாய் ரூ.7.8 கோடியை தொட்டது.
கொரோனா முதல் அலையை எனது வர்த்தகம் தாக்குப்பிடித்து நின்றதற்கான காரணங்களில் ஒன்று, ஃபிள்ப்கார்ட் இ-காமர்ஸ் தளம் அளித்த ஆதரவு தான், என்கிறார் சென்னையில் தனது வேர்களை கொண்ட ஆடைகள் பிராண்டான ரேயா (Reya) நிறுவனரான பிரதாப் பாபு.
2013ல் துவக்கப்பட்ட ரேயா, மேகாலயா, காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களை சென்றடைய ஃபிளிப்கார்ட் மேடையை பயன்படுத்தி வருகிறது.
“நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, ஒரேவிதமான செலவு மற்றும் செயல்திறனோடு சென்றடைய முடிகிறது,” என்கிறார் பிரதாப்.
ஃபிளிப்கார்ட்டின் லாஜிஸ்டிக்ஸ், வேர்ஹவுசிங் ஆதரவு மற்றும் வீச்சு இதற்குக் காரணமாக அமைகிறது. ரேயா நிறுவனம், வாடிக்கையாளர்கள் அருகாமையில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறைவேற்று மையங்களில் தனது தயாரிப்புகளை வைக்கிறது. அங்கிருந்து அவை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
2019-20 ல் ரேயா, ரூ.6.6 கோடி வருவாய் ஈட்டியது.
இவர்கள் பல வகையான ஆண்கள் மற்றும் பெண்கள் ஆடைகளை ஃபிளிப்கார்டில் விற்பனை செய்கின்றனர். இவை திருப்பூரில் உள்ள சொந்த ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன.
“நாங்கள் மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்து, ஆடைகளாக தைக்கிறோம். இதே போன்ற தரம் கொண்ட துணிகளை ஆடைகளை அளிக்கும் மற்ற பிராண்ட்கள் இருந்தாலும் அவை, 40 சதவீதம் அதிக விலை கொண்டுள்ளன. எங்கள் சொந்தத் தயாரிப்பு என்பதால், தரமான துணி மற்றும் குறைந்த விலை சாதகமான அம்சங்களாக அமைகின்றன,” என்கிறார் பிரதாப்.
இருப்பினும் பெண்கள் ஆடைகளுக்கான சொந்த உற்பத்தி வசதியை ரேயா பெற்றிருக்கவில்லை. இவை சூரத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தருவிக்கப்படுகின்றன.
நாங்கள் தரும் வடிவமைப்பில் தான் இவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம் பெண்கள் ஆடைகளில் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது, என்கிறார் பிரதாப்.
வளர்ச்சிப்பாதை
2013ல் நிறுவனத்தை துவக்கிய பிரதாப், ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் சந்தை பரப்பு மற்றும் வீச்சு அதிகரித்து வந்த அதே நேரத்தில், ஆர்டர்கள் நிறைவேற்றம் ஆறு நாட்களில் இருந்து அதே நாள் டெலிவரி வரை வந்ததையும் தெளிவாக உணர்ந்திருந்தார்.
“ஆயிரக்கணக்கான அஞ்சலக பகுதிகளுக்கு ஃபிளிப்கார்ட் தொடர்ந்து விரிவாக்கம் செய்த நிலையில், எங்கள் ஆர்டர்களும் வளர்ச்சி கண்டது. புதிய பொருட்கள் இந்த மேடையில் சேர்க்கப்பட்டது மேலும் வாடிக்கையாளர்களை ஈர்த்தது. இதன் தாக்கம் எங்களுக்கும் பயன் அளித்தது,” என்கிறார் பிரதாப்.
சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்களின் வளர்ச்சிக்கு உதவும் ஃபிளிப்கார்ட்டின் ஆற்றலை பிரதாப் தீவிரமாக நம்புகிறார்.
“பிளிப்கார்ட் உடன் தொடர் வளர்ச்சி சாத்தியமாகிறது. எனது அனுபவத்தில் ஃபிளிப்கார்ட் போல, நிலையான வளர்ச்சி வாய்ப்பு அளிக்கும் மேடையை கண்டதில்ல,” என்கிறார்.
இந்த மேடையின் வீச்சு, டெலிவரி மற்றும் பொருட்களின் தரம் மட்டும் வெற்றிக்குக் காரணம் இல்லை. ஃபிளிப்கார்ட் வழங்கும், டேட்டா ஆய்வு மற்றும் வழிகாட்டுதல் முக்கிய அம்சமாக அமைவதாக பிரதாப் கூறுகிறார்.
“ஃபிளிப்கார்ட்டிடம் இருந்து கிடைத்த விளம்பர பலன், குறைவான ஆர்டர்கள் பெற்ற பொருட்களுக்கு நல்ல வாய்ப்பை பெற்றுத்தந்தது. பொருட்கள் விளம்பரப் பட்டியலையும் உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டோம். இதுவும் வர்த்தகத்திற்கு உதவியது”.
இதன் விளைவாக இன்று, பிளிப்கார்ட்டில் அதிகம் விற்பனையாகும் பிராண்ட்களில் ஒன்றாக ரேயா விளங்குகிறது.
“இந்த மேடையில் எங்கள் செயல்பாட்டிற்காக கடந்த ஆண்டுகளில் ஃபிளிப்கார்ட்டிடம் இருந்து பல விருதுகளை வென்றிருக்கிறோம். சென்னையில் சிறப்பாக செயல்படும் பிராண்ட்களில் ஒன்றாக திகழ்கிறோம்,” என்கிறார் பிரதாப்.
“ஒவ்வொரு ஆண்டும் எங்கள் விற்பனை சாதனையை நாங்களே முறியடிக்கிறோம். வாடிக்கையாளர் பரப்பு, லாஜிஸ்டிகஸ் மற்றும் வர்த்தக வழிகாட்டுதல் மூலம் எங்கள் வர்த்தகத்தில் கவனம் செலுத்த ஃபிளிப்கார்ட் உதவுகிறடு”.
சிறிய ஆடைத்தயாரிப்பு நிறுவனமாக துவங்கி ஒரு பிராண்டாக ரேயா உருவாகியுள்ளது. இதே போல பல வெற்றிக்கதைகள் உள்ளன. ஃபிளிப்கார்ட்டில் உள்ள பல வெற்றிகரமான பிராண்ட்கள் சிறிய அளவில் துவங்கியவை தான். “பிளிப்கார்ட்டில் எங்கள் பயணம் ஒற்றை இலக்க ஆர்டர்களுடன் துவங்கியது. பல மாதங்கள் உழைப்பு மற்றும் பொருட்கள் விரிவாக்கத்திற்கு பின் இது மாறியது,“ என்கிறார் பிரதாப்.
தரத்தில் கவனம்
ஆன்லைனில் மட்டும் விற்பனையாகும் பிராண்ட் என்ற முறையில், தயாரிப்பின் தரமே முக்கியமாகிறது. “வழக்கமான கடைகளில் நேரில் நிற்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். ஆனால், ஆன்லைன் ஸ்டோரில் ஒரு தயாரிப்பு தனது சொந்த பலத்தில் நிற்க வேண்டும்,” என்கிறார் பிரதாப்.
“ஃபிளிப்கார்ட் மற்ற விஷயங்களை கவனித்துக்கொள்வதால், நீங்கள் ஒரு விற்பனையாளராக தயாரிப்பில் கவனம் செலுத்தலாம்,” என்கிறார் பிரதாப்.
தொழில்முனைவில் ஈடுபடுவது அல்லது ஃபிளிப்கார்ட்டில் விற்பனை செய்வது என்பது பிரதாப் திட்டமிட்டு மேற்கொண்ட முடிவு அல்ல. கல்லூரி முடித்த உடன் அவர் காப்பீடு நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார்.
துவக்கத்தில் இது பயன் தந்தாலும், அதிக வளர்ச்சி வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்து கொண்டார். மேலும் குடும்பத்துடன் சென்னையில் இருக்க விரும்பினார். இதன் காரணமாகவே அவர் தொழில்முனைவை தேர்வு செய்தார்.
“தமிழ்நாடு வலுவான உற்பத்தி வசதியை பெற்றுள்ளது. குறிப்பாக ஆடைகள் உற்பத்தி நன்றாக உள்ளது. நான் ஏற்றுமதியில் துவங்கினேன். எனினும், ஃபிளிப்கார்ட் பற்றி அறிந்ததும் இந்திய சந்தையில் உள்ள வாய்ப்புகளை கண்டறிய முயற்சித்தேன். இதற்கு நல்ல பலன் கிடைத்திருப்பது மகிழ்ச்சி,” என்கிறார்.
தமிழில்: சைபர் சிம்மன்