கை தேர்ந்த வீட்டு உணவை வழங்கும் சென்னை நிறுவனம்!

By Mahmoodha Nowshin|4th Sep 2017
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Clap Icon0 claps
  • +0
    Clap Icon
Share on
close
Share on
close

வேலை தேடியோ அல்லது படிப்பிற்காக வீட்டையும் ஊரையும் விட்டு வெளியே தங்கும் அனைவரின் ஒரே ஏக்கம் வீட்டு உணவு. வீட்டில் சாப்பிடுவது போல ருசியாகவும் ஆரோக்கியமாகவும் மற்ற இடத்தில் உணவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்த குறையை தீர்க்கவே fooddoo.com உருவானது. வீட்டு உணவை ஒன்று சேர்த்து மக்களுக்கு அளிக்கிறது இந்நிறுவனம்.

fooddoo.com-ல் இல்லத்தரசிகள் பலர் இணைக்கப் பட்டுள்ளனர். இதில் அவர்கள் வீட்டில் தயாரிக்கும் உணவை கொஞ்சம் கூடுதலாக சமைத்து fooddoo.com மூலம் பட்டியலிட்டால் போதும். இந்த இணையத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அந்த உணவை தேர்வு செய்து தங்கள் இடத்திற்கு வரவழைத்து ஆரோக்கியமான ருசியான வீட்டு உணவை சுவைக்கலாம்.

நிறுவனர்கள் சண்முக சுந்தரம் மற்றும் பொன்னுவேல்
நிறுவனர்கள் சண்முக சுந்தரம் மற்றும் பொன்னுவேல்

இந்த புதிய வரவேற்கத்தக்க தொழில் சண்முக சுந்தரம் மற்றும் பொன்னுவேல் ஆகிய இரண்டு நண்பர்களால் தொடங்கப்பட்டது. இருவரும் ஊடக விற்பனை பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருவருக்கும் உணவகம் வைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. இருவருக்கும் ஒரே மாதரியான எண்ண ஓட்டம் இருந்ததால் இணைந்தே தொழில் தொடங்க முடிவு செய்தனர்.

”ஆரம்பத்தில் 4 இல்லத்தரிசகளோடு இந்த நிறுவனத்தை தொடங்கினோம். தற்பொழுது 130 இல்லத்தரசிகள் எங்களோடு இணைந்துள்ளார்கள்,” என்கிறார் பொன்னுவேல்.

தொடக்கத்தில் தங்கள் கையில் இருந்து 10 லட்ச முதலீட்டை போட்டே இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளனர் இந்த நண்பர்கள். தொழில் தொடங்கி இரண்டு வருடம் ஆன நிலையில் தற்பொழுதே லாபம் பார்க்கத் தொடங்கியுள்ளனர். மாதம் 4 லட்சம் வரை வருவாய் ஈட்டுகின்றனர்.

“பெரிய நிறுவனங்களுக்கு நேராக சென்று விளம்பரம் செய்தோம். ஐ.டி. பார்க் முன்பு வீட்டு உணவு வழங்குகிறோம் என்றும், உணவு மாதிரிகளை வைத்தும் விளம்பரம் செய்தோம். அதன் பின் 10 வாடிக்கையாளர்கள் முதலில் எங்களுடன் இணைந்தார்கள். படி படியாக வளர்ந்து வெகு நாட்கள் 100 வாடிக்கையாளர்களே இருந்தனர். தற்பொழுது முன்னூறு பேறை அடைந்துள்ளோம்.” 

முதலில் இணையதளத்தில் ஆரம்பித்து, தற்போது ஆண்டராய்டு ஆப் ஆக அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஐ-ஸ்டோர்க்கும் வர உள்ளது. இப்பொழுது சென்னை பகுதிக்கு மட்டும் உள்ள இந்த அமைப்பை விரைவில் பெங்களூர் மற்றும் கோவைக்கும் எடுத்துச் செல்ல உள்ளனர். 

image
image
“எங்களது நோக்கம் கேரளா, தமிழ்நாடு என்று எல்லா மாநிலத்தைச் சேர்ந்த உணவு வகைகளை வழுங்குவது தான். வெவ்வேறு பின்னணியில் இருந்து வரும் இல்லத்தரசிகள் எங்களுடன் இணைந்தால் இது சாத்தியமாகும்,” என்றார் சண்முக சுந்தரம்.
image
image

காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவை மட்டும் அளிக்காமல் சிற்றுண்டி, வடாம், சாம்பார் பொடி போன்றவற்றையும் foodoo.com மூலம் இல்லத்தரசிகள் விற்க வழி செய்துள்ளனர். மேலும் ’பேலியோ’ என்கிற தனித்துவமான டயட் உணவையும் வழங்குகின்றனர்.

foodoo.com குழு
foodoo.com குழு

வாடிக்கையாளர்களை விட சமையல் செய்து தர 600-க்கும் மேற்பட்ட இல்லத்தரசிகள் விருப்பம் காட்டியுள்ளனர். அதில் தேர்வு செய்து தற்பொழுது 130 பேர் இணைக்கப் பட்டுள்ளனர். இலத்தரசிகளை இணைக்கும் முன்பு தங்களது தரக் கட்டுப்பாட்டுக் குழுவை அனுப்பி அவர்களது சமையலறை மற்றும் உணவை சோதனையிட்டு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (Food Safety and Standards Authority of India) சான்றிதழ் வாங்கிக் கொடுத்து, அதன் பின்னரே இணைக்கின்றனர்.

“தொழில் தொடங்கும் பொழுது எங்களது இலக்கு பேச்சுலர்ஸ் மற்றும் ஐ.டி.யில் இருப்பவர்களாகத் தான் இருந்தது. ஆனால் எங்கள் வியப்பிற்கு முதியோர்கள் அதிகம் இணைந்துள்ளனர். அவர்கள் ஆப் மூலம் அல்லாமல் நேரடியாக எங்களை தொடர்பு கொண்டு தங்கள் ஆர்டரை செய்கின்றனர்,” என்றார்கள்.
image
image

வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள் தங்களுக்குத் தேவையான மதிய உணவை காலையிலே ஆர்டர் செய்து விடுகின்றனர். அதிலும் உப்பில்லாமல் சாப்பாடு, வெறும் கொழம்பு என்று தனித்துவமாக வழங்குகின்றனர். இதுவே fooddoo.com இன் தனிப்பட்ட விற்பனை புள்ளி ஆகும்.

இல்லத்தரசிகளே இவர்களது அறிவுரையை ஏற்று விலையை நிர்ணயம் செய்கின்றனர், அதற்கு மேல் fooddoo.com செயல்பாட்டுக்கான ஒரு தொகையை சேர்கின்றனர்.

மேலும் தற்பொழுது பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு உணவளித்து வருகின்றனர். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவக உணவு திருப்தி அளிக்காததால் இவர்களிடம் வாங்கிக்கொள்வதாக தெரிவித்தார் பொன்னுவேல்.

தொடக்கத்தில் முறையான விளம்பரம் இல்லாமல் சறுக்கினாலும் தற்போது fooddoo.com மீது வெளிச்சம் படத் தொடங்கியுள்ளது. வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவு சிறந்த விலையில் கிடைத்தால் எவர் வேண்டாம் என்று கூறுவர். புதுமையான, மக்களுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதற்கு இவர்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டுஆகும். 

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding Course, where you also get a chance to pitch your business plan to top investors. Click here to know more.

எங்கள் வார நியூஸ்லெட்டர் பெற