குடும்ப காரை விற்று விவசாய உற்பத்தி நிறுவனத்தை துவக்கிய ஒடிசா பெண்!
ஒடிசாவின் கந்தமால் மாவடத்தில் உள்ள சிறிய கிராமத்தைச் சேர்ந்த ரேஷ்மார்தேவி மல்லிக், கிரீன்பிளாக் ஃபார்மர் புரட்யூசர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை அதிகாரியாக இருக்கிறார். தொண்டு நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருந்ததில் இருந்து நிறுவன தலைவராக மாறிய அவரது கதை!
குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காக சூப்பர்வைசராக பணியாற்றிய ரேஷ்மாதேவி மல்லிக் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாலும் – ஒரு சிலவற்றுக்கு அவரது வாழ்க்கைத் துணையின் தேர்வு காரணம் - குடும்ப காரை விற்றுவிட்டு விவசாயிகள் உற்பத்தி நிறுவனத்தை துவக்கும் துணிவை பெற்றார்.
"பெருந்தொற்று காலத்தில் சிக்கல் அதிகமான நிலையில், நானும் வாழ்க்கைத்துணை ராஜேஷ் மல்லிக்கும் வியர்வை சிந்தி ’கிரீன்பிளாக் ஃபார்மர் புரட்யூசர்’ கம்பெனியை துவக்கினோம். எங்கள் கடின உழைப்பின் பலனாக முதல் ஆண்டே ரூ.50 லட்சம் விற்றுமுதல் கிடைத்தது. ஆனால், அதற்கு முன் நீண்ட போராட்டம் இருந்தது.”
"ராஜேஷை 2004ல் 12ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது சந்தித்தேன். ஹாஸ்டலில் என் சகோதரியை பார்க்க வருவார். நானும் அங்கு தான் படித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் வேறு மதம் என்பதால் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை. பெற்றோர்களை சம்மதிக்க வைக்க முடியாததால், நாங்கள் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசிக்கத்துவங்கினோம்.”
ஒடிஷாவின் பூரி மாவட்டத்தில் உள்ள ராஜேஷின் சொந்த ஊருக்கு சென்ற போது அவர்கள் கதவை சாத்தவில்லை என்றாலும், எங்களை வரவேற்கவும் இல்லை.
"நான் படிப்பை தொடர விரும்பினேன். ஆனால், வீட்டின் கடினமான சூழலால் சாத்தியம் ஆகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் நிலைமையை பொருத்துக் கொள்ள முடியாமல் நானும் ராஜேஷும், ஒரு வயது மகனோடு அவருக்கு சொந்தமான எஸ்.யு.வி வாகனத்தோடு வெளியேறினோம்.”
"நாங்கள் டாரிங்பாடிக்கு சென்றோம். இப்போது என் பெற்றோர் கோபம் குறைந்து எங்களை வீட்டில் அனுமதித்தனர். நல்ல வேளையாக எனக்கு தொண்டு நிறுவனம் ஒன்றில் ரூ.3,500 சம்பளத்திற்கு வேலை கிடைத்தது.”
"ராஜேஷ் தனது காரில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு சேவை அளித்து மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 ஈட்டினார்”.
"என் பெற்றோர் வீட்டில் தங்கியிருப்பது சங்கடம் அளித்தது. அங்கன்வாடியில் பணியாற்றிய அம்மாவின் சம்பளத்தில் தான், ஆறு பேர் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. விபத்து ஒன்றில் என் தந்தை நடமாட முடியாமல் ஆகியிருந்தார். ஆனால் எனக்கு வேறு வழியில்லை.”
2011ல், கேரளாவில் உள்ள பிரேம் ஆய்வு மையத்தில் ஒரு மாத பயிற்சிக்கு சென்றேன். விவசாயிகள், வேளாண் வல்லுனர்களுடன் உரையாடிய வாய்ப்பு சொந்தமாக ஏதேனும் செய்யத்தூண்டியது.
பயிற்சி முடித்து திரும்பியதும் சோதனை தாக்கியது. அலுவலக வேலையாக சென்றிருந்த போது விபத்து ஏற்பட்டது. இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்திருந்த நேரம் அது. நல்லவேளையாக குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.
ஆனால், மருத்துவ செலவுக்காக சொற்ப சேமிப்பு கரைந்தது. இதில் பெரும்பகுதியை ஆய்வு கழகம் ஏற்றுக்கொண்டது. ராஜேஷின் வருமானத்தை வைத்து சமாளித்தோம். அதன் பிறகு, எந்த பணியாளர்களும் இல்லாமல் நானும், ராஜேஷும் இரண்டு அறை கூரை வீட்டை அமைத்தோம். இப்போது அதை நான்கு அறையாக அமைத்திருக்கிறோம், என்றார்.
"நாங்கள் இருவருமே சொந்தமாக ஏதேனும் செய்ய விரும்பினோம். ஒரு நாள் அவரது வாகனத்தை ரூ.80 ஆயிரத்திற்கு விற்று கிரீன்பிளாக் ஃபார்மர் புரட்யூசர் கம்பெனியை 2021ல் அமைத்தோம்.”
10 விவசாயிகளுடன், 15 வேளாண் பொருள்களை கையாளத்துவங்கினோம். தவறான நேரத்தில் துவங்கியதால் நிறுவனம் வெற்றி பெறாது என குறைகூறினர். ஆனால், மிகுந்த மன உறுதியுடன் செயல்பட்டு, மோசமான சூழலை வெற்றியாக மாற்றினோம். அரசு உதவி இல்லாமல் தனியார் கடன் கொண்டே செயல்பட்டிருக்கிறோம்.
"இப்போது குழுவில் 100க்கும் மேல் விவசாயிகள் உள்ளனர். அரிசி, இஞ்சி. பூண்டு, காய்கறிகள் என 70க்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு 10 மாவட்டங்களில் இருந்து, 250 பொருட்களில் விரிவாக்கம் செய்து, 50,000 விவசாயிகளை இணைக்க விரும்புகிறோம்,” என்றனர்.
ஆங்கிலத்தில்: நீரஜ் ரஞ்சன் மிஸ்ரா | தமிழில்: சைபர் சிம்மன்
(வில்லேஜ் ஸ்கொயர் வழங்கும் கட்டுரை இது. கிராமப்புற இந்தியாவின் பெண்களை மையமாகக் கொண்ட வெற்றிக்கதைகளை வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடு)
20 வயதில் விதவை; விடாமல் விரட்டிய வறுமை: இயற்கை விவசாயத்தில் உஷாராணி வென்றது எப்படி?
Edited by Induja Raghunathan