Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

சினிமா, டிவி தொடர் போஸ்ட் புரொடக்‌ஷனில் என்னென்ன பணிகள் தொடர அனுமதி?

சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட தயாரிப்புக்குப்‌ பிந்தைய (post production) பணிகளை மட்டும்‌ 11.5.2020 முதல்‌ மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்‌ :

சினிமா, டிவி தொடர் போஸ்ட் புரொடக்‌ஷனில் என்னென்ன பணிகள் தொடர அனுமதி?

Saturday May 09, 2020 , 1 min Read

தமிழ்‌ திரைப்படத்‌ தயாரிப்பாளர்களும்‌, சின்னத்திரை தயாரிப்பாளர்களும்‌, கொரோனா ஊரடங்கால்‌ கடந்த 50 நாட்களாக எந்த பணியும்‌ நடக்காததால்‌ பலரின்‌ வாழ்வாதாரம்‌ கேள்விக்குறி ஆகி உள்ளதால்‌, இத்தருணத்தில்‌ தயாரிப்புக்குப்‌ பிந்தைய Post Production பணிகளைச் செய்வதற்காக மட்டும்‌ அனுமதி அளிக்க வேண்டும் ‌என்றும்‌ அரசிடம்‌ கோரிக்கை வைத்திருந்தனர்‌.

post production

file photo

மேற்கண்ட தயாரிப்பாளர்களின்‌ கோரிக்கையை‌ பரிசீலித்த தமிழக அரசு,‌ சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர் தயாரிக்கும் நிறுவனங்கள் கீழ்க்கண்ட தயாரிப்புக்குப்‌ பிந்தைய (post production) பணிகளை மட்டும்‌ 11.5.2020 முதல்‌ மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள்‌ :


1) படத்தொகுப்பு (Editing) (அதிகபட்சம்‌ 5 பேர்)

2) குரல்‌ பதிவு (Dubbing) (அதிகபட்சம்‌ 5 பேர் )

3) கம்ப்யூட்டர்‌ மற்றும்‌ வஷுவல்‌ கிராபிக்ஸ்‌ (VFX/CGI) (10 முதல்‌ 15 பேர்‌)

4) டி.ஐ. (DI) எனப்படும்‌ நிற கிரேடிங்‌ - (அதிகபட்சம்‌ 5 பேர்)

5) பின்னணி இசை (Re-Recording) - (அதிகபட்சம்‌ 5 பேர்‌)

6) ஒலிக்கலவை (Sound Design/Mixing) - (அதிகபட்சம்‌ 5 பேர்)


எனவே, Post Production பணிகளை மேற்கொள்ளும்‌ சம்மந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள்‌, இப்பணியில்‌ ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதிச் சீட்டுகளை பெற்று தந்து, அவாகள்‌ சமூக இடைவெளியுடனும்‌, முகக்கவசம்‌ மற்றும்‌ கிருமி நாசினி உபயோகித்தும்‌, மத்திய மாநில அரசுகள்‌ விதிக்கும்‌ அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றியும்‌ பணி செய்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.


சினிமா மற்றும் டிவி தொடர்கள் மார்ச் மாதம் 25ம் தேதி ஊரடங்கு அறிவித்ததன் காரணமாக பாதியிலேயே நின்று போனது. ஏற்கனவே எடுக்கப்பட்டு எடிட் செய்யப்பட்ட தொடர்கள் மட்டும் சில வாரங்கள் டிவியில் ஒளிப்பரப்பு ஆகின. ஆனால் சினிமாவை பொறுத்தவரை பல புதிய திரைப்படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன. திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில், பல தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.