வேளாண் கழிவுகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதாக கோவை ‘Buyofuel’ அறிவிப்பு!
மாற்று எரிபொருளுக்கான தேவை அதிகரித்து வருவதால் பசுமை எரிபொருள் உற்பத்திக்கான விவசாய கழிவுகளை நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்குகிறது.
உணவு உற்பத்தியாளர்களில் இருந்து எரிபொருள் தயாரிப்பாளராக மாறுவதன் மூலம் விவசாயிகள் அதிகாரம் பெற வழி செய்யும் பசுமை எரிபொருள் ஆன்லைன் சந்தையான கோவையைச் சேர்ந்த
பசுமை எரிபொருள் தயாரிப்புக்கான விவசாயக் கழிவுகளை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கிக் கொள்ள வழி செய்துள்ளது.தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், குஜராத், மகரார்ஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், நாட்டின் மற்ற பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய உள்ளது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் நிறுவனங்கள் மாற்று எரிபொருளுக்கு மாறிவருவதால், பசுமை எரிபொருளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், Buyofuel நிறுவனம், எரிபொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் இடையிலான பாலமாக விளங்குகிறது. இதன் மூலம் சப்ளை செயின் பிரச்சனைகளை சீராக்கி நிறுவனங்கள் பசுமை எரிபொருளை பயன்படுத்த வழி செய்கிறது.
இந்தியா ஆண்டுதோறும் 350 மில்லியன் டன் விவசாயக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இதன் மூலம், 18,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்வதோடு, விவசாய பயன்பாட்டிற்கான பசுமை உரத்தையும் தயாரிக்க முடியும். மாற்று எரிசக்த்திக்கான தேவை பல்வேறு துறைகளில் இருக்கிறது.
பசுமை எரிபொருளை வாங்கி, விற்பதற்கான பொதுவான மேடையாக திகழ்வதோடு, விவசாயிகள் தங்கள் வேளான் கழிவுகளை நேரடியாக விற்பனை செய்யவும் ஊக்குவிக்கிறது. இதன் மூலம் வணிக பலன் அளிப்பதோடு, தூய்மையான எரிசக்தியை நோக்கிய நாட்டின் பயணத்திலும் உதவ விரும்புகிறது.
”பருவ நிலை பாதிப்பை எதிர்கொள்வதில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே, நீடித்த வளர்ச்சி இலக்கில் அனைவரும் பங்கேற்பது அவசியம் ஆகிறது. விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து, நிறுவனங்கள் உயிரி எரிபொருளுக்கு மாற உதவுவதில் வேளான் நுட்ப நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதில், விவசாயிகள் வேளான் கழிவுகளை நேரடியாக விற்று லாபம் பெறுவதோடு, காற்று மாசு, உணவு வீணாவது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ள உதவுகிறது,” என்று Buyofuel நிறுவனர், சி.இ.ஓ கிஷன் கருணாகரன் கூறியுள்ளார்.
மரபான எரிபொருளுக்கு பதிலாக மாற்று எரிபொருளுக்கு மாறுவதில் வர்த்தக நிறுவனங்களுக்கும் பல்வேறு சாதகங்கள் இருப்பதால், Buyofuel விவசாயிகளிடம் இருந்து பலவகையான விவசாயக் கழிவுகளை நேரடியாக வாங்கி வருகிறது.
Edited by Induja Raghunathan